சித்தாரா-27
தாராவை போதை நிரம்பிய விழிகளோடு நெருங்கியவன், அறைக்குள் கசிந்து கொண்டிருந்த மெல்லிய லைட் வெளிச்சத்தில் அவளுடைய அழகை கண்களால் துகிலுரித்துக் கொண்டிருந்தான்.
ச்சே சரியான ஈத்தரை பயல், இம்புட்டு அழகா, ரதி கணக்கா ஒரு குட்டி, கண்ணு முன்னாடி சோக்கா இருக்கும் போது, சாமியாரா இருக்கானே, அனுபவிக்க தெரியாத கேனப்பயலா இருக்கானே, இவனையெல்லாம் கூட்டாளிப்பயலா வச்சிகிட்டு நான் என்னத்த செய்றது என்று புலம்பியபடியே தாராவை வட்டமடித்தான்.
அவனின் பேச்சை கேட்டதும் தாராவின் மனம் பற்றி எரிந்தது. கையில் மாட்டினால், அவனை நார் நாராக தொங்க விட வேண்டும் போல ஆத்திரம் வந்தாலும், இப்போது நான் இருக்கும் நிலைமையில் இந்த நாயை எதிர்த்து போராடும் அளவிற்கு உடலில் தெம்பு இருக்குமா? என்ற சந்தேகமும் வர நொந்து போனாள். தாராவிற்கு உணவோ, தண்ணீரோ கொடுக்காமல், அவளை மயக்கத்திலேயே வைத்திருந்ததால் பலகீனமாக இருந்தாள்.
தாராவை நெருங்கியவன் அவள் மீது கையை வைக்க போனவனின் பார்வை, அவளை கட்டியிருந்த கயிறுகளில் விழ, ச்சே இதுவேற நமக்கு இடைஞ்சலா இருக்கே, கட்டை அவுத்துடலாமா குட்டி ஒருவேளை ஓடிப்போயிட்டா என்ன செய்றது என யோசித்தவன், தொடர்ந்து ம் அது எப்படி ஓட முடியும், மயக்கத்துல தானே இருக்கா, என நினைத்தபடியே கட்டுக்களை வேகமாக அவிழ்க்க தொடங்கினான்.
தன்னருகே நின்றவனிடம் இருந்து வந்த சாராய நாற்றத்தை தாங்க முடியாமல் வயிற்றை பிரட்டி கொண்டு வர, எங்கே தன் அசைவை கண்டுப்பிடித்து விடுவானோ என்று கடினப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், அவன் கட்டுக்களை அவிழ்த்து முடிப்பதற்காக காத்திருந்தாள்.
தாராவின் கையையும் காலையும் கட்டியிருந்த முடிச்சுகளை வேகமாக அவிழ்த்து விட்டு அவளை நெருங்க போகவும், படாரென கதவு திறக்கப்படும் சத்தத்தை கேட்டு திரும்பியவன், அதிர்ந்தான்.
CITEȘTI
சித்தாரா
Ficțiune generalăஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....