44.. நீயே வாழ்க்கை என்பேன்
கிருஷ்ஷை கூட்டிக்கொண்டு கிளம்பிய ஆதி பாதி தூரம் சென்றதும் வண்டியை நிறுத்தினான்..மீரா துறைமுகத்திற்கு செல்லவில்லை என்ற விவரம் வந்ததவுடன் கோவமானவன்..தனது வலதுகையான ராகேஷுக்கு ஃபோன்செய்தான் அவன் ஃபோன் தொடர்பில் இல்லை என வந்தது சிறிது நேரத்தில் அடியாட்களுக்கு அழைக்க அவர்களது ஃபோன் கூட தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது..யோசித்தான்.. அப்போதுதான் அவனுக்கு சில விஷயம் நியாபகத்திற்கு வந்தது..சமியை காப்பாற்ற வந்த ஹர்ஷா கூட வந்தவன் அவனோட ப்ரண்ட் போலீஸ்காரன்..ஆனா சக்தியும் கிருஷ்ணாவும் அவனுடன் வரவில்லை என்பது அப்போதுதான் அவனுக்கு உரைத்தது..உடனடியாக தனது ஆட்களுக்கு ஃபோன் செய்து சக்தி மற்றும் கிருஷ்ஷின் ஃபோன் நம்பர் லொகேஷனை ட்ராக் செய்ய சொன்னான்..அதன்படி ட்ராக்கிங் துறைமுகம் அருகில் இருந்த ஹாஸ்பிடல் மற்றும் அந்த ஏரியாவில் காட்ட தனது ஆட்களுக்கு உடனடியாக தகவலை அனுப்பியவன் கிருஷ்ஷை ஃபாலோ பன்ன சொன்னான்..அதன்படி அடியாட்களும் அவன் சொன்ன கிருஷ்ஷின் மொபைல் லொகேஷனை வைத்து அவனை பின்தொடர்ந்தனர்..இதை யூகித்த ஆதி..ஹாஸ்பிடலில் இரகசியமாய் ஆண் மற்றும் பெண் போலீஸை நர்ஸ் மற்றும் ரூம்பாய் வேடத்தில் விட்டு நர்ஸ் மற்றும் ரூம் பாயை போலீஸ் வேடத்தில் அங்கேயே காவலுக்கு நிற்க வைத்தான்..வைத்தியம் பார்ப்பவர் மருந்துகளை ஆகாஷுடம்(ஆதி ஏற்பாடு செஞ்ச அவன் ப்ரண்ட் தான்) சொல்லி விளக்கியபின்னரே கொடுப்பார்..ஏனெனில் அது சித்த வைத்திய சாலை அதனால்தான்..ஆகாஷும் மருத்துவம் கூடவே சித்த மருத்துவமும் படித்து இருந்ததால் தான் ஆதி அவனை வரவைத்தது..ஆட்கள் மாறியது தெரியாத சர்வாவின் அடியாட்களும் மீராவையும் சக்தியையும் கொல்ல இங்கு சென்று கொண்டு இருக்க.. அங்கு வழியில் ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திய ஆதி..கிருஷ்ஷின் மொபைலை ஆஃப் செய்துவிடும்படி கூற சரியென கிருஷ்ஷும் ஆஃப் செய்துவிட அவன் சிக்னல் கட் ஆகியது அதில் டென்ஷன் ஆன சர்வா அவர்களை தொடர்ந்து செல்லுமாறும் ராகேஷ் கிடைத்ததும் அவனோடு சேரத்து இவர்களையும் கொல்ல சொல்லி விட்டான்.. பின்ன ராகேஷ் மாட்டினா இவனே மாட்டினதுக்கு சமம்..அத்தனை இல்லீகல் வேலைக்கும் அவன் நம்பி அனுப்புவது ராகேஷை மட்டுமே.. அவன் இதுவரை போலீஸ்ஸில் சிக்கியது இல்ல.. மொபைலை ஆஃப் செய்ததும் இல்லை அப்படி பட்டவன் மொபைல் தொடர்பில் இல்லை என்று வர அவன் ஒரு பெரிய ஆள் கிட்டே மாட்டிக்கொண்டான் என்பதை புரிந்தவன் யாரென விசாரிக்க ஆதியை பத்தின தகவல் வர..இவனா.. என யோசித்தான்..
ஏனெனில் தமிழ்நாட்டில் நடந்த இளைஞர்கள் ஆராய்ச்சிக்காக மருந்து கொடுக்கப்பட்டு இறந்த கேஸ் இவன் கையில் தான் சிக்கியுள்ளது..அதை தோண்டி துருவியவன் இப்போது இதிலும் தலையிட்டு இருப்பது எங்கோ இடித்தது..
