26 பிரிவின் தவிப்பு

2.6K 129 6
                                    

26 பிரிவின் தவிப்பு

தன் இல்லம் வந்திருந்த ஐஸ்வர்யாவின் பெற்றோரையும், அண்ணன், அண்ணியையும் வரவேற்றான் வசீகரன். அவன் ரத்னாவிற்கு தனது கண்களால் ஏதோ ஒன்றை உணர்த்தினான். ரத்னாவும் அதை புரிந்து கொண்டவராய், தலையசைத்துவிட்டு, அதையே அரவிந்தனுக்கும் புரிய வைத்தார்.

வசீகரன், ஐஸ்வர்யாவின் வரவை எதிர்பார்த்து, திரும்பத் திரும்ப மாடிப்படிகளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் நிலாவுடன் தங்களை நோக்கி வருவதை பார்த்தான். அவள் இளவரசனும், கதிரவனும் நின்றிருந்த பக்கம் திரும்பவே இல்லை. அவள் நேரே மீனாட்சியை நோக்கி சென்று, வழக்கம் போல் அவளை கட்டி அணைத்தாள்.

ஆண்களை வரவேற்பறையில் அமர சொல்லிவிட்டு, பெண்களை தன்னுடன் உணவு மேசையை நோக்கி அழைத்து சென்றார் ரத்னா, வசீகரனின் உணர்த்தலின் படி. இளவரசனுடனும் கதிரவனுடனும் அமர்ந்திருக்க, ஐஸ்வர்யா விரும்பமாட்டாள் என்பதற்காக இந்த ஏற்பாடு.

"எத்தனை மணிக்கு கிளம்புறீங்க, வசீகரன்?" என்றார் இளவரசன்.

"விடியற்காலையில் கிளம்புகிறேன். இங்கிருந்து துபாய் போய், அங்கிருந்து லண்டன் போறேன்" என்றான்.

"சாயங்காலம் பிளைட்ல கிளம்பலாமே. காலையில தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு என் கிளம்புறீங்க?"

"சாயங்காலம் கிளம்பினா நான் அங்க நடுராத்திரியில் போய் சேருவேன். காலையில் கிளம்பினா, அங்க மத்தியானம் போய் சேந்தா, செட்டில் ஆக சுலபமாக இருக்கும்"

ரத்னா, ராமுவை அழைத்து, அவர்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி கூறினார். வசீகரன் என்னவோ ஆண்களுடன் அமர்ந்து தான் பேசிக் கொண்டு இருந்தான். ஆனால், அவன் கண்கள் ஐஸ்வர்யாவை விட்டு விலகவே இல்லை. அவனது பார்வை வழக்கமானதாக இருக்கவில்லை, கவனமும், அக்கறையும் நிறைந்ததாக இருந்தது. ஐஸ்வர்யாவிடமும் முன்பிருந்த பதட்டம், இப்போது காணப்படவில்லை. அவளுடைய கண்களும் வசீகரன் இருந்த திசையிலேயே அலைபாய்ந்து கொண்டிருந்தது.

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now