4.. நீயே வாழ்க்கை என்பேன்

47 1 2
                                    

இன்ஸ்பெக்டர் அப்படி சொல்லி சென்றதையே சிந்தித்துக்கொண்டு இருந்தான் ஹர்ஷா..
"யாரா இருக்கும் அப்படி அண்ணா மேல கொலைவெறி வர்ற அளவுக்கு அவர் கெட்டவர் இல்லையே...எல்லாருக்கும் நல்லது தானே யோசிச்சு யோசிச்சு செய்வார்...ஒருவேளை அவரோட அப்பா அம்மாவா?  சே..சே..இருக்காது பெத்த பிள்ளையை சாகடிக்க யாராவது நினைப்பாங்களா?
ஆனா நாம போய் கூப்பிட்டப்போ கூட அவங்க வரலையே..பிள்ளையே வேணாம்னு தானே சொன்னாங்க..
ஆனா...ஏதோ இருக்கு..கண்டுபிடிக்கனும்..ஒருவேளை சமி க்கு ஏதாவது தெரியுமா? ஆனா இப்போ அவ இருக்குற மனநிலைல எப்படி கேட்கிறது? சரி பார்க்கலாம்" என்று யோசித்தபடி குழந்தையை தன் மார்பிலேயே உறங்க வைத்து அவனும் உறங்கி விட்டான்...
இங்கோ...
முன்னிரவு முதல் தற்போது நடந்தது வரை யோசித்துக்கொண்டு இருந்தாள் சமிக்க்ஷா...ஷியாமை சந்தித்தது முதல்...
ஷியாம் ஆந்திராவின் பிரபல மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனையின் நியுராலஜி ஸ்பெஷலிஸ்ட்...
அங்கு அவன் மருத்துவமும் பார்ப்பான் கல்லூரி மாணவர்களுக்கு பாடமும் எடுப்பான்..
அப்படி ஒருநாள் கல்லூரி செமினார்க்காக வேறு ஒரு கல்லூரியில் இருந்து இவர்கள் கல்லூரிக்கு வந்து இறங்கினார்கள் ஹர்ஷாவும் சமிக்க்ஷாவும்...காலேஜ் செமினார்க்காக...
ரெண்டு பேரும் அறுந்த வாலுங்க..அவங்க சேட்டைக்கு அளவே இருக்காது...சமிக்க்ஷா மிகவும் குறும்பானவள்...
ஒருநாள் அவர்களது செமினாரில் ஷியாம் அவனது presentation கொடுக்க..இவர்கள் இருவரும் அவனது presentationஐ கவனிக்காமல் அவர்கள் இருவரும் அரட்டை அடித்துக்கொண்டு இருக்க அவர்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி presentationஐ முடித்தான் ஷியாம்...
பின்னர் இவர்கள் இருவரின் முறை வர...இருவரும் கொடுத்த presentationல் அப்படியே அசந்து விட்டான் ஷியாம்..ஏனெனில் அவன் கொடுத்த presentation detailsம் அவர்கள் சேர்த்து நன்றாக புரியும்படி விளக்கம் கொடுத்தனர்...அவர்கள் கவனிக்கவில்லை என நினைத்தால் அவர்கள் கவனித்து அதன் விளக்கம் கொடுத்தது அவனை வியப்பில் ஆழ்த்த...செமினார் முடிந்ததும் அவர்களை சந்தித்து பேச சென்றான்..
"hi guys... I'm shyam.. I'm the neurologist in this hospital and lecturer for neuro students..may i know ur names please?"
"mr.shyam உங்களுக்கு தமிழ் தெரியாதா? presentationல கூட நல்லா தமிழ் பேசினீங்களே..." என்று இருவரும் கேட்க
"ஓஓ.. தெரியுமே..."
"அப்போ தமிழ்லயே பேசுங்க" என்றனர்...
"ஓஓ...மன்னிச்சுக்கோங்க...நான் உங்க பேரை தெரிஞ்சுக்கலாமா?" என்றான் ஷியாம்..
"ஏன் சார் பேரு தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க எங்க பேர்ல ஏதாவது ட்ரஸ்ட் ஸ்டார்ட் பண்ண போறீங்களா? இல்ல ஏதாவது கல்வெட்டுல பொறிச்சு வெக்க போறீங்களா?" இரண்டும் சேர்ந்தே கேட்க...
"இல்ல..இல்ல..இவளை லவ் பண்ண போறேன்" என்றான் ஷியாம்...இருவரும் அதிர்ந்து அவனை பார்க்க..
