15.15.. நீயே வாழ்க்கை என்பேன்
அந்த வீடியோவில் இருந்தது இதுதான்..
டீனும் டாக்டரும் பேசிக்கொண்டது..
"ஏன் சார் ஷியாம் சாரை மட்டும் இந்த விஷயம்ல சேர்க்காம வெளியே அனுப்பிடுறீங்க?"
"அவனுக்கு சின்ன தப்புனா கூட பிடிக்காது..அவன்லாம் பணத்துக்காக வேலை பார்க்கலை..சேவை மனப்பான்மையோட செஞ்சுட்டு இருக்கான்..இப்படி நாம வசதி இல்லாத ஆக்சிடென்ட் கேஸை மூளை செயலிழக்க வெச்சு அவங்க உடல் உறுப்புகளல வெளிநாட்டுகாரனுக்கு விக்கிறோம்னு தெரிஞ்சாலே போதும் அவன் நேரா சி.பி.ஐ கிட்டயே போய் நிப்பான்..அதோட நம்ம ஹாஸ்பிடலுக்கு சீல் வைக்க வேண்டியதுதான்..நாம ஃபீஸ் வாங்குறதுக்கே அவன் நம்மலை ஏதோ வேற்றுக்கிரக வாசி மாதிரி பார்ப்பான் இன்னும் இதுலாம் தெரிஞ்சா அவ்ளோதான்..
நான் வெளியே நல்லவன்னு பேர் வாங்க அவன் சொன்னதுலாம் செஞ்சு இருக்கேன்..ஆனா அவனுக்கு தெரியாம இந்த illegal work பன்றேன்னு தெரிஞ்சா அவ்ளோதான்..கேஸ் போட்டு உண்டு இல்லலனு செஞ்சிடுவான் அதனால தான் அவனை இப்படி அடிக்கடி வெளியே ஆபரேஷன்க்கு அனுப்பிட்டு தான் இந்த வேலைய செய்ய முடியும்.." என்றார் டீன்.
"sir he is just an employee of ur hospital அவருக்கு ஏன் இப்படி பயப்படுறீங்க. வேலைய விட்டு தூக்கிட்டா போச்சு"
"யோவ் நீ என்ன லூசா..அவன் world famous neuro sergion..வெளிநாட்டுல லாம் அவனை ரொம்ப அதிகமான சம்பளம்க்கு கூப்பிடுறாங்க..ஆனா அவன் நான் சேவைமனப்பான்மையோட இருக்கேன்னு நினைச்சுகிட்டு இந்த ஹாஸ்பிடல் விட்டு போகாம இருக்கான்..இந்த ஹாஸ்பிடலுக்கு இவ்வளவு நல்ல பேர் வர அவன்தான் காரணம்..அவன் இல்லைனா நம்ம ஹாஸ்பிடலுக்கு இவ்வளவு goodwill and collection இல்ல..அதனால தான் அவனை வெச்சுட்டு இருக்கேன்..ஆனா..அவனால என்னோட இந்த வேலைக்கு ஆபத்துனா அடுத்த நிமிஷம் அவனை என்ன வேணா செய்வேன்."
"சரி சார்..இப்போ இந்த ஃபேஷண்ட் ஷியாம் சார் ஃபேஷண்ட் தானே சார் அவர் வந்து விசாரிச்சா என்ன சொல்றது.."
"அதான்யா என் ஃப்ளானே..அவனை வெளியே ஆபரேஷன்க்கு அனுப்பிட்டேன்..இப்போ அந்த ஃபேஷண்ட்க்கு ஆபரேஷன்ல ஆக்ஸிஜன் சப்ளைல கார்பன் டை ஆக்ஸைட் லைட்டா கலந்து கொடுத்தா ஆபரேஷன் failure patient brain dead so diedனு சொல்லிட வேண்டியது தான்..அப்பிடியே அந்த ஃபேஷண்ட் பேரண்ட்ஸ்கிட்ட உடல் உறுப்பு தானம்னு கேட்டு நாம சைன் வாங்கி நம்ம வேலைய முடிச்சுட வேண்டியது தான்.."
"சார் பேரண்ட்ஸ்கிட்ட சைன் வாங்கினா அது லீகல்தானே சார் எப்படி illegal ஆகும்.."
"நீ ஏன்யா இப்படி இருக்க..பேரண்ஸ்ட்கிட்ட சைன் வாங்குறது நம்ம வேலைக்கு அவங்களால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுனு தான் ஆனா சைன் வாங்கின அப்புறம் நாம என்ன பன்றோம்னு யார் கேட்க போறா அவங்களுக்கு அவங்க body parts சரியா பொருந்தல அது இதுனு காட்டிட்டு நம்ம வேலைக்கு யூஸ் பன்னிக்க வேண்டியது தான்.."
"இவ்ளோ ரிஸ்க் எடுக்கனுமா சார்"
"ரிஸ்க் இல்லாம நாம வசதியா வாழ முடியாதுயா..போ..போய் formalitiesah முடி..அவன் வர்றகுள்ள.." என்றார் டீன்.
சரியென அந்த டாக்டர் சென்று விட டீன் அங்கேயே இருந்து தன் ஆட்களுக்கு உடல் உறுப்புகளை எங்கே எப்படி கொண்டு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்த சமயம்தான் சஞ்சனா சிக்கியது..
இந்த வீடியோவை பார்த்து உறைந்து போன ஷியாம் உடனடியாக சஞ்சனாவிற்கு கால் செய்ய அவள் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என்று வர அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று எண்ணியவன் உடனே இந்த செய்தியை போலீசிடம் சொல்ல வேண்டும் என எண்ணியபடி போலீஸ் ஸ்டேஷன் செல்ல அந்த போலீஸோ அந்த டீன்வோட ஆள் என்பது தெரியாமல் அவனிடமே கம்ப்ளைண்ட் கொடுத்து விட்டு வந்தவன் சமிக்கு ஃபோன் செய்ய அவளுக்கு நாட் ரீச்சபிள் என்று வர யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று எண்ணியவன்..
