70. பெண்ணே

84 8 49
                                    

💞 என்றோ ஓர் நாள் இரவில்
நீயும் நானும் வெளியில்
கைகள் கோர்த்து வீதியில்
போக வேண்டும் தொலைவில்
அந்த நிலவின் துணையில்....💞

💞 ஆசையோ நெஞ்சினில் பல
அதை சொல்லவோ
எண்ணங்கள் துள்ள
சொல்கிறேன் உன் காதினில் மெல்ல
என் காதலே நீ
மகிழ்ச்சியில் பொங்க..💞

💞 அமைதியை அன்பால் வென்றவள்
இன்பமாய் இதயத்தில் வீழ்ந்தவள்
எனக்கெனவே என்னைத் தேடி
எனக்காய் வந்தவள்..💞

💞 வயது வந்த என் வாலிபத்தை
ஏன் கொன்றாய் பெண்ணே..
வீசும் உன் வினோத பார்வையாலே
என் இதயத்தில் ஏன்
வாள் வீசிச் சென்றாய் பெண்ணே..💞

💞 உன் மூச்சு காற்று பட்டாலே
உயிர்த்தெழும் என்னை ஏன்
தொட்டு தீண்டி உயிர் மாள வைத்து மறுஜென்மம் காண வைத்தாய்
என் கண்ணே..💞

💞 உன் பார்வை என் மீது திரும்பாதா?
உன் ஸ்பரிசம் என்னை தீண்டாதா? என உன்னை பார்த்த நொடியே
ஏங்கி தவித்த என்னை ஏங்கிட விடாது
நீயே என்னோடு வந்து உறவாடி
என் ஏக்கத்தை தீர்த்த பெண்ணே..
நீதான் என் தேவதையே...💞

💞 சுற்றிலும் மனித கூட்டம் நிறைந்த
இடத்தில் கைகள் கோர்த்து
கதைகள் பேசி நடந்து மகிழ்ந்த என்னோடு
நீ அந்த நிலவின் துணையில்
நீயும் நானும் நீண்ட பயணம் போக
வருவாய் பெண்ணே..
வந்தெனக்கு விமோட்சனம்
தருவாய் பெண்ணே..💞

💞 சிறுபிள்ளை சண்டையாய் சிலசமயம்
நீ என்னோடும் நான் உன்னோடும்
செல்ல சண்டைகள் இட்ட தருணங்கள் இப்போது நினைத்தாலும் பெண்ணே
இன்பமே என்ற போதும் கையில் பிடிக்க முடியாத அளவு காலங்கடந்த
அந்த நொடிகளை நினைத்தால்
மனதில் கவலை கூடுதே
என் கண்ணே..💞

💞 நீ என்னோடு அன்பாய்
பழகிய நொடிகளில் கூட
என் மனதை அறிந்திருப்பாய் என்று நினைத்திருந்தேன் பெண்ணே..
ஆனால்,,நீயோ என்னை
விட்டு செல்லும் வரை கூட
என் மீது பாசம் வைத்திருந்தாய்
என் மனதின் ஆசையை அறியாமலே பெண்ணே என் பேதைப் பெண்ணே..💞

💞 உன்னோடு நான் கொண்ட
காதலை எண்ணி இத்தனை காலம்
அந்த நிலவோடு தான்
மகிழ்ந்திருந்தேன் பெண்ணே
நீ என்னை ஏற்றுக்கொள்வாய்
என்பதை அறியாது..💞

💞 நான் சொல்லும் வார்த்தைக்காக தான்
நீ காத்திருந்தாய் என
இன்று தான்
அறிந்தேன் பெண்ணே..💞

இப்போது சொல்கிறேன்
பெண்ணே..

💞❤ யாரும் இல்லா தனிமையில்
ஓர் நாள் இரவில்
நான் கொண்ட காதலால்
உன் மீது ஊடல் கொண்ட நிலவோடு
அவள் என்னோடு ஊடல் கொள்ள
உன்னோடு கைகள் கோர்த்து நான்
காலம் முழுதும் பயணிக்க
எனக்கு சம்மதம்
என்னோடு இணைந்து பயணிக்க
உனக்கு சம்மதமா?
பெண்ணே..

சம்மதம் கேட்டு காத்திருக்கிறேன்
நிலா ரசிகனாய்
உன் சம்மதம் கிடைத்தால்
ஆக இருக்கிறேன்
உனக்கு ரசிகனாய்....❤💞

💞 மாலை இடுவதென்றால் அது
உனது விருப்பம்
உன் மனது ஒன்றே போதும் என்பது
எனது விருப்பம்..
இரண்டும் கிடைத்தால்
நான் உன் காவலன்
இல்லையேல் காலம் முழுவதும்
நான் அந்த நிலவுக்கே காதலன்..💞

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°
இந்த பெண் நீங்களாக இருந்தால்
நிச்சயம் சம்மதம் கூறலாம் 😉....
காத்திருப்பேன் எதிர்பார்த்திருப்பேன் காதலோடு 😉....
°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°


இப்படிக்கு,
🌛 நிலா ரசிகன் ❤

காகித கிறுக்கல் Dove le storie prendono vita. Scoprilo ora