அவன் மெல்லியதாய் சிரித்துவிட்டு "இப்போ பேரை தெரிஞ்சுக்கலாமா?.. அப்புறம் பேரே தெரியாத பொண்ணை லவ் பண்றேன்னு எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க..." என்று அவன் கூற
இவன் என்ன லூசா என்ற பாணியில் இருவரும் பார்க்க..முதலில் சுதாரித்து கொண்ட ஹர்ஷா
"மிக்க நன்றி.. உங்களுக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்.. ஏன்னா..இந்த லூசை போய் லவ் பண்றேன்னு வந்து நின்னீங்க பார்த்தீங்களா அந்த மனசு..பெரிய பெரிய மனசு சார் உங்களுக்கு...but உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு...உங்க phone number address லாம் கொடுங்க சார்...அப்பாகிட்ட பேசி உடனே உங்களுக்கு கட்டி வெச்சுடுறேன்..அப்புறம் இவ பேரு சமிக்க்ஷா அண்ட் என் பேரு ஹர்ஷா..நாங்க நியுரோ final year students..." என்றான் ஹர்ஷா... அங்கே அவளோ அவன் சொன்னதன் அர்த்தம் புரியாதவள் போல பார்த்துக்கொண்டு இருந்தவள் ஹர்ஷா பேசியதில் நினைவு வந்தவள் அவனை அடிக்க கையை ஓங்க அவன் தப்பித்து விட ஷியாம் மீது அடி விழுந்துவிட..
"அண்ணா..இப்பவே அடி விழ ஆரம்பிச்சுடுச்சு நீங்க எஸ்கேப் ஆக பழகிக்கோங்க..." என்று ஹர்ஷா கூற...
"டேய்..உன்ன" என்று அவள் துரத்த போக..அவன் ஓடிவிட..ஷியாம்மை பார்த்தவள்
"மன்னிச்சுக்கோங்க... அவன் புரியாம பேசிட்டான்...நான்..நீங்க..அப்படிலாம் எதுவும் இல்ல...நீங்க எங்களை வெறுப்பு ஏத்ததான் இப்படி சொன்னீங்கனு தெரியும்...i'm so sorry...அடிச்சதுக்கு...நான் கிளம்பறேன்.." என்று கிளம்ப போனவளை தடுத்தவன்...
"நான் வெறுப்பு ஏத்தலாம் சொல்லைங்க...நிஜமாவே சொன்னேன் ஏன் என்னை பிடிக்கலையா?"  என்றான் ஷியாம்.
அந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அவள் "எனக்கு என்ன சொல்ல தெரியல..கொஞ்சம் டைம் கொடுங்க..என் friend ஹர்ஷா கிட்ட பேசிட்டு சொல்றேன்" என்றாள் சமிக்க்ஷா..
"உங்க friend என்னை வேணாம்னு சொல்லிட்டா..?"
"அப்போ எனக்கும் வேணாம்"
"ஓஓ..அவ்ளோ டீப் ப்ரண்ட்ஷிப் ஆ.."
"அவன் என்னோட bestie யாருக்காகவும் எதுக்காகவும் அவனை நான் விடமாட்டேன் அவனும் என்னை விட மாட்டான்..அவன் உங்களை ஓகே பண்ணா நானும் ஓகே பண்ணுவேன் ஆனா எங்க ப்ரண்ட்ஷிப்ப பிரிக்க நீங்க யோசிச்சா கூட அடுத்த நிமிஷம் நாம பிரிஞ்சு இருப்போம்.." என்றாள் கர்வமாக...
"ஹப்பாடா...என்னா ஒரு ப்ரண்ட்ஷிப்.. நான் ஹர்ஷாவா இருந்து இருக்க கூடாதானு தோணுது...இருந்தாலும் உங்க பாசம் அப்படியே இருக்கட்டும்... எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு உங்க நட்பு..அப்புறம் உங்க வாலுதனம் கூடவே எல்லாத்தையும் நோட் பன்ற attention எல்லாம்..என்னால எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்க ப்ரண்ட்ஷிப் க்கு பாதகம் வராது..அதுக்கு நான் கியாரண்டி.. யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க...இது என் மொபைல் நம்பர் அண்ட அட்ரஸ்...விசாரிச்சுக்கோங்க.." என்றுவிட்டு அவன் கிளம்பிவிட...இவளோ அவன் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தாள்...

நீயே வாழ்க்கை என்பேன்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin