7 பந்தம்... ஒப்பந்தம்

3.3K 128 6
                                    

7 பந்தம்... ஒப்பந்தம்...

விவாகரத்து?

தொப்பென்று, முழங்காலிட்ட படி தரையில் அமர்ந்தான் வசீகரன். இவ்வளவு நாள் திருமணமே வேண்டாம் என்று அவன் தவிர்த்து வந்தது இதற்காகவா? ஐஸ்வர்யாவின் குரல் அவன் தலை முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அவன் எங்கிருக்கிறான், எங்கு செல்கிறான், என்ன செய்து கொண்டிருக்கிறான், என்பதே மறந்து போனது அவனுக்கு. எதிர்பாராத இந்தத் திருப்பத்தால், அவன் வாழ்க்கையே அவனை ஏமாற்றி விட்டதாக உணர்ந்தான்.

ரத்னா, ஐஸ்வர்யாவிடம் மதிய உணவிற்காக வசீகரனை அழைத்து வரும்படி கூற, அவனைத் தேடி தங்களது அறைக்கு சென்ற ஐஸ்வர்யா, வசீகரன் அங்கு காணாததால் மேல் மாடிக்கு சென்று பார்த்தாள். அங்கும் அவன் இல்லாமல் போகவே, அவளுக்கு அது பதட்டத்தை ஏற்படுத்தியது. அதை பற்றி ரத்னாவிடம் கூறுவதற்காக வந்த போது, ரத்னாவுக்கு வசீகரனிடமிருந்து ஃபோன் வர, தூரத்திலேயே நின்றுகொண்டாள் ஐஸ்வர்யா.

"யார்கிட்டயும் எதுவும் சொல்லாம எங்க போன? திடீர்னு, அப்படி என்ன முக்கியமான வேலை உனக்கு? என்றார் ரத்னா.

"முக்கியமான வேலை தான் மா. நான் ஆஃபீஸ்ல இருக்கேன். முக்கியமான ஒரு மீட்டிங் இருந்துச்சு. அதனால தான் அவசரமா கிளம்பி வர வேண்டியதா போச்சு. இன்னைக்கு லேட்டா தான் வருவேன். எனக்காக காத்திருக்க வேண்டாம்" கூறிவிட்டு போனை துண்டித்தான் வசீகரன்.

ரத்னாவிற்கு எதுவும் சரியாக படவில்லை. அவள் ஐஸ்வர்யாவை பார்க்க, ஐஸ்வர்யா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ஒரு செயற்கை சிரிப்பை உதிர்த்தாள். ரத்னாவும் அவளை பார்த்து சிரித்துவிட்டு, சமையல் அறையை விட்டு குழப்பத்துடன் வெளியேறினார்.

ஐஸ்வர்யாவிற்கு மிகவும் கவலையாக இருந்தது. அவளுடைய அப்பாவின் மீது இருந்த வெறுப்பு, பன் மடங்காக உயர்ந்தது. இந்த நல்ல மனிதர்களின் தவறு இதில் என்ன இருக்கிறது? உண்மையிலேயே இவர்கள் மிகவும் நல்லவர்கள். ரத்னாவை போன்ற நல்ல மாமியாருக்கு, நல்ல மருமகள் தான் அமைய வேண்டும். ஐஸ்வர்யாவிற்கு அந்த குடுப்பனை இல்லை என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அவளுக்கு வேறு வழியும் இல்லை. அதே நேரம், வசீகரன் பற்றிய நினைப்பு, அவளை பதட்டமடைய வைத்தது. அவன் உடைந்து போயிருப்பதை, அவள் அறிந்திருந்தாள். தன்னுடைய முடிவை அவள், அவனிடம் கூறுவதற்கு முன், அவன் அவளிடம் நடந்து கொண்ட விதமே அதற்கு சாட்சி. அவ்வளவு உற்சாகமாக அவன் இருந்தான்.

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Donde viven las historias. Descúbrelo ahora