18 புயலே தென்றலாய்...

2.8K 133 9
                                    

18 புயலே தென்றலாய்...

நமக்கு மிகவும் பிடித்தவர்கள், கட்டி அணைக்கும் பொழுது, நம் மனதில், நிம்மதியும், அமைதியும், தன்னம்பிக்கையும், ஏற்படுகிறது என்பதை மனோதத்துவம் ஒப்புக்கொள்கிறது. அது என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், இப்பொழுது தனது பாதுகாப்பின் கதகதப்பை, ஐஸ்வர்யாவிற்கு உணர்த்த விரும்பினான் வசீகரன்.

ஐஸ்வர்யாவும், தனக்கு பிடித்தமான பெண்களை கட்டியணைத்து, அவர்களுக்கு அப்படி ஒரு பாதுகாப்பு உணர்வை வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தவள் தான். ஆனால், இன்று தான் அதன் உன்னதமான சக்தியை அவள் உணர்ந்தாள். வசீகரனின் அணைப்பு, அவள் உடலிலும், மனதிலும் இருந்த அத்தனை பதட்டத்தையும் வெளியேற்றியது.

கதிரவன், வசீகரனை அவனுடைய பாதைக்கு இழுக்க முயற்சித்ததை பார்த்த பொழுது, அவளுக்கு மரண பயம் ஏற்பட்டது. அவளால் எப்படி அதை அனுமதிக்க முடியும்? விட்டிருந்தால், அவள் கதிரவனை கொன்றே இருப்பாள். அவள் கணவன், தன்னை மனதார காதலிப்பதாக அவள் நம்பினாள். அவள் கணவனின் அன்பு, அவளுக்கு மட்டுமே சொந்தமானது என்று, வசீகரன் அளித்திருந்த அத்தனை வாக்குறுதிகளையும் அவள் நம்ப தொடங்கியிருந்தாள். அதை காப்பாற்றிக் கொள்ள அவள் எதையும் செய்ய தயங்க போவதில்லை. ஆனால், அதில் இருந்த ஒரே ஒரு சோகம் என்னவென்றால், அவள் தன் கணவன் மீது கொண்டுள்ள காதலால் தான் அனைத்தையும் செய்கிறாள் என்பது தெரியாமல், செய்து கொண்டிருந்தாள்.

வசீகரனின் நிலைமையோ விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அவன் மனைவியின் கோபவெடிப்பு, அவன் கனவிலும் எதிர்பார்த்திராத ஒன்று. அன்றொருநாள், ரத்னா கூறியது அவன் நினைவுக்கு வந்தது. *ஒருவேளை அவள் உன்னிடம் வன்முறையாக நடந்து கொண்டால் என்ன செய்வாய்?* இன்று அவள் வன்முறையாக தான் நடந்து கொண்டாள்... அபாயகரமான அளவிற்கு வன்முறையாக... ஆனால், அவள் எப்போதும் வசீகரனிடம் அப்படி நடந்து கொண்டதில்லை. அவளால் அப்படி நடந்து கொள்ள முடியும் என்பது கூட வசீகரனுக்கு தெரிந்திருக்கவில்லை. யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து வைத்திருந்த உத்தம பெண்ணவள். வசீகரனின் தோள்பட்டையில் ஏற்பட்டிருந்த வலி கூறியது, கதிரவனை அடிப்பதற்காக அவள் எவ்வளவு வன்முறையாக நடந்து கொண்டாள் என்பதை. அவள் கதிரவனை அடித்து விடாமல் தடுப்பதற்காக, வசீகரன் மிகவும் சிரமப்பட்டு போனான்.

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now