53.நீயே வாழ்க்கை என்பேன்

1 0 0
                                    

53.. நீயே வாழ்க்கை என்பேன்

தன் தாயின் ஸ்பரிசம் பட்டதும் அவளை கண்டு கொண்ட நரேன்..
இவ்வளவு நாள் எங்க போன ஜானு மா என்று கேட்ட கேள்வியில் இருவரும் ஸ்தம்பித்து போயினர்.. எப்படி அவன் ஒரே தொடுதலில் கண்டு பிடித்தான் என..
"இவங்க ஜா.. ஜானுமா இல்லடா நரேன் குட்டி.. இவங்க சாரா மேடம்" என்று அவளை முறைத்தபடி அவன் கூற அவனை கெஞ்சுவது போல பார்த்தாள் சமி.. அதில் அவன் அமைதியாகி விட
இல்லையென தலையாட்டிய நரேன்..
"இல்ல ஹர்ஷிப்பா..இது ஜானு.. நம்ம ஜானுதான்..உனக்கு தெரியலையாப்பா..  ஐ நோ ஜானு டச்.." என்று கூற அவனை அப்படியே அணைத்துக்கொண்டாள் சமி..
"சின்ன குழந்தைக்கு கூட தெரிஞ்சு இருக்கு நான் தான் லூசு மாதிரி இருந்து இருக்கேன்ல சமி" என்று அவன் வருத்தமாய் சொல்ல.. அவன் இன்னும் அவளை ஜானு என அழைக்காமல் இருப்பதை உணர்ந்தவள்..
"நீ இன்னும் என்னை மன்னிக்கலையா ஹர்ஷி.." என்றாள் ஏக்கமாக.
"அப்படிலாம் இல்ல ச..ஜானு..உடனடியா என்னால எதையும் ஏத்துக்க முடியல அதான் ஜானுனு வரல.. அதான் இப்போ சொல்லிட்டேனே.. பழச பேசி எதும் ஆக போறது இல்ல ஜானு..விடு ஜானு.." என்று அவளை சமாதானம் செய்ய அவளும் சரி எனக்கூற.. அவளை அணைக்க சென்றான் அவன் ஆனால் வயிறு இடித்ததால் அவனால் அவளை அணைக்க முடியவில்லை..அவள் அதை கண்டு சிரிக்க அவன் அவளை திருப்பாமல் அவன் அவளது பக்கத்தில் வந்து பக்கவாட்டில் இருந்து அணைத்தான்.. அதில் மகிழ்ந்தவள் நிமிர அவர்களை முறைத்தபடி நின்றிருந்தனர் இன்பாவும் ஆதியும்..
"வாங்கடா நல்லவனுங்களா.. உங்களை போய் நம்பினேன் பாரு.." என்று அவன் திட்டத்துவங்கியதும் இடைமறித்து கத்தினான் இன்பா..
"என்னடா.. என்ன பெருசா கொலை பன்னவங்கள பேசுற மாதிரி பேசுற.. நாங்க கொலைய கூட அசால்ட்டா செஞ்சுட்டு போய்ட்டே இருப்போம்.. அந்த கொலைகாரப்பாவிக்கிட்ட இருந்து இந்த குடும்பத்தை காப்பாத்த நினைச்சதுக்கு எங்களுக்கு துரோகி பட்டம் கொடுப்பியா  நீ? ஆமான்டா நாங்க உண்மைய உன்கிட்ட இருந்து மறைச்சோம்.. ஏன் எதனாலனு ஒரு நிமிஷம் யோசிச்சியா நீ? நீ பாட்டுக்கு உன் பொண்டாட்டிக்கு நினைவு வரலனு ஓய்ஞ்சு உட்கார்ந்துட்ட அந்த சர்வா எப்போடா இந்த குடும்பத்த அழிக்கலாம்னு கங்கணம் கட்டிட்டு சுத்துறான்.. இந்தாடா கொன்னுக்கனு மறைஞ்சு இருக்கவள கூட அவன் முன்ன காட்டி கொல்ல சொல்றியா.. சரி அப்படியே அப்போவே உனக்கு இவதான் சமி அந்த பொண்ணு சாரானு தெரிஞ்சு இருந்தா என்ன செஞ்சு இருப்ப.. வாயும் வயிருமா இருக்க இவளை காப்பாத்துவியா இல்ல இந்த