33.நீயே வாழ்க்கை என்பேன்

8 0 0
                                    

33.

நேரே ஹர்ஷாவிடம் ஓடியவர்..அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்..
"எங்களை மன்னிச்சிடுடா ஹர்ஷா..உன்னையும் சமியையும் புரிஞ்சுக்காம நாங்க தப்பு பண்ணிட்டோம்டா..கேட்பார் பேச்சை கேட்டு நானும் ஆடிட்டேன்டா..பணத்தாசை பெத்த புள்ள பாசத்தை மறைச்சிடுச்சுடா..இந்த பாவத்தை நான் எங்கே போய் கரைப்பேன்.முடிஞ்சா என்னை மன்னிச்சிடுபா..இனி உன்னை கஷ்டபடுத்துற எதுவும் நாங்க செய்யவே மாட்டோம்.." என்றபடி அவன் காலில் விழப்போக அவரை அதிர்ந்து தடுத்தான் ஹர்ஷா..
"என்னை திரும்ப திரும்ப பாவம் பன்னவனா மாத்தாதீங்கமா...நீங்க அவளை பேசினதால தான் நான் அவ கழுத்துல தாலி கட்டினேன்..ஆனா அவ என்னடானா நான் ஏதோ கொலை குத்தம் செஞ்ச மாதிரி என்னை விட்டு தூரமா போறா..ஆனா பேசின உங்கள மட்டும் மன்னிச்சுட்டா..எது எப்படியோ இப்பவாச்சும் நீங்க அவள புரிஞ்சுக்கிட்டா போதும்..பேபி இப்பவாச்சும் என்னையும் ஜானுவையும் புரிஞ்சுக்கிட்டியா..?" என்று விகாஷினியை பார்த்து கேட்க அவனை ஓடிச்சென்று அணைத்துக்கொண்டு அழுதாள்..
"என்னை மன்னிச்சிடுங்கனா..உங்க ரெண்டு பேரையும் தப்பா புரிஞ்சிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..உங்க பாசத்தை அவங்க பங்கு போட வந்ததா நினைச்சு தப்பு தப்பா செஞ்சுட்டேன்..மன்னிச்சிடுங்க ரெண்டு பேரும்.." என்று அழ அவளை அணைத்து ஆறுதல் படுத்தியவன்..
"நான் கூட நிறைய உங்கமேல கோவ பட்டுட்டேன்டா..ஆனா அந்த கோவம் பாசம்தான்னு எனக்கு புரிய வெச்சவ சமிதான்..உங்க கோவம் மாறும்னு சொன்னா அதுபடியே ஆகிடுச்சு.. யார் வந்தாலும் அண்ணன் தங்கச்சி பாசத்தை பங்கு போட முடியாதுடா..அதை முதல்ல புரிஞ்சுக்க.." என்று கூறியவன் அவளை தோளோடு அணைத்துக்கொள்ள..தன் அண்ணன் பாசம் தனக்கு கிடைத்த மகிழ்ச்சியில் அவனுடன் சேர்ந்துக்கொண்டாள் விகாஷினி.. இதை பார்த்துக்கொண்டு இருந்த சமியின் கண்கள் கலங்க அவர்களை பார்த்துக்கொண்டு இருந்தாள்..அவள் அருகில் வந்த சுமித்ரா..
"குழந்தையை கூட்டிட்டு வர்றியாமா எனக்கு என் பேரனை பார்க்கனும் போல இருக்கு.." என்றார் ஆசையாக.
"அவன் அம்மா வீட்டுல இருக்கான்மா..நாளைக்கு கூட்டிட்டு வர்றேன்.." என்று கூற அவளை தடுத்த ஹர்ஷா.
"உங்களுக்கு உங்க பேரனை பார்க்கனும்னா வீட்டுக்கு வந்து பாருங்கமா..யாரோ மாதிரி தூக்கிட்டு வர சொல்றீங்க" என்று கேட்க
"அதுவும் சரிதான் என் பேரனை நான் அங்க வந்து பார்த்துக்கறேன்.."
"வந்தா மட்டும் போதாது எங்க கூட தங்கனும்.." என்றனர் இருவரும் ஒன்றாக..அவர்களை ஆசையாய் பார்த்தவர்..
"கண்டிப்பா வந்து தங்குவேன்டா..இனி என் பொழுது என் பேரன் பேத்திகளோட தான்.." என்று கூற
"இருக்குறது ஒரு பேரன் ஒரு பேத்தி அது என்ன பேத்திகள்னு சொல்றீங்க?" என்றான் ஹர்ஷா பதிலை எதிர்பார்த்து..
"நீ பெத்து தர போற பேத்தியும் சேர்த்து சொன்னேன்டா..ஆஸ்திக்கு பேரன் இருக்கான் ஆசைக்கு பேத்தி வேணாமா?" என்றார் அவர்..
"எங்களுக்கு நரேனே போதும்மா.."
"அப்படி தனியா விடக்கூடாதுபா இதோ இப்போ உனக்கு உன் தங்கச்சி இருக்கா அவளுக்கு நீ இருக்க நாளைக்கு அவன் தனியா நின்னுட கூடாதுல..அவனுக்குனு ஒரு ஆறுதல் துணை வேணும்பா"
"ம்மா..போதும்..நாங்க கிளம்புறோம் வா ஜானு" என்று அவளை அழைத்துவிட்டு திரும்பினான்..சுமித்ராவின் கலங்கிய கண்களை கண்ட சமிக்கு எதுவோ போல் இருக்க..
அவரது கையை ஆதரவாய் பிடித்துக்கொண்டாள்..
அவளை பார்த்தவர் "நான் தப்பா ஏதும் பேசிட்டேனாமா..என் மகன் வாரிசுனு எதிர்பார்த்தது கூட தப்பா" என்று கேட்க
"இல்லம்மா..உங்க எதிர்பார்ப்பு தப்பே இல்ல..நீங்க உங்க பேத்திய கண்டிப்பா கொஞ்சுவீங்க.." என்று ஆறுதல் கூறினாள்..அவளை அதிர்ந்து ஹர்ஷா பார்க்க..சுமித்ராவோ ஆசையாய் அணைத்து
"சீக்கிரமா பெத்து கொடுமா அவள வளர்த்து என் பாவத்தை போக்கிக்கிறேன்.." என்று கூற..அப்போது தான் அவளுக்கு உரைத்தது தன் மூலமாகத்தான் பேத்தி வருவாள் என்று..சங்கடத்துடன் அவள் ஹர்ஷாவை பார்க்க அவனோ காதலாய் பார்த்தான் அவளை..இவன் வேற நேரங்கெட்ட நேரத்துல இப்படி பார்க்கிறானே..
"நா..நாங்க கிளம்பறோம்மா" என்றவள் விகாஷினியிடமும் விடைபெற்று கிளம்ப இருவரும் மவுனமாய் வீடு வந்து சேர்ந்தனர்..அதற்குள் அங்கோ..

நீயே வாழ்க்கை என்பேன்Donde viven las historias. Descúbrelo ahora