உனை மறந்து போகும்
மனமென்றால் அது
இறந்து போகட்டும்..உனை காணாது போகும்
கனவென்றால் அது
கலைந்து போகட்டும்..உனை நினையாது போகும்
நினைவென்றால்
அது நினைவிலே
தொலைந்து போகட்டும்..உனை பார்க்காது போகும்
விழியென்றால்
அது பார்வை
இழந்து போகட்டும்..உனை சேராது போகும்
உயிரென்றால் அது
உயிரிழந்து போகட்டும்..உனை பிரிந்து போகும்
நாளென்றால் அது
என் வாழ்விலே
விடியாமல் போகட்டும்..😔..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..