26.
யாரா இருக்கும் என்று யோசித்து யோசித்து மண்டை காய்ஞ்சு போனது தான் மிச்சம் ஹர்ஷாவிற்கு..
மறுநாள்..
ஒரு எமெர்ஜெண்சி கேஸ்க்கு அவசரமாக கிளம்பி கொண்டு இருந்தான் ஹர்ஷா..அவனை மறித்து நின்றவள்
"எங்கே இவ்ளோ சீக்கிரம் ஓடுற?" என்று கேட்டாள் சமி.
"ஓடலாம் இல்ல..அதுக்கு நீயும் வேணும் இப்போதைக்கு வேலைக்கு கிளம்பறேன்.. நேத்தே டெஸ்ட் பண்ண வேண்டிய ஃபேஷண்ட்க்கு இன்னைக்கு டெஸ்ட் பண்ணாதான் அவங்க tumour எந்த அளவுக்கு இருக்குனு சொல்ல முடியும்" என்று பேசியவன்..கிளம்ப எத்தனிக்க..தன் மொபைலை தேடினான்..
"ஜானுமா மொபைல பார்த்த?"
என்று கேட்க கோவத்தில் உச்சிக்கே சென்றவள்...அவனை முறைத்துக்கொண்டே நிற்க..
" என்ன இவ பதிலே சொல்லாம இருக்கா" என எண்ணியபடி திரும்பி அவளை பார்த்தவன் திருதிருவென முழித்தான்..
"இப்ப நாம என்ன கேட்டுட்டோம்னு இவ இப்படி நிக்கிறா?" என்று யோசிக்க..
("அடேய் மானங்கெட்ட மடையா உன் கடைமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா? நேத்து நடந்ததை கொஞ்சம் யோசிடா"
"நேத்து நடந்ததா? என்ன நடந்துச்சு?"
"அவ அடிக்கிறானா ஏன் அடிக்க மாட்டா..போடா டேய் உனக்குலாம் ஹெல்ப் பண்ண வந்தேன் பாரு"
"இந்தாமா சமி புள்ள நீ பூஜையை ஆரம்பி")
"அச்சச்சோ என்ன இப்படி பொசுக்குனு போட்டு கொடுக்கறீங்க?" என்றபடி யோசிக்க நேத்த அந்த லவ்வர்டூ நியாபகம் வர..அச்சச்சோ செத்தேன்..எவனோ வெச்ச ஆப்புல வசமா மாட்டிகிட்டேனே" என்று யோசித்தபடியே அவள் அருகில் சென்றவன்..
"ஜானுமா என்னை நம்புடா நான் உன்கிட்ட ஏதாவது மறைச்சு இருக்கேனா இல்ல நம்மல பத்திலாம் நான் யார்கிட்ட சொல்ல போறேன் நீயே யோசி..இது யாரோ பன்ற சதிடி..கட்டின பொண்டாட்டி நீ இருக்கும்போது நான் ஏன்டி லவ்வர்லாம் செட் பன்ன போறேன்..அவ்ளோலாம் வொர்த் இல்லடி நம்புடி" என்றான் காலில் விழாத குறையாக
"உன்னைலாம் நம்ப மாட்டேன் நானும் உன்கூட வந்து அவ எவனு கண்டுபிடிச்சு ரெண்டு பேரையும் தோல உரிக்காம விட மாட்டேன் என்னையும் கூட்டிட்டு போயே ஆகனும்" என்றாள் அவள் விடாப்பிடியாக.
"எல்லாம் என் நேரம்டி..வாரும் வந்து தொலையும்" என்றபடி பிள்ளையை தூக்க போக.
"பிள்ளைய தொடாதேடா.." என்றாள் கோவமாக
"ஏன்டி" என்று பரிதாபமாக பார்க்க..
"நான் மட்டும்தான் உன்கூட வர்றேன் அவன் இல்ல" என்றாள் சமி.
"அவன் சின்ன குழந்தைடி தனியாவா விட்டுட்டு போக முடியும்.." என்றான் புரியாமல்
"அந்த வேலைலாம் எங்களுக்கும் தெரியும். அம்மா பார்த்துப்பாங்க அவனை..அவங்க அப்பவே வந்துட்டாங்க" என்றவள்
"கிளம்பு" என்று கூற குழந்தையை ஏக்கத்துடன் பார்த்தவன் அவன் அருகில் சென்று உறக்கம் கலையாதவாறு ஒரு முத்தமிட்டு விட்டு வந்தான் இதை பார்த்துக்கொண்டு இருந்த சமியின் மனதில் அவன் உயர்ந்து நின்றான்..
இருவரும் கிளம்ப நரேனை பார்த்துக்கொள்ள மீனாட்சி வந்து இருந்தார்.. ஷியாமின் மறைவுக்கு பின் இங்கே வந்ததவன் சமிக்காக இங்கேயே ஒரு ஹாஸ்பிடலில் வேலைக்கு சேர்ந்துவிட சமியையும் அவன் வேலைக்கு அழைத்தான் மனமாறுதலுக்கு ஆனால் அவள் மறுத்துவிட விட்டு விட்டான்..இன்று அவனுடன் அவள் வெளியே வருவது சந்தோஷமே என்றாலும் உள்ளூர ஏதோ ஒன்று அவனை உறுத்திக்கொண்டே இருந்தது..ஹாஸ்பிடலுக்கு வந்ததும் அவனது அறையில் அவளை அமர்ந்து இருக்குமாரு சொன்னவன் தன்னை பார்க்க வரும் ஃபேஷண்ட்க்கு அவளிடம் சிகிச்சைக்கு அனுப்பும்படி சொல்லிவிட்டு வேகமாய் நகர்ந்தான் அந்த கேஸை பார்க்க.. அவன் சென்றதும் அவனது மொபைலுக்கு மெஸேஜ் வர அதை எடுத்து பார்த்தவள் கோவத்தின் விளிம்புக்கு போனாள்..
