14 திட்டம்
மீனாட்சியின் புகைப்படத்தை தன் கையில் வைத்துக் கொண்டு, அவளுடைய அறையில் அமர்ந்திருந்தாள் ஐஸ்வர்யா. அந்தப் பக்கமாக சென்ற ரத்னா, அதை பார்த்து அவளுடைய அறையினுள் நுழைந்தார். ரத்னாவை பார்த்ததும் தன் கண்களை துடைத்துக் கொண்டாள் ஐஸ்வர்யா. ரத்னா அவள் கண்ணத்தை தொட்டு, அங்கு ஈரத்தை கண்டார். அவள் கையிலிருந்த புகைப்படத்தை வாங்கி பார்த்த பொழுது, அது மீனாட்சியின் புகைப்படம்.
"உங்க அம்மாவ நீ ரொம்ப மிஸ் பண்ற இல்ல?" என்றார்.
"நான் எங்க அம்மாவை, ஒரு நாள் கூட பிரிஞ்சி இருந்ததே இல்ல. இது தான் முதல் முறை, இவ்வளவு நாளா நான் அவங்களை விட்டுட்டு இருக்கிறது"
"ஒவ்வொரு பெண்ணோட வாழ்க்கையிலும் இதெல்லாம் தவிர்க்க முடியாதது. உன்னுடைய கண்ணீர் எதையுமே மாத்திட போறது இல்ல. நீ அதை புரிஞ்சுக்கணும். ஆனா, நீ அதை பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. நான் வசிகிட்ட பேசுறேன். உன்னை, உங்க அம்மா வீட்டுக்கு அனுப்ப சொல்றேன். சரியா?"
"நெஜமாவா? அவர் என்னை அனுப்ப ஒத்துக்குவாரா?"
"ஒத்துக்குவான். நான் அவனை ஒத்துக்க வைக்கிறேன்"
"தேங்க்யூ சோ மச் ஆன்ட்டி. நீங்க ஒரு ஸ்வீட் ஹார்ட்" என்றாள்.
"என் மருமக அழறதைப் பார்க்க எனக்கு பிடிக்காது. அதை நீ மறக்க கூடாது"
சரி என்று தலையசைத்தாள் ஐஸ்வர்யா சந்தோஷமாக. ரத்னா அங்கிருந்து வசீகரனை நோக்கிச் சென்றார். அவன் அரவிந்தனுடன் ஸ்டடி ரூமில் ஏதோ முக்கியமாக விவாதித்துக் கொண்டிருந்தான்.
ஐஸ்வர்யாவிற்கு தன் திட்டம் பலித்து போனதில் மிக்க சந்தோஷம். அவள் கணவனிடம் இருந்து சற்றே விலகியிருக்க வேண்டுமமென்று அவள் நினைத்தது நடக்கப் போகிறது. வசீகரன், அவன் அம்மாவின் பேச்சை தட்ட போவதில்லை. இங்கிருந்து சென்றுவிட்டால் போதும், அதன் பிறகு அங்கேயே தங்குவதற்கு ஏதாவது ஒரு சாக்கை தேடிக் கொள்ளலாம். அவள், தனது சாமர்த்தியத்தை நினைத்து, தானே பெருமைப்பட்டுக் கொண்டாள்.
KAMU SEDANG MEMBACA
அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )
Romansaஇது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.