10 வேறு முகம்

3K 134 12
                                    

10 வேறு முகம்

அரவிந்தனுடனும், வசீகரனுடனும், எஆர்வி ஃபேஷன்ஸின் உள்ளே நுழைந்தாள் ஐஸ்வர்யா. சற்று நேரத்திற்கு முன் கூச்சலும், குழப்பமுமாக இருந்த அலுவலகம், அவர்களை கண்டதும் நிசப்தமாகிப் போனது. அலுவலர்கள் அனைவரும், தங்களுடைய காலை வணக்கங்களை, தங்கள் முதலாளிகளுக்கு கூறத் துவங்கினார். அனைவருக்கும் தலையசைத்து, அவற்றை ஏற்றுக் கொண்டே உள்ளே சென்றார் அரவிந்தன். ஆனால், வசீகரன் முகத்தில் கடுகை போட்டால் வெடித்துவிடும் போல இறுக்கமாக இருந்தான். அவனை அப்படி பார்த்து ஐஸ்வர்யா குழம்பிப் போனாள். அவள் பார்த்ததற்கு இது நேரெதிரான முகம். கண்ணாடி சுவர்களால் சூழப்பட்ட, தன்னுடைய அறைக்கு நேரடியாக சென்றான் வசீகரன். அவனுடைய அறையிலிருந்து, அனைத்தையும் கண்காணிக்க ஏற்றவாறு அவனுடைய அறை வடிவமைக்கப்பட்டிருந்தது. ஏஆர்வி மேனேஜர் விஷாலை அழைத்து, ஐஸ்வர்யாவின் அறையை காட்ட சொல்லிவிட்டு, தனது அறைக்கு சென்றார் அரவிந்தன். வசீகரனின் அடுத்த அறை அவளுடையது. அது தெரிந்த பொழுது அவள் பெருமூச்சுவிட்டாள்.

"அரவிந்த் சார் உங்களுக்கு இந்த ரூமை கொடுக்கச் சொன்னார்" என்றான் விஷால்.

சரி என்று தலையசைத்துவிட்டு, தன்னுடைய பொருள்களை தன்னுடைய அறையில் அழகாக அடுக்கி வைத்துக் கொண்டாள் ஐஸ்வர்யா. அப்போது குறைந்த உடையில் ஒரு பெண் வசீகரனின் அறையை நோக்கி செல்வதை பார்த்து நிமிர்ந்து அமர்ந்தாள் ஐஸ்வர்யா. அவனுடைய அறையின் வெளியில் நின்று, அந்தப் பெண் தனது கையில் இருந்த ஃபைலை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள். அவளுடைய முகத்தில் ஒரு பதட்டம் தெரிந்தது. அந்த ஃபைலை பார்த்து முடித்த பின், அவனுடைய அறையின் கதவை தட்டினாள், அவனுடைய அனுமதியைப் பெறுவதற்காக. ஐஸ்வர்யா அவனுடைய அறையில் நடப்பதை கவனிக்காதவள் போல கவனித்துக் கொண்டிருந்தாள். தனது மடிக் கணினியில் வேலை செய்து கொண்டிருந்த வசீகரன், தலையைக் கூட நிமிர்த்தாமல் அந்த பணியை தொடர்ந்தான்.

"சார், இந்த ஃ பைலை நீங்க பாக்க வேண்டியிருக்கு" என்றாள் அந்தப் பெண்.

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Opowieści tętniące życiem. Odkryj je teraz