குழந்தையை காப்பாத்துவியா? இல்ல உன் குடும்பம் இவ குடும்பம்னு இருக்காங்களே அவங்கள காப்பாத்துவியா? ஏன் அந்த சர்வாவே ஏன் உன்னையும் இவளையும் இவ்ளோ மாசம் உயிரோட விட்டு வெச்சு இருக்கான்.. சமி கோமால இருக்கா அவளால எதுவும் வெளியே போகல அவ உயிருக்கு போராடிட்டு இருக்கானு நினைச்சு தான் அவன் இவ்ளோ மாசம் இவள கண்டுக்காம இருக்கான்.. இல்லனா உன்னால தைரியமா குடும்பத்த வெளியே கூட்டிட்டு போக முடியுமா? ஏதோ அந்த சாரா பிள்ளையால இவ்வளவு நடந்து இருக்கு உனக்கு..அதனால தான் நாங்க உண்மைய மறைச்சோம்..  அதுதான் அப்போதைய சூழ்நிலையில சரினு பட்டுச்சு.. அதான் செஞ்சோம் இப்போ அதுக்கு என்னாங்குற?" என்று மூச்சு விடாமல் கத்தி நிறுத்தினான் இன்பா.. அவனையே வாயை பிளந்துகொண்டு பார்த்துக்கொண்டு இருந்தனர் அனைவரும்.. அனைவரையும் பார்த்தவன்..
"வாடா ஆதி நாம போலாம் அவன் கிடக்கான்" என்று ஆதியை தன்புறம் இழுக்க ஹர்ஷா அவனது கையை இழுக்க என்னவென்று இன்பா பார்க்க..
"சாரிடா.. நான் என்னோட பக்கமே யோசிச்சதுல உங்க சைடு நியாயத்தலாம் யோசிக்கலடா..மன்னிச்சிடுங்கடா" என்று கேட்க அவர்கள் முறுக்கி கொண்டு நின்றனர்.. இன்பாவின் அருகில் அவன் காதோரம் சாய்ந்த ஆதி..
"ஜீ.. கொஞ்சம் ஓவரா பெர்ஃபாமன்ஸ் பன்றோமோ.. அப்புறம் அடிய கிடிய போட்ர போறாரு.. கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமே.." என்று இரகசியமாய் கூற அவனிடம் திரும்பிய இன்பா..
"அவ்ளோ ஓவராவா போறோம்.. போவோம் என்ன பன்னிடுவான்" என்று பேச..
"ஆமாஜீ.. ஆல்ரெடி நீங்க விஜயகாந்த் மாதிரி லாங் டையலாக் பேசினதுல அவரு கன்ஃப்யூஸ் ஆகி இருக்காரு.. அப்புறம் நாம நடிக்கிறோம்னு ஈஸியா மாட்டிப்போம்.." என்று ஆதி கூற..அவர்கள் பேசியது கேட்ட ஹர்ஷா..
"டேய் ஃப்ராடுங்களா.. நான்கூட நீங்க நிஜமாவே கோவமா இருக்கீங்கனு நினைச்சா ரெண்டுபேரும் சேர்ந்து நாடகமாடா ஆடுறீங்க..உங்கள கொல்லாம விடமாட்டேன்டா" என்று அவன் துரத்த..
"ஜீ மாட்டிக்கிட்டோம் ஜீ.. ஓடுங்க ஜீ ஓடுங்க உயிர் முக்கியம் அமைச்சு..ஓடிடுங்க.." என்று ஆதி கத்திக்கொண்டே ஓட..
"அடப்பாவி ரகசியமாக பேசுறேன்னு கோர்த்துவிட்டானே" என்று அலறியபடி அவனும் ஓட..
"உங்கள விடமாட்டேன்டா" என்று அவர்களை துரத்த அவ்வளவு நேரம் அவர்களின் அட்டகாசத்தை கண்ட சமியும் நரேனும் சிரிக்க அங்கே வந்த சாராவின் தந்தை..அவரும் இவர்களை பார்த்து சிரிக்க.. அவரை கண்டதும் அவர் அருகில் வந்த சமி..
"அப்பா சாராவுக்கு சரியாகிடும்பா..அவங்களுக்கு நல்லா ட்ரீட்மெண்ட் பார்க்கலாம்பா.." என்று கூற.. அவளின் தலையில் கை வைத்து தடவியவர்..
