10. நீயே வாழ்க்கை என்பேன்

12 0 0
                                    

10.10... நீயே வாழ்க்கை என்பேன்

விகாஷினிக்கு கோவம் தலைக்கு ஏறியது..இவர்களை பிரித்தே தீர வேண்டும் என்று..
ஆனால் எப்படி ஈன்று தெரியாமல் தவித்து ஹர்ஷா வந்ததும் அவனிடம் சண்டையிட்டாள்.
ஹர்ஷா உள்ளே வந்ததும்..
"ஏன் அண்ணா...உனக்கு கூட பொறந்த தங்கச்சிய விட நேத்து வந்த உன் ப்ரண்ட் முக்கியமா போய்ட்டாளா?..அவளுக்கு அவங்க குடும்பம் மொத்தமும் இருக்காங்கல அப்புறம் எதுக்கு நீயே எல்லாம் செய்யற..எனக்கு செய்யுறதை அவசரம் அவசரமா முடிச்சுட்டு அவ வீட்டுக்கு ஓடுற..எனக்கு ஒரு கண்ணாடி வளையல் கூட நீ வாங்கி தரலை ஆனா அவளுக்கு பார்த்து பார்த்து செலக்ட் பன்னி வாங்கிட்டு போற..இதுலாம் உனக்கே நியாயமா இருக்கா..அப்படி என்ன எங்களை விட அவ உனக்கு முக்கியமாகிட்டா?" என்று கோவமாய் கேட்க..ஹர்ஷா பொறுமையா பதில் சொன்னான்..
"ஏன்னு கேட்டா என்ன சொல்லனும்...நீ என் தங்கச்சி உனக்கு செய்ய வேண்டிய எதையும் நான் நிறுத்திட்டு அவளை பார்க்க போகல..உனக்கு செய்யவேண்டிய என்னோட எல்லா கடமையும் முடிச்சுட்டு தான் போனேன.. நான் உனக்கு கிஃப்ட் வாங்கி கொடுக்கலையா..நான் ஆசையா செலக்ட் பன்ன புடவையை வேணாம்னு சொல்லி நீயா உன் இஷ்டத்துக்கு செலக்ட் பன்ன..அதுக்கு நான் காசு கொடுத்துட்டேன்..ஆனா அவ என் ப்ரண்ட்..நான் பத்து ரூபாய்ல ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்தா கூட அவ அதை பெரிய பொக்கிஷம் மாதிரி வாங்கிப்பா..இது சரியில்லை அது சரியில்லைனு இதுநாள் வரைக்கும் சொன்னது இல்ல..ஏன்னா..அவளுக்கு அதுல பாசம்தான் தெரியும் உன்னை மாதிரி அவ பணத்தை பார்க்கறது இல்ல..இவ்வளவு பேசுறியே இன்னைக்கு நான் வாங்கி கொடுத்த புடவையா நீ கட்டின இல்லைல உன் புருஷன் வாங்கி தந்த புடவையை தானே கட்டின..ஆனா அவ அவளோட அம்மா அப்பா, அவ புருஷன் எல்லாரும் தனித்தனியா ரொம்ப விலையான புடவை வாங்கி தந்தாங்க..ஆனாலும் அவ என் ப்ரண்ட் வாங்கி கொடுத்த புடவையே போதும் நான் வாங்கி கொடுத்த புடவையை கட்டிட்டு நின்னா..இப்போ சொல்லு உன்கூட இருக்க தோணுமா எனக்கு இல்ல என் ப்ரண்ட்ட பார்க்க ஓட தோணுமா...இவ்வளவுக்கும் உன்கூட நான் இருந்து எல்லா வேலையும் செஞ்சேன் அண்ணானு ஆசையா கூப்பிட்டு ஒரு வளையல் போட சொன்னியா இல்ல ஒரு வாய் சாப்பாடு ஊட்ட சொன்னியா? ஆனா அவ நான் போற வரைக்கும் வெயிட் பண்ணி சாப்பிட்டா..அது பாசமா இல்ல நீ சொல்றது பாசமா?.." என்று அவன் கேட்க..அவள் தலைகுனிந்து நின்றாள்..
