21. நீயே வாழ்க்கை என்பேன்

10 0 0
                                    

21.

சமியின் பெற்றோர் வாசலில் நிற்பதை பார்த்த சமி அம்மா என்று அழுதுகொண்டே ஓடிச்சென்று அவள் அம்மாவை அணைத்து அழுதாள்..அவளை ஒருவழியாக சமாதானம் செய்தனர் அவள் தாய் மீனாட்சியும் சுந்தரமும்..
அதற்குள் கதவை திறந்த கிருஷ்ணா..
"உள்ள வாங்கமா வாங்கபா" என்று அழைக்க அப்போதுதான் வெளியே நின்று இருப்பது புரிய உள்ளே செல்ல போகும் நேரம்
"ஒரு நிமிஷம்" என்றார் மீனாட்சி.. என்னவென எல்லோரும் திரும்பி பார்க்க அவரோ....
"முன்ன எப்படியோ ஆனா இப்போ நீங்க கல்யாணம் ஆனவங்க..அதும் வேற எங்கேயும் போகாம இங்கதான் வந்து இருக்கீங்க..அதான் ஆரத்தி எடுத்து உள்ள வர சொல்லலாம்னு" என்று இழுக்க..அவரை முறைத்தாள் சமி..
"நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்கமா வாங்க ஆரத்தி கரைக்க எடுத்து தர்றேன்" என்றபடி அவள் முறைப்பை கண்டுகொள்ளாமல் உள்ளே அவரை இழுத்துக்கொண்டு போனான் கிருஷ்ணா..
அவள் முறைப்பை பார்த்த ஹர்ஷா கண்டும் காணாதது போல முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டு நின்றான்.. சிறிது நேரத்தில் கையில் ஆரத்தியோடு வந்த மீனாட்சி..
"ஹர்ஷா குழந்தையை கிருஷ்ணாகிட்ட கொடுத்துட்டு நில்லு" என்று சொல்ல
"அம்மா இவன் எப்பவும் என் பையன்தான்..ஆரத்தி மூனு பேருக்கும் எடுங்க போதும்.." என்று கூற பெருமையோடு அவனை பார்த்தனர் அனைவரும் ஒருத்தியை தவிர..
ஆனால் பாவம் அவளை யாருமே கண்டுகொள்ளவில்லை..
(சரி விடு சமி நீ கெத்த விடாதே பங்கு)
அனைவரும் உள்ளே செல்ல அந்த வீட்டை பார்த்தனர்..உள்ளே நுழைந்ததும் பெரிய ஹால், அதை ஒட்டினாற்போல கிட்சன் அதன் இடது புறம் ஒரு பெட்ரூம் வித் அட்டாச்டு பாத்ரூம்.. கிட்சனில் இருந்து ஒரு பெரிய ட போன்ற வடிவில் கல்லால் கட்டி இருந்தனர் அதை அப்படியே கொண்டு சென்று படியில் சேர்த்து மாடிக்கு போகும் படிக்கட்டுகள் அமைந்து இருந்தது..(என்னா ரசனைடா இந்த கிருஷ் புள்ளைக்கு 😍) மாடியில் ஒரு பெட்ரூம் என்று நேர்த்தியாக அழகாக இருந்தது...
(அட இப்படித்தான் எங்க வீட்டை கட்ட ஆசைப்பட்டு அது எப்படி எப்படியோ வந்துடுத்து..இப்போ எதுக்கு அந்த கதை அதை அப்புறம் சொல்லலாம்..)
சமிக்கு வீடு மிகவும் பிடித்து போனது..அதை அவளின் கண்கள் இரண்டும் ரசனையோடு விரிந்ததை வைத்தே புரிந்து கொண்டான் ஹர்ஷா..
(பின்ன இத்தனை வருஷம் குப்பை கொட்டி இருக்கானே அவ கூட இதுகூட தெரியாமலா இருப்பான்)
இவர்களை வரவேற்று உட்கார சொன்னவன்
"எவ்ளோ நாள் கூப்டு இருப்பேன்..அப்போலாம் வராம இப்பதான் நீ வர்ற இந்த வீட்டுக்கு" என்றான் கிருஷ்.
"நான் என் குடும்பத்தோட வாழ இங்கதான் வரணும்னு இருந்து இருக்கு என்ன செய்ய?" என்று ஹர்ஷா கூற சட்டென நிமிர்ந்த சமி
"ஏன் இங்க தங்கனும்னு" கேட்டாள்.
அவள் லூசு என்பதை அறிந்தவன் அவளுக்கு விளக்கினான்.
"நாம திடீர்னு எங்க வீட்ல சண்டை போட்டுட்டு வந்துட்டோம்ல..அதனால நாம தங்க ஒரு வீடு வேணும்ல அதான் இங்க கூட்டிட்டு வந்தான் கிருஷ்..அவனுக்கும் யாரும் இல்ல சோ அவன்கூட நாம இருந்தா அவனுக்கும் ஒரு ஆறுதலா இருக்கும்ல..அதான் சமி" என்றான் ஹர்ஷா.
"எங்க அப்பா அம்மா கூடவே" என்று அவள் இழுக்க
"இல்ல ஜானு அது சரியா வராது..உன்னை என் சம்பாத்யத்தில் வாழ வைக்கிறது தான் என்னோட அம்மாக்கும் விகாஷினிக்கும் ஒரு பதிலா இருக்கும் அதும் இல்லாம நான் சம்பாதிக்கிறேன் என் மனைவி பிள்ளையை பார்த்துக்குற அளவுக்கு என்னால சம்பாதிக்க முடியுது அப்புறம் என்ன?"
என்றான் ஹர்ஷா.
ஏற்கனவே அவன் தாலி கட்டியதில் வருத்தத்தில் இருந்தவள் தன் கணவன் இதுவரை தன்னை தன் பெற்றோரிடம் இருந்து பிரிக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் இவனோ என் நண்பனாக இருந்தும் என் உணர்வுகளை புரிந்து கொள்ள வில்லையே என கோவமாய் ஆனவள் மனதில் அவன் அவளுக்கு செய்வதையெல்லாம் தப்பாகவே புரிந்து கொண்டாள்.. ஆனால் அவள் இன்னும் அவனை புரிந்துக்கொள்ளாமல் இருந்தாள்..
தன்னவனின் சத்தியத்தை காப்பாற்றவும் அவள் குழந்தையையும் அவளையும் பாதுகாக்கவே அவன் அவளுக்கு தாலி கட்டினான் என்று பாவம் அவள் புரிந்து கொள்ளவே இல்லை..இது புரியும் சமயம் என்னவாகுமோ அவள் நிலமை..
"எங்க அப்பா அம்மா" என்று கோவத்தை அடக்கி அவள் கேட்க.
"எங்களுக்கு என்ன சமிமா..நாங்க இங்கதானே இருக்கோம்..நீ என்ன இங்கயேவா இருந்துட போற எங்களை வந்து பார்ப்பல..நாங்களும் வருவோம் உன்னை குழந்தையை பார்க்க அப்புறம் என்னம்மா" என்றார் சமியின் தந்தை..

கண்ணுக்கு அரண் என எண்ணினேன்..
  என் கண்ணீரை துடைக்க உன் கரம் நீட்டினாய்..
இனம்புரியாத என் காதல்
  நட்பில் மறைந்திருந்ததை கண்டெடுத்தேன்..

கண்டெடுத்த தருணம்...
  உன் கணவனாய் ஆனேன்...
இனி நீயே என் வாழ்க்கை என்பேன்...

நீயே வாழ்க்கை என்பேன்Où les histoires vivent. Découvrez maintenant