"இந்த ஆறு மாசத்தில உன் முகத்தில சிரிப்பை இப்போதான்டா பார்க்கறேன்.. சந்தோஷமா இருக்குடா..எப்பவும் சநதோஷமா இருடா.." என்று கூற அவரது தோளில் சாய்ந்துகொண்டவள்
"நீங்க எல்லாரும் என்கூட இருக்கிறதுதான் பா எனக்கு சந்தோஷம்.." என்றாள்.. அவரும் அவளை ஆதரவாக தடவி கொடுத்தார்..
எந்த உறவும் இல்லாமல் உறவாய் மாறிய அந்த தந்தை மகளின் உறவு அவர்களை பார்த்துக்கொண்டு இருந்த ஹர்ஷாவின் கண்களில் மகிழ்ச்சி வந்தது..
இன்பாவும் ஆதியும் கூட அவர்களின் பாசத்தை பார்த்து நெகிழ்ந்தனர்..
"சரிபா ரொம்ப அழுகாச்சியா இருக்கு.. இந்த ஆர்தர் ஜீ வேற ரெம்ப பொலம்புறாங்க.. என் கதையில இவ்ளோ அழுகாச்சிலாம் வைக்கவே மாட்டேன்னு இப்போலாம் அந்தம்மா அழறாங்க..அதனால கொஞ்சம் ஹாப்பி மைண்ட்டா மாத்தலாமா..வாங்க எல்லாம் கொஞ்சம் வெளியே போய்ட்டு சுத்திட்டு வரலாம்.." என்றான் ஆதி.
எல்லோரும் சிரித்தபடி சரியென தலையசைக்க..ஹரஷாவோ யோசனையுடன் பார்த்தான்.. அவனை பார்த்த இன்பா..
"என்னடா யோசனை?"
"இல்ல.. நீங்கலாம் போய்ட்டு வாங்க.. நான் சமிய.. இல்ல சாராவை பார்த்துக்கறேன்" என்று கூற.. சமி ஏக்கமாய் அவனை பார்க்க
"இல்ல ஜானு உன்னை காப்பாத்த அவங்க தன் உயிரையே பணயம் வைச்சு இருக்காங்க இப்போ இந்த நிலமையில இருக்காங்கனா அதுக்கு நாமதானே காரணம்.. அவங்கள நாமதான் பார்த்துக்கொள்ளனும்.." என்றான் அவனை பார்த்து சரி என்பது போல் அவள் தலையசைக்க..
"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க வெளியே போய்ட்டு வாங்க நான் சாராவ பார்த்துக்கறேன் எனக்கும் என் பொண்ணு கூடவே இருக்கனும்னு ஆசையா இருக்கு..நீங்க வருத்தபடாம போய்ட்டு வாங்க" என்றார் சாராவின் தந்தை..
("ஆமா ஆர்தர்ஜீ  இவரு பேரு என்னா? நீங்க சாராவின்தந்தை தந்தைனு சொல்றீங்க- ஆதி.
"பயபுள்ள கோர்த்து வுட்டானே..ஹான் வந்து நான் இப்போ என்னா சொல்றது.. அதாவது டா தம்பி"
"எதே தம்பியா?"
"இல்லீங்கனா"
"வாட் அண்ணாவா?"
"😢ஏதாவது ஒன்னுல வந்து செட் ஆகிக்கடா..ஏன்டா இப்படி"
"நீங்க ஆதினே கூப்பிடுங்க.. வயச ஜாஸ்தி பன்னாதீங்க.. அப்புறம் சைட் அடிக்க ஆகாது."
"ரைட்டுடா.. அதாவதுடா ஆதி அந்த ஐய்யா பேரை நான் எப்போவோ மறந்துட்டேன்.. யாரையாவது கேட்கலாம்னா த்தூனு துப்பிடுவாங்க.."
"இப்ப மட்டும்"
"ஈஈஈஈஈ... அது துடைச்சுக்கலாம்னு வச்சுக்க.. இருந்தாலும் கதையில ரொம்பநேரம் வர்றாரா அதான் அவரை பெயர் தெரியாத காரணத்தால் அப்படியே கூறி பழகிவிட்டேன்..கண்டுக்காதடா"
"ஓஓ..ஓஓஓ அப்படி அப்படி.. சரி நீங்க முன்னாடி போட்ட எப்பில தேட வேண்டியது தானே அவர் பேரை.."
