💕 நீளும் இரவின்
நீளத்தை ரசிக்கிறேன்..
சுழலும் கடிகாரத்தின்
ஓசையில் என் இதயத்தின்
ஒலியை கேட்கிறேன்..
தவழும் காற்றில்
தவித்து கிடக்கிறேன்..
உன்னை நினைத்து
ஊமையாய் சிரிக்கிறேன்.. 🤭உச்சி முகரும் உன்
உஷ்ணத்தை உணர்கிறேன்..
நீ அருகிலிருக்கும்
அணைப்பை அறிகிறேன்..
இத்தனையும் ஒன்றாய்
கனவில் காண்கிறேன்..
கண் விழித்த பின்னே உன்னிடம்
தூது சொல்கிறேன்..😊வான் நிலவு வடிவாய் இருக்க
உன் நிலவு இங்கே
உன் வருகை எண்ணி
தேய்ந்து போகிறேன்..🌘
வான் விழிக்கும் முன்னே
உன் நிலவின் முகம்
காண வாராயோ? 😉..NR..
YOU ARE READING
காகித கிறுக்கல்
Poetryஎண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு,, 🌛 நிலா ரசிகன்..