ஆதி மொபைலை ஆஃப் செய்தவன் சிம்மை வெளியே எடுத்து கிருஷ்ஷிடம் கொடுத்து விட்டு மொபைலை தூக்கி போடுமாறு சொல்ல கிருஷ்ஷும் செய்தான்.. ஏனெனில் சர்வாவின் அடுத்த ட்ராக்கிங்டிவைஸ் மொபைலின் IMEI நம்பர்தான் என அவனும் யூகித்து இருந்தான்...ஆதி வைத்து இருந்தது சர்வாவினுடையதை போன்ற இன்டர்நேஷனல் மொபைல் நம்பர்.. அந்த நம்பரை அவ்வளவு எளிதில் ட்ராக் செய்ய முடியாது..முயற்ச்சித்தாலும் விளைவு ஜீரோ தான்.. அதே சமயம் சர்வா அவன் பேசுவதை கூட ரெக்கார்ட் செய்ய முடியாதபடி ஒரு சாஃப்ட்வேர்ரை உருவாக்கி இருந்தான்.. இதனால் அவன் யாருக்கு ஃபோன் செய்தாலும் யாராலும் ட்ராக் செய்யவும் முடியாது யாராலும் ரெக்கார்ட் செய்யவும் முடியாது..அவன் ஃபோன் செய்தாலும் நம்பரும் காட்டாது..அதனால் தான் அவன் தன் மொபைலில் இருந்தே ஃபோன் செய்வான் எப்போதும் யாருக்கும்..(மக்களே இதெல்லாம் மை கற்பனை மட்டுமே..இதுலாம் உண்மையா பொய்யானு தெரியாது)
இதை ராகேஷின் மொபைல் மூலம் அறிந்த ஆதி உடனடியாக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தான்..அவன் சொன்னதும் புரிந்த கொண்ட கிருஷ் அவன் சொன்னபடியே செய்தான்.. மொபைலை அங்கே இருந்த ஒரு காட்டு நாயின் உடம்பில் கட்டிவிட்டான் கிருஷ்ணா..
பின்பு அவர்கள் வேறு ஆள் மாதிரி உடை அணிந்து வேறு வண்டியில் புறப்பட்டனர்..காட்டுப்பகுதியில் ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தியதும் ஆதியின் ஆட்கள் அவனுக்கு சல்யூட் செய்ய.. அதை ஏற்றவன்
"என்ன ஆச்சு ஏதாவது தெரிஞ்சுதா?" என கேட்க.. அவர்களோ இல்லை என்பது போல தலையாட்டினர்.
"நான் அவனை பார்க்கனும் ஆதி சார்.. நான் உண்மைய வரவைக்க முயற்சி செய்யுறேன்" என்றான் கிருஷ்..
"வித் ஃப்ளஷர் கிருஷ்" என்றபடி அவனை அழைத்து செல்ல.. அங்கே பார்க்க பாழடைந்த கட்டிடம் போல இருந்த வீடு உள்ளே செல்ல செல்ல நீண்டுகொண்டே சென்றது.. ஓரிடத்தில் நின்ற ஆதி சுவற்றில் கை வைத்து அழுத்த அந்த பாதை ஓபன் ஆனது..
அந்த வழி மீண்டும் காட்டு பாதை போல் ஆனது அந்த வழியே செல்ல அங்கிருந்த ஒரு அறையில் ராகேஷ் அமைதியாக அமர்ந்து இருந்தான்..அவனை பார்த்த கிருஷ்ஷுக்கு கொலைவெறி வர.. அவன் அமைதியாக அமர்ந்து இருந்தது சந்தேகத்தை தர திரும்பி ஆதியை பார்த்தான்.. அவன் கண் சிமிட்டி சிரித்தான்..
"நீங்க இருக்கீங்களே இன்னும் இப்படிதானா?" என்று கேட்டு சிரித்தான் கிருஷ்..
"என்ன செய்ய பழக்கதோஷம் போக மாட்டேங்குதே" என்றபடி
"பேசு அவன்கிட்ட பேசிப்பாரு" என்று சந்திரமுகி ஸ்டைலில் சொன்னவன்..அங்கிருந்த இடத்தில் நின்று கொண்டான்..தூரத்தில் நின்றபடியே ராகேஷை பார்த்த கிருஷ்..
"சோ.. நீ அவன பத்தி எதுவும் சொல்ல மாட்ட அப்படித்தானே..நீ நல்ல விசுவாசினு எனக்கு புரியுது ஆனா உன் தலைவன் சர்வாவுக்கு புரியலையே..என்ன அப்படி பார்க்கிற நீ எதேச்சையா அந்த சர்வா கொடுத்த ஃபோன்ல பேசாம உன் ப்ரண்ட்க்கு உன் பெர்சனல் நம்பர்ல இருந்து பேசினியே சர்வாவை பத்தி அத நாங்க கேட்டு ரொம்பநாள் ஆச்சு..ஏன் உன்ன இத்தனை நாளா விட்டு வெச்சோம்னு யோசிக்கிறியா? நீங்க மீராவுக்கு வலை வீசுறீங்கனு தெரியும் சரி என்னதான் பன்றீங்கனு நாங்க உன்னை ஃபாலோபன்னா அந்த சர்வா மீராவை தூக்கினதும் இல்லாம சமியும் சேர்த்து தூக்கி இப்போ அவ உயிருக்கே ஆபத்தை வர வெச்சு இருக்கீங்களேடா..இதுக்கு மேலயும் உன்ன வெச்சு நாங்க என்ன செய்யபோறோம்.. அதான் அந்த சர்வாவே உன்னை கொல்ல சொல்லிட்டானே..உனக்கு இதுதான் சரியான தண்டனை இப்படியே சாவு" என்றபடி திரும்பினான் கிருஷ்.. அவன் பேசியதையே யோசித்துக்கொண்டு இருந்த ராகேஷ்..ஒரு முடிவோடு எழுந்து செல்ல காலை எடுத்துவைக்கவும் கரண்ட் ஷாக் அடிக்கவும் சரியாக இருந்தது..பதறிப்போய் பின்னால் சேரிலேயே விழ..இருவரும் அவனை திரும்பி பார்த்தனர்.. அவனை பார்த்து சிரித்த கிருஷ்.