"ஏன்டா அவ்ளோ டைம் இருந்தா நான் அப்டேட் ஒழுங்கா போட மாட்டேனா"
"வாஸ்தவம்தான்..இருந்தாலும்"
"டேய் படிக்கிற மக்களே இவ்ளோ கேள்வி கேட்கல நல்ல ஃபிகர்னு உன்னை கூட்டிட்டு வந்தா இப்படியா பன்னுவ?"
"சரி சரி விடுங்க.. தப்பிச்சுக்கோங்க"
"போடா போ.. போய் நல்ல போலீஸ்ஸா நடந்துக்க"
"அஹான்.."
"ஹான்")
சமி ஹர்ஷா நரேன் மற்றும் இன்பா ஆதி அனைவரும் கிளம்பி வெளியே சென்றனர்..அந்நேரத்தில் அந்த சர்வாவின் ஹாஸ்பிடல்ல இருந்து வந்த டாக்டரும் தீவை சுற்றிபார்க்க கிளம்பினார்.. அவருக்கு இவர்களை பற்றி ஏதும் தெரியாததால் இவரும் நன்கு சுற்றிவர அவர்களும் சுற்றி வந்தனர்.. ஓரிரு இடங்களில் அந்த மருத்துவர் செல்ஃபி எடுக்க..இவர்கள் அந்த நேரம் அவரை கடக்க அவரது புகைபடங்களில் இவர்களும் இருந்தனர்.. அவன் அதை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைக்க.. எதேச்சையாக அதை கண்ட சர்வாவின் இல்லீகல் வேலையில் ஈடுபடும் டாக்டர் ஒருவன் பார்த்து சர்வாவின் பி.ஏ விற்கு சொல்ல அவன் அதை உடனடியாக சர்வாவிற்கு தெரிவிக்க அவன் அதை வாங்கி பார்த்தான்..
"என்னை நிம்மதியா என் வேலையை செய்ய விடாம செஞ்சுட்டு நீ அங்க சந்தோஷமா இருக்கியாடா ஹர்ஷா.. இத்தன மாசமா தேடி நீ கிடைச்சுட்ட உன் பொண்டாட்டிக்கு நினைவு வந்துடுச்சா.. இந்த பொண்ண எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே" என்று அவன் அவளது புகைபடத்தை உற்று பார்க்க சமியின் உருவம் தெரிய அதிர்ந்து பார்த்தான்
"அப்போ இவ அந்த டாக்டர் சாரா இல்லையா..சமியா..டேய் என்னையே ஏமாத்திட்டீங்களா இத்தனை நாளா இவள நான் சரியா கவனிக்காம விட்டுட்டேனே.. அன்னைக்கே இவ கதைய முடிச்சு இருக்கனும்.. இவள கொல்லாம விட்டது தப்பா போச்சு.. இப்போ மட்டும் என்ன குடும்பத்தோட கொன்னு கடல்ல வீசுங்கடா.. உடனே அவளை" என்று கத்தினான்.. அவன் கத்தலில் அரண்டு போன அவன் பி.ஏ உடனடியாக சமியின் குடும்பத்தை கொல்ல ஆள் ஏற்பாடு செய்தான்..
அங்கு சமியின் பெற்றோருக்கும் கிருஷ்ணாவிற்கும் விவரம் தெரிவிக்கப்பட்டு அவர்களும் உடனடியாக வரவழைக்க பட்டனர்.. இரண்டு நாட்களில் அவர்கள் வந்து இறங்க.. சமியை பார்த்தவர்கள் அவளை கட்டி தழுவி அவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அனைவரும் மகிழ்ந்தனர்.. அதற்குள் சாராவிற்கு ஆதியின் யோசனைபடி கேரளாவில் வைத்தியம் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்து இன்பா அவர்களை அழைத்துக்கொண்டு கேரளா செல்வது என முடிவானது.. இந்த இரண்டு நாட்களில் அனைத்து தகவல்களும் சர்வாவை சென்று அடைய.. ஆதியும் இன்பாவும் கிருஷ்ணாவும் இருப்பதால் சிறிது யோசித்தவன்.. யாரும் அறியாமல் அவர்களை கொல்ல ப்ளான் செய்தான்..

நீயே வாழ்க்கை என்பேன்Donde viven las historias. Descúbrelo ahora