தாரா-8

368 19 15
                                    

அண்ணா, நாம இப்போ என்ன பன்றது? என நலிந்த குரலில் சிவகாமியும் சாமிநாதனனும் இணைந்து கேட்கவும்,

தங்கச்சி! "அம்மா" இப்டி ஒரு முடிவு எடுப்பாங்கன்னு நானும் எதிர்பார்க்கல என்று கவலையுடன் சொன்னார் மேகநாதன்.

சரிங்க, இப்போ அத்தை வீட்டை விட்டுட்டு தோட்டத்து வீட்டுக்கு போயிட்டாங்களே, இந்த விசயம் ஊருக்குள்ள தெரிஞ்சா என்ன ஆகுறது. பேசாமல் அத்தையை சமாதானம் செய்து அழைச்சிட்டு வாங்க... இத்தனை வருடம் கழித்து நாம போய் கூப்பிட்ட உடனே அவங்க பெண்ணை அனுப்பி வைப்பாங்களா? என ராஜி சற்று காட்டமாக சொல்லவும்,

அண்ணி என்ன பேசுறீங்க... என சிவகாமி கோபக்குரலில் கேட்கவும், முகத்தை வெட்டினார் ராஜலெட்சுமி.

மனைவியின் பேச்சை கேட்ட மேகநாதன் சட்டென ஒரு முடிவுக்கு வந்தவர்... ராஜி நான் முடிவு செஞ்சிட்டேன் என ஆழ்ந்த குரலில் சொல்லவும்...

அய்யயோ இந்த மனுசன் என்ன முடிவு எடுத்திருப்பாருன்னு தெரியலையே என உள்ளுக்குள் புலம்பியவர் என்னங்க என்ன முடிவு எடுத்து இ ரு க்கி ங்க என ஒவ்வொரு வார்த்தையாய் கேட்டார்.

மனைவியின் முகத்தை உற்று நோக்கியவர், என் அம்மா சொன்ன வேலையை செய்யலாம்னு முடிவு பன்னிட்டேன் என சொல்லவும், போச்சி எல்லாம் போச்சி இந்த மனுசன் முடிவு பன்னிட்டா யாராலையும் மாற்றவே முடியாதே என மனதுக்குள் கருவியவர் தன் கணவனிடம் எதிர்த்து பேச முடியாத காரணத்தினால் நீங்க முடிவு செஞ்சா சரிதாங்க என சொல்லிவிட்டு  தலையை ஆட்டினார்.

அண்ணா! ரொம்ப சந்தோசம் சீக்கிரமா குட்டிம்மாவை அழைச்சிட்டு வந்துடுங்க என கண்ணீரை உகுத்தவர்... அந்த குடி கெடுத்தவன் அம்மு குட்டியை நம்மகிட்ட அனுப்பாமல் வம்பு செஞ்சாலும் செய்வான் என சிவகாமி பயத்துடன் சொல்லவும்,

அதெல்லாமே நாங்க பார்த்துக்கறோம் சிவகாமி! நீ கவலைப்படாமல் ஊருக்கு போ, பின்னாடியே அம்முவ அழைச்சிட்டு வந்துட்டோம்னு உனக்கு சேதி வரும் என்றதும்,

 சித்தாராWhere stories live. Discover now