தன் மொபைலை எடுத்து ஹர்ஷாவிற்கு டையல் செய்தான் அவனும் எடுக்காமல் போக..தன் மொபைலில் இருந்த அந்த வீடியோவையும் அத்துடன் தனக்கு இதன்மூலம் ஏதேனும் ஆபத்து வந்தால் சமியும் குழந்தையும் அவன் பொறுப்பு என்று அவனுக்கு வாட்ஸ் அப் அனுப்ப அது போகவில்லை.. சரியென மெயில் செய்துவிட்டு கிளம்பினான் அந்த ஹாஸ்பிடல் டீனை பார்க்க..
அங்கு அவரோ அடுத்த உடல் உறுப்பு கடத்தலில் ஈடுபட்டு இருந்தார்..
அங்கு சென்றவன் டீனிடம் சண்டை போட அவனிடம் சமாதானம் பேச முயற்சித்தார் டீன்..
"சரி சரி ஷியாம் உன்னோட வேலை இந்த ஹாஸ்பிடல்க்கு முக்கியம் உனக்காக நா..நான் இந்த வேலையை விட்டுடறேன்..ஆனா அதுக்கு நீதான் எனக்கு ஹெல்ப் பன்னனும் சரியா" என்று கேட்க
என்ன என்பதுபோல் பார்த்தான் ஷியாம்.
"இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா ஹாஸ்பிடல இழுத்து மூட வேண்டி வரும்..அதனால இந்த விஷயத்தை வெளியே சொல்லிடாதே ஷியாம்..இனிமேல் இந்த தப்பை கண்டிப்பா செய்ய மாட்டேன்..என் டாக்டர் தொழில் மேல சத்தியம்..இனி இந்த illegal வேலைய செய்யல..ஆனா நீ வெளியே சொல்லிட்டா மொத்தமா எல்லாம் போய்டும் அப்புறம் உன் இஷ்டம்.. எனக்கு எதுவும் பிரச்சினை இல்லை ஆனா இங்க வேலை செய்யுற எல்லாரோட நிலமை யோசிச்சு பாரு ஷியாம்.. எல்லாரோட வேலை போறதுக்கும் நீங்க காரணம் ஆகிடாதீங்க ஷியாம்.." என்றார் டீன் வார்த்தைகளை ஜாக்கிரதையாய்..
சிறிது நேரம் யோசித்தவன் "சரி நான் இப்போதைக்கு இதுக்கு ஒத்துக்கறேன்..நீங்க இதை நிறுத்தலைனா நான் கேஸ் ஃபைல் பண்ணிடுவேன்.." என்றான் ஷியாம் அப்போதைக்கு..
"கண்டிப்பா ஷியாம் நான் சொன்னா சொன்னத செய்வேன்னு உனக்கு தெரியுமே..நீ சொன்னதை நீ காப்பாத்து.." என்றபடி சென்று விட்டார்...அதனால் ஏற்கனவே கொடுத்த புகாரினை வாபஸ் பெற்றான்..
அப்போது ஏதோ யோசனையில் சென்றுவிட்டான் ஷியாம் ஆனால் வீட்டிற்கு சென்றுதான் யோசித்தான் சஞ்சனாவை பற்றி..
சற்று யோசித்தவன் டீன்க்கு ஃபோன் செய்து சஞ்சனாவை பற்றி விசாரிக்க அவள் வேலையை விட்டு சென்றுவிட்டாள் என்று கூற சரியென விட்டவன் நேரே அவள் வீட்டிற்கு சென்று விசாரிக்க அவளை காணவில்லை என்றே தகவல் வந்தது..
இரண்டு நாட்கள் கழித்து மர்ம நபர்களால் பெண் மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை என்று செய்தி வர இடிந்து போனான் ஷியாம்..
இதைப்பற்றி டீனிடம் கேட்க அவரோ..
"அந்த பொண்ணு வேலையில இருந்து கிளம்பினது தான் தெரியும் இந்த சம்பவத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை..
நீ வேணும்னா யாரை வேணும்னாலும் விசாரிச்சுக்க" என்று கூறி மழுப்ப அவன் சந்தேகம் சற்று குறைந்தது ஆனால் முழுதாய் மறையவில்லை.. அதனால் தன் போலீஸ் நண்பனிடம் சஞ்சனாவை பற்றி விசாரிக்க சொன்னான்..அவன் ரகசியமாய் விசாரித்ததில் ஒரு சிசிடிவி ஃபுட்டேஜ்ஜில் டீனின் ஆட்கள் சஞ்சனாவை பிடித்ததும் காரை விட்டு டீன் இறங்கி அவர்களிடம் பேசுவதும் இருந்தது..அதை ஷியாமும் பார்க்க அவனுக்கு கோவம் தலைக்கேற டீனின் மேல் கம்ப்ளைன்ட் பதிவு செய்தான்..இதை தெரிந்து கொண்ட டீன் ஷியாம் இருந்தால் எப்போதும் தனக்கு ஆபத்து தான் என்று எண்ணி அவனை கொல்ல சொல்ல ஆக்ஸிடென்ட் செய்ய முடிவு செய்து ஷியாம் தன் மனைவி மகனுடன் வெளியே சென்று வீடு திரும்பும்போது அவனது வண்டியை ஆக்ஸிடென்ட் செய்ய வைத்தனர்...
இதையெல்லாம் தெரிந்த ஹர்ஷாவிற்கு உலகமே இருண்டு விடும் போல இருந்தது..