பின்னே..
"என்ன டார்லிங் நீ மட்டும் வருவ கரெக்ட் பண்ணலாம்னு பார்த்தா நீ அவகூட வந்து இருக்க..சரி இருக்கட்டும் நான் scanning report கொடுக்கும்போது மீட் பன்றேன்" என்று இருந்தது..
(" செத்தான்டா ஹர்ஷா")
"வரட்டும் எவ வர்றா எவ கரெக்ட் பன்றானு நானும் பார்க்கிறேன்..இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பார்க்காம விடமாட்டேன்.. கொலையே ஆனாலும் பரவாயில்லை" என்று வேக வேகமாக மூச்சு விட்டபடி கோவத்தில புலம்பிட்டு இருந்தா நம்ம சமி.. கரெக்டா எண்ட்ரி ஆனார் நம்ம ஹீரோ..
"என்ன ஜானு ஏசி போய்ட்டு தானே இருக்கு நீ ஏன் இப்படி மூச்சு வாங்குற" என்றான் அறியாதவனாய்.
(" அடேய் உனக்கு லவ்வ சொல்லதான் வராதுனு நினைச்சேன்..இப்போதான் தெரியுது உனக்கு எதுவுமே வராதுனு..இப்படி வாண்ட்டட்டா வந்து அடி வாங்க போறியே உன் விதிய யாராலையும் மாத்த முடியாது")
அவள் அவனை முறைத்துக்கொண்டு இருக்க அந்நேரம் ரிப்போர்ட் எடுத்துக்கொண்டு ஒரு நர்ஸ் உள்ளே வர சமியின் கோவம் பலமாய் ஆனது..
அந்த நர்ஸ்ஸை பிடித்தவள் பளாரென அறைந்தாள்..
"ஏன்டி ஊர்ல எவ்ளோ பேர் இருக்கானுங்க அவனுங்கள கரெக்ட் பன்ன வேண்டியது தானேடி உனக்கு என் புருஷன்தான் கிடைச்சானா? இதுல டார்லிங் வேற..எவ்வளவு கொழுப்பு உனக்கு.." என்று அவள் கத்த அவளிடம் இருந்து அந்த நர்ஸ்ஸை காப்பாற்ற போய் அவனும் மாட்டிக்கொண்டான்..
"ஏன்டா பொண்டாட்டி நான் இருக்கேன் நீ இங்க இவகூட கூத்தடிச்சுட்டு இருக்க.உனக்கு எவ்ளோ திமிரு" என்று கத்த அந்த பெண்ணோ எதுவும் புரியாமல்
"மேடம் நீங்க ஏதோ தப்பா" என்று பேச துவங்க
"நிறுத்துடி..அடுத்தவ புருஷனை அடைய நினைக்கிற நீயெல்லாம் பேசவே தகுதி இல்லாதவ..இதுவே கடைசி இன்னொரு முறை இவன் பின்னாடி சுத்துன தொலைச்சிடுவேன் பார்த்துக்க" என்று கூற அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தான் ஹர்ஷா.
அதிர்ச்சியில் கன்னத்தை பிடித்தபடி பார்க்க..
"சார்" என்று அந்த பெண்ணும் அதிர்ச்சியாக கூற.
"இன்னொரு வார்த்தை பேசின அவ்ளோதான்" என்றவன் அந்த பெண்ணிடம் திரும்பி
"மன்னிச்சிடுங்க சிஸ்டர்..அவ ஏதோ புரியாம தப்பா புரிஞ்சுட்டு உங்கள அடிச்சுட்டா..அவளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்..என்னை உங்க சகோதரனா நினைச்சு மன்னிச்சிடுங்க.. ப்ளீஸ் அவளையும் மன்னிச்சிடுங்க" என்றான் ஹர்ஷா..
"ஐயோ சார் என்ன சார் இது அவங்க பேசும்போதே புரிஞ்சுக்கிட்டேன் அவங்க ஏதோ தப்பா புரிஞ்சு பேசுறாங்கனு..பரவாயில்லை விடுங்க சார்..மேடம் இந்த ஹாஸ்பிடல்ல எல்லா நர்ஸையும் இவர் சொந்த சகோதரியா தான் நினைச்சு பழகுறார்..அதனால அவரையோ மத்தவங்களையோ சந்தேக படாதீங்க..நான் வர்றேன்.." என்றபடி சென்று விட்டாள் அவள்.. இங்க இவளோ அப்படியே உறைந்து உட்கார்ந்து விட்டாள்..
அவள் அருகில் வந்தவன்
"வா போலாம்" என்று கூற கலங்கிய கண்களுடன் அவன் பின்னே சென்றவள் அவன் பைக்கை ஸ்டார்ட் பன்னி "உட்கார்" என்றதும் உட்கார்ந்து விட்டாள் இருவரும் எதுவும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தனர்..