எங்கே தன் மகன் மகளை வெறுத்துவிடுவானோ என்று பயந்துபோன சுமித்ரா...
"ஏன்டி நீ சும்மா இருக்க மாட்டியா? அவன் அவனோட எல்லா கடமையும் முடிச்சுட்டு தானே அவ ப்ரண்ட்ட பார்க்க போனான்..இதுல என்ன தப்பு இருக்கு..நீ வாங்கின புடவை நகை எல்லாம் அவன் கொடுத்த காசுல தான் வாங்கின அது நியாபகம் வச்சுக்க..அவன் என்ன வேற யாரையோ வா பார்க்க போனான் அவன் ப்ரண்ட்..அதும் இன்னைக்கு அவளுக்கும் வளைகாப்பு அதான் போனான்..அதுக்கு நீ சண்டை போடுவியா"என்று அவரோ சமிக்கு சப்போர்ட் பண்ணி திட்ட..அவரை புரியாமல் பார்த்தனர் ஹர்ஷாவும் விகாஷினியும்.. அவளோ கோவமாய்
"அம்மா உன்னையும் அவ மயக்கிட்டாளா.. நீ கூட அவளுக்காக பெத்த பொண்ணையே பேசுற?" என்றாள் அதற்கு அவரோ
"அவன் செஞ்சது சரிதான்..அதான் அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசினேன்..நீ வாய மூடிட்டு உள்ளே போ..சும்மா ஏடாகூடமாக பேசிட்டு இருந்த அடிச்சுடுவேன் வாயும் வயிருமா இருக்கனு கூட பார்க்க மாட்டேன்..போ" என்று சொல்ல விகாஷினி அழுதுகொண்டே உள்ளே சென்று விட்டாள். பின் ஹர்ஷாவிடம் திரும்பியவர்
"தம்பி நீ உன் ப்ரண்ட்ட பார்க்க போ வா எல்லாம் செய் நான் வேணாம்னு சொல்லல..இப்போ இவ சண்டை போட்டது கூட உன்மேல வெச்ச பாசத்துல தான் அதை புரிஞ்சுக்க..கர்ப்பமா இருக்குற பொண்ணு அழக்கூடாதுபா..அவ ஆசையும் கொஞ்சம் பார்த்து புரிஞ்சு நடந்துக்கபா...நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம்.." என்றவர் அங்கிருந்த சென்று மகளை சமாதானம் படுத்த சென்றார்...சிறிது யோசித்தவன் அவனும் சமாதானம் செய்ய சென்றான்..
"சாரி விகா மா...நான் உனக்கு என்மேல பாசமே இல்லைனு நினைச்சு சண்டை போட்டுட்டேன்..நீ என்மேல எவ்ளோ பாசமா இருக்கனு இப்போதான் புரியுது..என்னை மன்னிச்சுக்கோ...எனக்கு நீ யாரோ இல்ல என் தங்கச்சி..என் தங்கச்சியே என்னை புரிஞ்சுக்கலையேனு தான் எனக்கு கஷ்டம் வேற ஒன்னுமில்ல..அண்ணாவ மன்னிச்சிடுடா" என்று அவன் மன்னிப்பு கேட்க..
"அண்ணா..என்னனா நீ என்கிட்டலாம் மன்னிப்பு கேட்டுட்டு..நானும் புரிஞ்சுக்காம சண்டை போட்டுட்டேன் நீயும் என்னை மன்னிச்சிடுனா..நீ உன் ப்ரண்ட்ட பார்க்க போ வா நான் எதும் சொல்லல..நான் புரிஞ்சுக்கிறேன்" என்றாள்..அவள் கண்களை துடைத்துவிட்டவன் அவளை தன் தோளோடு சாய்த்துக்கொள்ள..அவன் பாசத்தை பார்த்தவர் தன் மகன் தன் கைவிட்டு போகமாட்டான் என்று நம்பிக்கையை வளர்த்தார்..

நீயே வாழ்க்கை என்பேன்Where stories live. Discover now