36 தேனிலவு

3.2K 128 8
                                    

36 தேனிலவு

மிகவும் சோகமாக, வரவேற்பறையில் அமர்ந்திருந்தான் வசீகரன். கோயிலுக்கு செல்ல தயாராகி வந்த ரத்னா,

"நான் கோயிலுக்கு போய்ட்டு வரேன்" என கூறி, அவன் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து அருகில் வந்தார். அவரை ஒரு வேதனை பார்வை பார்த்தான் வசீகரன். ரத்னாவால் புரிந்துகொள்ள முடிந்தது, அவன் எதோ மனவேதனையில் இருக்கிறான் என்பதை.

"என்ன ஆச்சு? எதுக்காக நீ எவ்வளவு சோகமா இருக்க?"

"என்னை மன்னிச்சிடுங்கம்மா. என்னால, உங்க மருமகளுக்கு எதிரா எதுவுமே செய்ய முடியல"

"நீ எதுக்கு அவளுக்கு எதிரா எதுவும் செய்யணும்?"

"ஏன்னா, அவ இந்த வீட்டைவிட்டுப் போகணும்னு விரும்புறா. அவளுக்கு இங்க இருக்கிறதுல விருப்பம் இல்லயாம்"

அவனையே பார்த்துக் கொண்டிருந்த ரத்னாவின் முகம் மாறிப் போனது. அவர் முகம் சலனமற்று காணப்பட்டது. அவரைப் பார்த்து வசீகரன் குழம்பிப் போனான். ஒரு உள்ளுணர்வு உணர்த்த, அவன் திரும்பிப் பார்த்தான். தன் கைகளை கட்டிக் கொண்டு, ஐஸ்வர்யா நிற்பதைப் பார்த்த உடன், அவனுக்கு திடுக்கென்று போனது.

"இப்ப, நான் சொன்னதை நீங்க நம்புறீங்களா, ஆன்ட்டி? எங்க ரெண்டு பேரையும் இந்த வீட்டைவிட்டு நீங்க போக சொன்னதா, என்கிட்ட சொன்னாரு. நான் இங்க இருந்து போக விரும்புறதா, உங்ககிட்ட சொல்றாரு."

"ஆனா, இவன் ஏன் இதெல்லாம் செய்றான்னு எனக்கு ஒண்ணுமே புரியல" என்றார் ரத்னா.

தன் தலையை வெறுப்போடு கோதிவிட்டான், அவனுடைய திட்டம் பலிக்காமல் போனதால். மாமியாரும், மருமகளும் அவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்தார்கள், பதிலை எதிர்பார்த்து.

"நீங்க ரெண்டு பேரும், இதைப் பத்தி, ஏற்கனவே பேசிட்டிங்களா?" என்றான்.

இருவரும் *ஆமாம்* என்று தலையசைத்தார்கள்.

"எதுக்குடா இந்த வேலை செஞ்சுகிட்டு இருக்க? எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல பிரச்சினையை ஏற்படுத்த பாக்குறியா?"

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now