18. மதிப்பிற்குரிய பெண்மை

101 13 59
                                    

மண்ணில் பிறந்த மானிடம்
பிரித்து வைத்தது இரண்டினம்
அடக்கி ஆள்வது ஆணினம்
அடிமை பட்டதோ பெண்ணினம்

ஆள்வதில் என்ன
அத்தனை ஆணவம்
பெண்ணாய் பிறப்பதில்
அன்றோ பெரும் மாதவம்
பேதை என்றான் ஒருவன்
பேசாமல் மூலையில் இரு
என்றான் இன்னொருவன்

பெண்ணாய் பிறந்ததிலென்ன குற்றம்
இந்த பெண்மை மனங்களை
அறியாமல் இருந்ததோ சுற்றம்
பெண்ணடிமை கண்டது புதுமாற்றம்
ஆணுக்கு இணையாய்
புது பெண்மை தோற்றம்

தொட்டிலை ஆட்ட
அடிமைபட்ட பெண்ணினம்
இன்று தொல்லுலகம்
ஆளுவதிலென்ன கண்ணியம்

உடன் கட்டை ஏறி மண்ணானவள்
இன்று உலகறிய எட்டு
வைத்து விந்தையானவள்

போகப்பொருளாய்
பார்க்கப்பட்டவள் அன்று
போர்க்களத்தில் போர்வாளாய்
மாறிப்போனாள் இன்று

ஆண்மை எனும் ஆணவத்தீ
அதை அடக்கியதோ
பெண்மை எனும் பெருந்தீ

ஆண்கர்வம் கொள்வதற்கு
நீ விண்ணிலா?
குதித்து வந்தாய்
இல்லையே
சர்வமும் அடங்கி ஒடுங்கி
பெண் கருவில் தானே வீற்றிருந்தாய்

மங்கை நினைத்தால் தானடா
பூமியில் மானிடம்
மறுப்பேயில்லை நீ
உணரத்தான் வேண்டும்
உண்மையின் சாரீரம்

அன்பில் அரவணைப்பும்
பாசத்தில் பாதுகாப்பும்
பெண்ணாலன்றி முழுமை
பெறுவது எங்கே?

பெண்ணை பூட்டி வைத்த காலம்
புறம் தேடி போயாச்சி
பெண்ணை தூக்கி மெச்ச
வேண்டிய காலம்
புயலென வந்தாச்சி

வீட்டை மட்டுமே உலகமென
விதியை நொந்த
காலம் போயாச்சி
விண்ணை தொட்டு மண்ணை ஆள
புது விதி இன்று பிறந்தாச்சி

பேதையானவள் மேதையான காலம்
எப்போதோ உதயமாயாச்சி
பெண் உரிமை முழுதாய்
அவள் கைகளில் கிடைத்தாச்சி

முடியும் என்றால் முன்னேற
மூப்பு கூட தடையில்லை
பெண்ணாய் பிறந்ததொன்றும்
அவ்வளவு பெரிய தவறில்லை

பாரதியின் குரலில் உயர்ந்து ஒலித்தது பெண்மை

பாரதிதாசன் எழுத்தில் உணர்ச்சியாய் முழங்கியது பெண்மை

உணர்வுகள் மனதின் பாஷைகள்
பெண்மை அதிகம் பேசாத ஊமைகள்

விசித்திரமாய் பார்ப்பதற்கொன்றும்
பெண்கள் விலைப்பொருள் அல்ல
வீணாய் வம்புகள்
வளர்த்தால் அவள் விம்மி அழும்
பொம்மையும் அல்ல

வேள்வி எழுப்பி துதி போற்றியவள் வேண்டுமென்றால்
தூண்டில் மீனாய் தமை
நினைப்போரை விழி வேள்வியால்
எரிக்கவும் தயங்காதவள்

பெண் இல்லா உலகம்
போர்க்களம் ஆவதும்
புதைக்குழி ஆவதும் மறுப்பதற்கில்லை

மதிக்க தெரிந்தால் பெண்ணை
கொஞ்சம் துதிக்க தெரிந்தால் பெண்ணை
அந்த ஆண்மையும் அழகு தான்

மறப்பதும் மன்னிப்பதும்
மனித குணம்
அந்த பெண்மை
மாதவம் தந்த வரம்
அதை மதிப்பதை விட வேறு
என்ன சிறந்த தவம்

கட்டி வைத்த கட்டுப்பாடுகள்
கதவு திறந்து காற்றில் கலந்திட
புதுமை வேண்டிய புகையில்
பெண்மை தீ என உதித்தாள்....!

இப்படிக்கு,
நிலா ரசிகன்

காகித கிறுக்கல் Where stories live. Discover now