மருத்துவமனையின் வளாகத்தில் திடிரென கூச்சலும் குழப்பமும் கூடவே அதிகமாக சத்தமும் கேட்க ஆரம்பித்தது. அந்த கூட்டத்தை கலைக்க மருத்துவமனையில் இருக்கும் செக்யூரிட்டிகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருந்தனர்.
சற்று நேரத்திற்கு எல்லாம் மருத்துவமனை சுற்றிய இடங்கள் எல்லாம் ஒரே பரபரப்பான சூழ்நிலை தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. என்ன ஏது என்று புரிவதற்கு முன்னால் செய்தியாளர்கள் வேறு படையெடுத்து வந்துவிட்டிருந்தனர்.
மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து போலீசுக்கு தகவல் செல்ல அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்களும் வந்து போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி போனது.
இவ்வளவுக்கும் காரணமானவனோ, நடப்பது அனைத்தையும், பார்த்து குரூரமாக சிரித்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்ணசைவில் மக்களோடு மக்களாக கலந்து நின்ற அடியாட்கள் தங்களுடைய அடுத்த கட்டத்திற்கு சென்றனர்.
கைது செய் கைது செய் மேகநாதனை கைது செய் என்ற ஓங்கிய குரலை கேட்ட மற்றவர்களும், ஆட்டு மந்தையை போல என்னவென்று யோசிக்காமலேயே, அவனை பின்தொடர்ந்தனர். ஒருவரிடத்தில் ஆரம்பித்த முழக்கம் இப்போது அங்கிருந்த அனைவரின் வாயிலிருந்தும் வெளி வர ஆரம்பிக்கவும், அருணோதயம் கம்பெனியில் நடந்த விபத்து மீடியாக்கலில் மறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
கைது ஆவதை தடுப்பதற்காகவே உடல்நிலை சரியில்லாதவர் போல வேடமிட்டு நாடகமாடுகிறார் என கூட்டத்தில் இருந்து பல குரல்கள் எழுந்தன.
இன்ஸ்பெக்டர் கூட்டத்தினை அமைதிப்படுத்திவிட்டு மேகநாதனின் உடல்நிலையை பற்றின உண்மையை இன்னும் சற்று நேரத்தில் உங்களுக்கு அறிவிப்பு செய்கிறேன் என சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தார்.
இன்ஸ்பெக்டர் உள்ளே செல்லவும், அவரோடு இணைந்தபடியே நடந்தவனிடம், இதெல்லாம் உங்க வேலை தானா? என கேட்க!!
ŞİMDİ OKUDUĞUN
சித்தாரா
Genel Kurguஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....