21 இயல்பு நிலை

2.7K 135 7
                                    

21 இயல்பு நிலை

இளவரசன் இல்லத்திலிருந்து சென்று விட வேண்டும் என்ற ஐஸ்வர்யாவின் முடிவை நினைத்து, மீனாட்சியும் நிலாவும் வருத்தம் அடைந்தார்கள். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. ஏனெனில், ஐஸ்வர்யா அவளுடைய மனதை மாற்றிக் கொள்ளமாட்டாள் என்பது அவர்களுக்கு தெரிந்தது தான்.

"சாரி ஆன்ட்டி. நான் அவளை இன்னொரு நாள், இங்க கூட்டிட்டு வர முயற்சி செய்றேன்" என்றான் வசீகரன்.

"பரவாயில்ல பா. ஐஸ்வர்யா சந்தோஷமா இருந்தாலே எனக்குப் போதும்" என்றார் மீனாட்சி.

மீனாட்சி அப்படி கூறிய போது, ஐஸ்வர்யா சங்கடத்தில் நெளிவதை வசீகரன் உணர்ந்தான்.

"அவ சந்தோஷமா தான் இருப்பா... என்கூட... எப்பவுமே... நான் சொல்றது சரி தானே?" என்றான் அவளை பார்த்தபடி.

அவள் பேச்சை மாற்ற முயன்ற போது,

"உங்க அம்மா உன் பதிலுக்காக காத்திருக்காங்க" என்றான் வேண்டுமென்றே. ஆனால், நிச்சயம் அது அவளை சீண்டுவதற்காக அல்ல.

"எங்க அம்மாவே அதை நேரடியா பாக்க போறாங்க" என்று பதிலளித்தாள் புத்திசாலித்தனமாக.

"நீயும், மாப்பிள்ளையும், சந்தோஷமா வாழுறத பார்த்தாலே எனக்கு போதும். நான் அதுக்காக தான் என் உயிரைக் கையில புடிச்சுக்கிட்டு இருக்கேன். நீ அதை புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்" என்றார் மீனாட்சி.

அதைக் கேட்டவுடன் வசீகரனை பார்த்து முறைத்தாள் ஐஸ்வர்யா, "இப்பொழுது உங்களுக்கு சந்தோஷம் தானே?" என்பது போல.

வசீகரனும் தனது முகத்தில் சிரிப்பு ஏதுமின்றி, புருவத்தை உயர்த்தி அவளுக்கு சைகையால் பதிலளித்தான். அவனுடைய பார்வை அபாயகரமானதாக இருந்தது. வசீகரனின், விளையாட்டுத்தனமான, குழைவான பக்கங்களை கூட சமாளித்து விடலாம். ஆனால், அவனுடைய சலனமற்ற முகத்தை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்வது என்பது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை கணிப்பது என்பது நடவாத ஒன்று. மேலும் அந்த விவாதத்தை தொடர விரும்பாமல், அங்கிருந்து கிளம்பினாள் ஐஸ்வர்யா.

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now