5 ஐஸ்வர்யாவின் மறுபக்கம்
*மறுநாள் காலை*
தூக்கம் கலைந்த ஐஸ்வர்யா, சோம்பல் முறித்தாள். அப்போது அவளை யாரோ இறுக பற்றியிருப்பது தெரிந்தது. திடுக்கிட்டு கண் திறந்தவள், தான் தன் கணவனின் அனைப்பில் இருப்பதை பார்த்தாள். அவளைப் பார்த்தபடி, ஒரு கையால் தனது தலையை முட்டுக் கொடுத்துக் கொண்டு, மற்றொரு கரத்தால் அவளின் இடையை வளைத்து பிடித்திருந்தான் வசீகரன். அவனுடைய பார்வையில் குறும்பு நிறைந்திருந்தது என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவள் முயற்சித்த போதும் அவனின் அணைப்பில் இருந்த அவளால் வெளிவர முடியவில்லை.
"குட் மார்னிங்" என்றான் வசீகரன்.
"என்னை விடுங்க" என்றாள் ஐஸ்வர்யா.
"விடுறதுக்காக உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கல" என்றான் வசிகரன்.
"ப்ளீஸ்" என்று கெஞ்சினாள் ஐஸ்வர்யா.
"ஏன்? நீ என்னோட வைஃப் தானே...?"
"நீங்க என்னை ரொம்ப சங்கட படுத்துறீங்க" என்றாள்.
"நீயும் தான். ஆனா, எனக்கு நேர் மாறா. நான் உன் கூடவே இருக்கணும்னு நினைக்கிறேன். நீ என்கிட்ட இருந்து ஓடிகிட்டே இருக்க. உண்மையில இது ரொம்ப சங்கடமா இருக்கு" அவன் அமைதியாக சொன்னான்.
"எனக்கு கொஞ்சம் டைம் வேணும்"
"சரி. அப்போ, அதை என்னை பாத்து சொல்லு"
"என்னை விடுங்க"
"முடியாது. நீ என்னை பாத்து சொல்ற வரைக்கும் உன்னை விடமாட்டேன்"
அவனை நோக்கி மெதுவாக அவள் முகத்தை திருப்பி,
"விடுங்க" என்றாள்.
"சிரிச்சிக்கிட்டே சொல்லணும்" என்றான்.
நீண்ட பெருமூச்சை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள்,
"என்னை விடுங்க" என்றாள் ஒரு செயற்கையான புன்னகையுடன்.
"நீ சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்க... அது செயற்கையா இருந்தாலும்"
BINABASA MO ANG
அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )
Romanceஇது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.