தாரா-3

1.1K 50 84
                                    

"தாராவின், கையை இழுத்துக் கொண்டு காலேஜ் கேன்ட்டினுள் நுழைந்தனர் மற்ற இருவரும்... "வினியிடம் இருந்த தன்னுடைய கையை, எவ்வளவு முயன்றும் அவளால் பிரிக்க முடியாமல் போகவும், வேறுவழியின்றி இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

தனக்கும்' தாராவுக்குமாக டிபனை வாங்கிக் கொண்டு வர, வினி அங்கிருந்து நகர்ந்து விட.. விஜியும் தாராவும் தனித்து இருந்தனர். விஜி எதையோ சொல்ல நினைப்பதும் பிறகு அமைதியுடன் இருப்பதை பார்த்த தாரா அவளிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

விஜி, என்ன அமைதியாக இருக்க... அதே நேரத்தில் அதிக சந்தோசமாக இருக்கிற மாதிரி தெரியுது .ஒரு வேலை அம்மனிக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிட்டா!

ச்சி போடி! என குழைவான குரலில் சொன்னவளை பார்த்தவள்..

ஹேய், அப்போ கன்பார்மா மேரேஜ் தானா இப்படி வெட்கப்படுற" என்று தாரா சொல்லவும்,

அப்படி எல்லாம் இல்லப்பா! ஆனால் கூடிய சீக்கிரம் நடக்கப்போகிறது எனக்கு இல்லை, என்னோட அண்ணனுக்கு என்று சந்தோசமாக சொல்லவும்...

ஓ" அப்படியா!

என்னடி, இப்படி அழுத்துக்கிற

பிறகு! உனக்கு மேரேஜ் என்றால் எனக்கு சந்தோசமாக இருக்கும் உன் அண்ணனுக்கு மேரேஜ்னு சொல்ற? அதை சொன்னேன். என்றவளின் பார்வை உணவுடன் வந்த வினியை பார்த்ததும், விஜியின் பேச்சை மறந்து போனவள் வினியிடம் திரும்பி...

என்னடி, டிபன் வாங்க இவ்வளவு நேரமா உனக்கு? தன் அருகே உணவுடன் வந்து நின்ற வினியை பார்த்து சொல்லவும்,

ஏன்டி சொல்ல மாட்ட? இவ்வளவு நேரமாக க்யூவில நின்று வாங்கினேன் பாரு!! இதுவும் சொல்லுவ, இதுக்கு மேலும் சொல்லுவடி நீ" என்று தாராவை பார்த்து சொன்னாள் வினி.

சரி சரி கொஞ்சம் தள்ளி உட்கார் காற்று வரட்டும் என்று மேலும் அவளை  வெறுப்பேற்ற

வினி பாவமாக முகத்தை தொங்கபோட்டு கொண்டாள் (இப்ப மட்டும் நீ ரியாக்ஷனை மாத்தல அவ சாப்பிடுற சாப்பாட்டுக்கு சட்னியாக மாறவேண்டியது தான்)

 சித்தாராWhere stories live. Discover now