34 இணைந்த மனங்கள்

3.4K 127 7
                                    

34 இணைந்த மனங்கள்

மறுநாள் காலை

வசீகரன் எதிர்பார்த்திருந்தது, இப்படிப்பட்ட வாழ்வை தான். நிம்மதியான உறக்கம்மும், மன அழுத்தம் இல்லாத விழிப்பும் இணைந்த இதமான வாழ்வு. கதவைத் தட்டும் சத்தம், அவனுடைய ஆழ்ந்த உறக்கத்தை கலைத்தது. ஐஸ்வர்யா, குளியல்றையில் இருந்ததால், எழுந்து சென்று கதவை திறந்தான் வசிகிரன்.

அங்கு ரத்னா நின்றிருந்தார். ஏதோ சொல்ல வந்தவர், வசீகரனின் தாடி இல்லாத முகத்தை பார்த்து, அப்படியே ஒரு கணம் நின்றார். அவர் முகம் சந்தோஷத்தை தாரைவார்த்துக் கொண்டது. வசீகரனும் அவரைப் பார்த்து சிரித்தான். அப்போது ரத்னாவின் கவனத்தை ஒன்று ஈர்த்தது, அது அவர் முகத்தை மேலும் பளிச்சென்று ஆக்கியது.

அந்த மாற்றத்தின் காரணம் வசீகரனுக்கு புரியவில்லை. அவன் தன் புருவங்களை உயர்த்தி "என்ன?" என்றான்.

அவனுடைய பாணியிலேயே அவரும் தனது கட்டை விரலை உயர்த்தி "வெற்றி தானே?" என்றார் தன் தலையை அசைத்தபடி.

வசீகரனுக்கு தூக்கி வாரிப்போட்டது. எப்படி அம்மா தெரிந்து கொண்டார்? அவனுடைய மாறிய முகபாவத்தை பார்த்து, அவனை கண்ணாடி முன் இழுத்து சென்று, அவன் முகத்தை திருப்பி காட்டினார் ரத்னா. அவனது காதோரத்தில், உதட்டுச்சாய கரை இருந்தது. வசீகரனின் முகத்தில், எப்போதும் இல்லாத அசடு வழிந்தது. அவன் தன்னை சமாளித்துக் கொண்டு, முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான்.

"ஐஸ்வர்யாவை கலாட்டா பண்றதுக்காக, அதை சும்மா வச்சுக்கிட்டேன்மா" என்றான்.

அதைக்கேட்டு ரத்னாவின் முகம் வாடிப் போனது. அடுத்த நொடி, அவர் கரங்களைப் பற்றிக்கொண்டு, ஆடிய படியே,

"நீங்க சீக்கிரமாவே பட்டி ஆயிடுவீங்க" என்று கண்ணாடித்தான்.

அதைக்கேட்டு, அவர் முகம், சூரியனைக் கண்ட தாமரையைப் போல் மலர்ந்தது. அவரும் வசீகரனுடன் சேர்ந்து ஆடினார். அந்த நேரம் குளியலறையிலிருந்து, ஈரக் கூந்தலை துவட்டியபடி, ஐஸ்வர்யா வெளியே வந்தாள். அவளிடம் ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது. அவள் நேருக்கு நேர் ரத்னாவை பார்க்க தயங்கினாள். அவளை அப்படி பார்த்து, ரத்னா பூரித்துப் போனார்.

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now