14.14... நீயே வாழ்க்கை என்பேன்
சமியின் பெற்றோரிடம் பேசி ஒருவழியாக சம்மதம் வாங்கினான் ஹர்ஷா.
பின் சமியிடம் சென்று கேட்க..
அவளோ வரவில்லை என்றாள்..
"ஏன் ஜானு.? உங்க வீடு அளவுக்கு எங்க வீடு வசதி கம்மி தான் ஆனா..நீ கொஞ்ச நாள் அங்க வந்தா உனக்கு கொஞ்சம் மனசு மாறும்ல..ப்ளீஸ் ஜானு வா..குழந்தையும் அப்பா இல்லாம ரொம்ப ஏங்கி இருக்கான்..அவனுக்கும் ஒரு சேஞ்ச் வேணும்ல..புரிஞ்சுக்க சமி..ப்ளீஸ் வா சமி.." என்றான்..சிறிது நேரம் யோசித்தவள் சரியென சம்மதித்தாள்..
அங்கே அவள் வருவதாக கூறி ஹர்ஷாவின் தாய் விகாஷினியிடம் சொல்லி புலம்பிக்கொண்டு இருக்க..அடுத்த அரை மணி நேரத்தில் அங்கிருப்போம் என்று ஹர்ஷா சொல்லிவிட..சரியென அவளுக்கு தேவையானதை செய்ய சென்றார் அவர்..விகாஷினியும் அவளிடம் கோவம் கொள்ள இது சமயம் இல்லை என அமைதி காத்தாள்...
ஹர்ஷாவின் அறையிலேயே அவளை தங்க வைத்தவன்..அவளை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டான்..இருவரும் அவளிடம் முகம் சுளிக்காமல் நடந்து கொண்டனர்..இவன் யோசனை நன்றாகவே வேலை செய்தது..சமிக்க்ஷா கொஞ்சம் கொஞ்சமாக மாறத்துவங்கினாள்..இப்படியே இரண்டுமாதம் சென்ற நிலையில்..சமியும் அவள் வீட்டுக்கு கிளம்புவதாக சொல்ல சரியென அழைத்து சென்றான் ஹர்ஷா.
அங்கு சென்றபின் நரேன் ஹர்ஷாவை கேட்டு அடம் செய்ய அடிக்கடி அவன் வீட்டிற்கு அழைத்து வருவாள்..இப்படியே ஆறு மாதம் சென்றது..இவளது இந்த செய்கை ஹர்ஷாவின் தாய்க்கும் தங்கைக்கும் துளியும் பிடிக்கவில்லை.. அதை அவளாக புரிந்து கொண்டு போய்விடுவாள் என்று நினைக்க இங்கு இவளோ இவர்களின் வெறுப்பு புரியாமல் சிறு குழந்தைபோல இங்கும் அங்கும் வந்து சென்று கொண்டு இருந்தாள்..ஆனால் முன்பு போல இல்லாமல் ஹர்ஷாவிடம் சிறிது இடைவெளி விட்டே பழகினாள்..அது புரிந்தும் புரியாத மாதிரி காட்டிக்கொண்டான் ஹர்ஷா..
இது ஒருபக்கம் இருக்க ஷியாமின் கொலையை பற்றி ரகசியமாக விசாரித்துக்கொண்டு இருந்தான் ஹர்ஷா..அவன் நண்பன் கிருஷ்ணா விசாரித்ததில், ஷியாமின் மரணம் முழுக்க கொலை ப்ளான் என்பது தெரிய வந்தது..
ஷியாம் வேலை செய்து வந்த நியூரோ ஸ்பெஷலிஸ்ட் செக்க்ஷனில் புதிதாக ஒரு நியூரோ சர்ஜைன் வேலைக்கு சேர்ந்தாள்..அவள் பெயர் சஞ்சனா.. ஷியாமுக்கு அசிஸ்டெண்ட்டாக அவளை நியமனம் செய்தனர் அந்த ஹாஸ்பிடலின் டீன்..ஷியாம் சொல்லித்தர அவளும் எல்லாம் தன் வேலையே கரெக்ட்டாக செய்தாள்..
ஒருநாள்..
ஷியாம் அன்று மிகவும் அவசரம் என வேறு ஒரு ஹாஸ்பிடலுக்கு மூளை அறுவை சிகிச்சைக்கு சென்றுவிட்டான்..இங்கு சஞ்சனா வை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு சென்றான்..அப்போது சஞ்சனா உள்ளே இருப்பது தெரியாமல் அந்த வார்டில் டீனும் வேறு ஒரு டாக்டரும் பேசிக்கொண்டு இருந்ததை கேட்டாள் அவள்..அதை உடனே தனது மொபைலில் பதிவு செய்து இரகசியமாய் ஷியாமிற்கு அனுப்பி send ஆனதும் டெலீட் செய்து விட்டாள்..இவள் மொபைலில் சென்றதற்கான டிக் சவுண்ட் வர பேசிக்கொண்டு இருந்த இருவரும் இவளை பார்த்து விட்டனர்..பின் அவள் பின் கதவு வழியே வெளியே போக முயற்சிக்கவும் அவளை அடியாட்கள் பிடித்து விட்டனர்..பிடித்ததும் அவளுக்கு மயக்க ஊசி போட்டு அங்கு இருந்த அவளை இரகசியமாய் வேறு இடத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர்..அவள் மொபைலை எடுத்து செக் செய்ய அதில் இவர்கள் பேசியது இருந்ததால் அதை அழித்து மொபைலை உடைத்து அங்கேயே புதைத்து விட்டனர்..இவளை இப்படியே விட்டால் இவள் இதுவரை யாருக்கும் தெரியாமல் நடந்ததையெல்லாம் வெளியே சொல்லி விடுவாள் என எண்ணியவர்கள் சஞ்சனாவிற்கு அதிக அளவில் போதை மருந்தை நரம்பு மூலம் செலுத்தி அவளை நாலைந்து பேர் சேர்ந்து சீரழித்து கொன்று அதை எதார்த்தம் போல யாரோ குடிகாரர்கள் அவள்மீது ஆசைப்பட்டு அவளை சீரழித்தது போல மாற்றி விட்டனர்.. ஆனால் அவள் மொபைலை செக் செய்தவர்கள் அவள் பதிவு செய்ததை யாருக்கும் அனுப்ப வில்லை என அவர்களே முடிவு செய்து கொண்டு அவளது மொபைலில் இருந்த வீடியோவை டெலீட் செய்து அவள் மொபைலை தண்ணீரில் வீசி எறிந்து விட்டு சென்றனர்..
ஆனால் அது ஷியாமிற்கு அவள் அனுப்பியது தெரியாமல் போய்விட்டது..
ஆபரேஷன் முடித்து வெளியே வந்த ஷியாம் ஏதாவது முக்கியமான கால்ஸ் வந்துள்ளதா என பார்க்க அதில் சஞ்சனா அனுப்பிய வீடியோவை பார்த்தவன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டான்..உடனே அவளுக்கு ஃபோன் செய்ய அது ஸ்விட்ச் ஆஃப் என வர அவளுக்கு ஏதோ ஆபத்து என இவனுக்கு புரிந்து விட்டது..
அதில் இருந்தது இதுதான்...