"ஏன்டா உன்னை இவ்ளோ ப்ரீயா விட்டு இருக்காங்களே ஏன் என்னானு யோசிக்க மாட்டியா? நீயெல்லாம் ஒரு ரவுடி..அந்த இடத்தை சுத்தி கரண்ட் ஷாக் இருக்கு ஒரு அடி வெச்சா லேசா தான் ஷாக் அடிக்கும் வீட்லலாம் எர்த் பாஸ் ஆகுமே அப்படி ரெண்டாவது அடி எடுத்து வெச்ச ஃபோர்ஸ்ஸா கரெண்ட் ஷாக் வரும் அடுத்த நிமிஷம் தூரமா தூக்கி அடிக்கும் இல்லனா கருகி சாவ..இப்படி கொல்றது இவரோட ஃபேவரிட்..உண்மையை ஒத்துகிட்டு வாழுறதா இல்ல சாகுறதானு நீயே முடிவு பன்னிக்க..வர்றேன்" என்றபடி கிருஷ் கிளம்ப ஆதியும் கிளம்பினான்.. இருவரும் ஹாஸ்பிடல் செல்ல.. அங்கு மீராவை கொல்ல ஆள் அனுப்பி இருந்தான் சர்வா.. அவர்களும் மாறுவேடத்தில் உள்ளே நுழைய பார்க்க வசமாய் சிக்கி கொண்டனர்..அவர்களையும் அதே இடத்திற்கு ஃபேக் அப் செய்துவிட்டு ஆதியும் கிருஷ்ஷும் வர..சக்தி அவர்களிடம் என்ன ஆனது என கேட்க நடந்ததை சொன்னதும் கேட்டவன்..
"சமி மேடம்க்கு எப்படி இருக்கு இப்போ?" என்று கேட்க அப்போதுதான் அவனுக்கு நியாபகம் வந்தது சமியை பற்றி எதுவும் விசாரிக்கவில்லை என்று.. பதறியவன் தன் மொபைலை தேட ஆதி தன் மொபைலை நீட்ட தன் மொபைலை அவன் தூக்கி போட்டது நினைவு வர ஆதியின் மொபைலில் இருந்து ஹர்ஷாவிற்கு ஃபோன்செய்ய முதலில் யோசித்தவன் அந்த சர்வா வோட நம்பரும் இப்படித்தானேவரும் என எண்ணியவன்
அட்டென் செய்ய மறுமனையில் கிருஷ்ஷின் குரல் வர ஒரு நிமிடம் பயந்து விட்டான் ஒரு வேளை அவனும் அந்த சர்வாவிடம் சிக்கி விட்டானோ என்று
அவனும் இவன் நிலை உணர்ந்து நடந்ததை உடனே கூற சற்று சமாதானம் ஆக இங்கு சமிக்கு நடந்ததை பற்றி கூறினான்..அதை கேட்ட கிருஷ்ணா உடனே வருவதாக கூறினான்..அவனை தடுத்த ஹர்ஷா..
"இல்ல கிருஷ்ணா நீ அங்க இரு..அது மீராக்கும் சக்திக்கும் சேஃப்டி..நமக்கு உதவி செய்யபோய் அவங்க ரெண்டுபேரும் ஆபத்துல மாட்டிக்கிட்டாங்க..மீரா ஜானு ரெண்டு பேருல யாராவது ஒருத்தர தான் காப்பாற்றமுடியும்னு நினைச்சேன் இப்போ ரெண்டுபேரும் சேஃப் இனி அவங்கள பத்திரமா பாதுகாக்க நாம அவங்க பக்கத்தில் இருக்கிறது ரொம்ப அவசியம்..இங்க நான் பார்த்துக்கறேன் நீ அங்க இருந்து மீரா குணமானதும் கூட இருந்து அவங்கள கூட்டிட்டு வாடா..உன்ன நம்பி இருக்கா மீரா அந்த நம்பிக்கைய காப்பாத்து..நான் இங்க கவனிச்சுக்கறேன்.." என்றவன் வைத்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.