அம்மா! பெரியம்மா! சீக்கிரமா வாங்க அப்பா பெரியப்பா வந்துட்டாங்க!! என்ற விஜியின் குரல் கேட்டு... வேகமாக வாசலுக்கு வந்தனர் ராஜியும் மாலாவும்,
அக்கா உதயாவை அழைச்சிட்டு வந்துட்டாங்க போலருக்கு என்ற மாலாவின் பேச்சை இடைவெட்டினாள் விஜி.
ஹலோ மம்மி! உதயாவை அழைக்கப் போனது யாரு என் ஆதி அண்ணா... அவர் போனா எந்த வேலையும் சக்சஸ் தான் என பெருமை பீற்றிக் கொண்டவளை பார்த்து முறைத்தார் மாலா.
சரி, நீங்க இரண்டு பேரும் நில்லுங்க! "நான் போய், ஆலம் கரைச்சி எடுத்துக்கிட்டு வரேன் எத்தனை வருடம் ஆச்சி, "உதயாவை" பார்த்து என அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டே உள்ளே நுழைந்திட...
ச்சே!! என்ன அக்கா இது, இவளை நம்ம வீட்டுக்கே அழைச்சிட்டு வந்துட்டாங்களா? அந்த ஆளு எப்படி இவங்களோட அனுப்பினான் என மாலா புலம்ப...
எனக்கும் அதான் தெரியலை மாலா!! அந்த தவமாணிக்கம் விடமாட்டானு நினைச்சேன், ஆனால் இவங்க அவளை கூடவே இழுத்துக்கிட்டு வருவாங்கன்னு நினைக்கல... என் ஆசை கனவு எல்லாமே போகப் போகுது.
அட விடுங்கக்கா! நம்மல மீறி என்ன நடந்துவிடும்... நம்ம வீட்டுக்கு வரவளை வீட்டு ஆளா இருந்தா தானே பிரச்சனை, வேலைக்காரியா மாத்திடலாம் நீங்க கவலைப்படாதிங்க என்ற மாலாவின் பேச்சு பாதியில் நின்றது.
அக்கா!! அக்கா!! அங்கே பாருங்க, மாமா, அவர், ஆதி" இவங்க மட்டும் தான் வராங்க"... ஆனால் அவளை, அதான் அந்த "உதயாவை" காணும், அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக சொன்னவர் கூடவே அக்கா"
அங்கே பாருங்க! மூன்று பேரோட முகமும் சுருங்கியிருக்கு என ராஜியின் கையை பிடித்து உலுக்க...
ஏய் மாலா, பொய் சொல்லாதே நான் பார்க்கமாட்டேன் என நிமிராமல் நின்றவரை பார்த்து, அய்யோ! "அக்கா" நான் சொல்றது உண்மை, கொஞ்சம் அங்கே பாருங்க" என கண்கள் மின்ன சொன்ன மாலாவின் வார்த்தையில் நம்பிக்கையின்றி நிமிர்ந்து பார்த்த ராஜியின் மனம் மகிழ்ந்தது தன்னுடைய மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல், உடனே கவலையை தேக்கி வேகமாக தன் கணவனின் அருகே சென்றவர்...
CZYTASZ
சித்தாரா
General Fictionஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....