31.
சிறிது நேரம் அமைதியாய் அவளை பார்த்த கிருஷ்ணாவும் ஹர்ஷாவும் கிருஷ்ஷின் சைகையில் பேசத்துவங்கினான்..
"சமி" என்று அழைத்தவன் அவள் அவனை தீவிரமாய் பார்த்தாள்..அவன் சமி என்று அழைத்தால் அவன் முக்கியமாய் பேசப்போகிறான் என்று அர்த்தம்..அதனால் அவனை தீவிரமாய் பார்த்தாள்..
"சமி நீ அண்ணாவோட ஃபோஸ்டிங்க்கு ஹாஸ்பிடலுக்கு ஸ்டாஃப் கிடைச்சுட்டாங்க..சக்தினு ஒருத்தர்..அண்ணா மாதிரியே அவரும் பெரிய சர்ஜனாம்..அதான் கேட்டதும் அண்ணாவோட ஃபோஸ்டிங்க்கு ஒகே சொல்லிட்டாரு..நீ அங்க கேட்டுட்டு சொல்லுடா ஏன்னா அவங்க வேற யாரைனா எடுத்து இருந்தா வேணாம்னு சொல்லிடலாம்ல அதான்..அப்படியே..நீ வீட்டுல இருக்க வேணாம் நரேனை அம்மா பார்த்துப்பாங்க நீ என்கூட வேலைக்கு வர்ற சரியா.." என்று நிறுத்தி அவளை பார்த்தான்...
சிறிது நேரம் யோசனையுடன் இருந்தவள் "நா..நான் நாளைக்கு காலையில கேட்டு சொல்றேனே..தம்பிய தூங்க வைக்கனும் ந..நான் போறேன்" என்றவள்..சட்டென்று உள்ளே சென்று விட..அவளை விநோதமாய் பார்த்துக்கொண்டு நின்றனர் இருவரும்..மறுநாள்
சமி ஷியாமின் டீனிடம் பேசிவிட்டு ஹர்ஷா சொன்ன விவரமும் சொன்னாள்..அவரும் சரியென வரச்சொல்லி விட்டார்...சக்தியை ஏற்கனவே தெரியும் கேள்வி பட்டுள்ளேன் என்று கூறவும் சமியும் ஷியாமோட ஃப்ளேஸ் என்பதாலேயே அவர் இந்த வேலையை ஏற்றுக்கொண்டதாகவும் கூற அவருக்கு உள்ளுக்குள் ஏதோ தோன்ற அவருடைய குடும்பம் பற்றி விசாரிக்க அவனை பற்றியும் அவன் குடும்பம் பற்றியும் கூற அவருக்கு திருப்தியாக இருக்கவும் உடனே வந்து சேர சொல்லி விட்டார்..அதை அப்படியே ஹர்ஷாவிடமும் கிருஷ்ணாவிடமும் கூற இருவருக்கும் அப்போது தான் நிம்மதியாக மூச்சே விட்டனர்..இருவரின் முகத்தையும் நாசூக்காக கவனித்தவள் முகமும் தெளிவு பெற்றது..பிறகு நரேனை அவன் தூக்கி கொள்ள அவனுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்தவள்..அவனுடன் கிளம்பி சென்றாள்..குழந்தையை தன் தாயிடம் ஒப்படைத்தவள் இருவரும் கிளம்பி ஹாஸ்பிடலுக்கு சென்றனர்.. சக்தியும் சமி சொன்னது போல வேலைக்கு சேர்ந்தான்..அவன் தன்னை பணம் சம்பாதிக்க ஆசைப்படும் இளைஞனாகவே காட்டிக்கொண்டான்..அதனால் அவன்மேல் எந்த சந்தேகமும் வரவில்லை டீனுக்கு..ஆனால் அவனின் மகன் ஏழைகளுக்கு உதவும் குணம் கொண்டவனாக இருந்தவனுக்கு இவன்மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது..தன்னை இயல்பாகவே காட்டிக்கொண்டான் சக்தி..ஹர்ஷாவுடன் வேலைக்கு சென்ற புதிதில் சற்று யோசனையோடே இருந்தவள்..பிறகு அனைவரும் அவளிடம் இயல்பாய் பழக..அவளும் அவள் வேலையில் நன்றே பொருந்திபோனாள்..சில மாதங்களிலேயே நல்ல நியுரோ சர்ஜன் என்ற பெயரும் வாங்கினாள்..இவள் தன் மனைவி என்பதில் பெருமிதமாய் இருந்தான் ஹர்ஷா..கூடவே அவளுக்கு பாதுகாப்பு அரணாகவும் இருந்தான்..
சக்தியிடம் இருந்து கிடைத்த விவரங்களையும் ஆதாரங்களையும் சேகரித்து கொண்டே இருந்தனர்..இருவரும்..
இப்படியே மாதங்கள் செல்ல..ஒருநாள்..
ஹர்ஷா ஒரு முக்கியமான மெடிக்கல் கான்ப்ரன்ஸ்காக டெல்லிக்கு செல்ல வேண்டிய நிலையில் பொருப்பை அவளிடம் விட்டு விட்டு அவன் கிளம்பினான்..கிருஷ் அவளை தினமும் கூட்டிச்சென்று கூட்டி வரும் பொருப்பை ஏற்றான்..தன்னாலேயே தனியாக போக வர முடியும் என்று அவள் சொல்லியும் தன் கடமை தன் தங்கையான அவளை அழைத்து வருவது என்று கறாராக கூறி விட்டான்..அதன்பின் அவள் எதுவும் சொல்லாமல் அவனுடன் செல்ல ஆரம்பித்தாள்...
இதனிடையே ஒருநாள்..ஒரு இரண்டரை வயது பெண் குழந்தைக்கு ஃபிட்ஸ் என்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட அப்போது வேறு யாரும் நியூரோ சர்ஜன் இல்லாததால் அந்த குழந்தைக்கு மருத்துவம் பார்ப்பது சமியின் பெரிய பொருப்பாய் ஆனது..குழந்தையை சோதனை செய்தவள் குழந்தைக்கு முதலுதவி செய்து..உடனே MRI scan செய்யும்படி உத்தரவிட்டு ரிப்போர்ட் வந்ததும் குழந்தையின் பெற்றோரை பார்த்து பேச வேண்டும் என வர..அங்கே விகாஷினியையும் அவள் கணவனையும் கூடவே ஹர்ஷாவின் தாயையும் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள்..அவளை பார்த்தவர்களும் அதிர்ந்து நிற்க..விகாஷினியின் கணவன் மட்டுமே அவளிடம் பேசினான்.."தங்கச்சி..தர்ஷினி இப்போ எப்படி இருக்கா எதுவும் பிரச்சனை இல்லையே..?" என்று தவிப்பாய் கேட்க..தன்னை சமன் செய்து கொண்டவள் பெரிய பிரச்சனைலாம் இல்லீங்கண்ணா..ஆனா..குழந்தைக்கு முதல்லேயே நரம்பு பாதிப்பு இருந்து இருக்கு..அதை அப்போவே கவனிச்சு இருந்தா மருந்து மாத்திரையிலேயே குணப்படுத்தி இருக்கலாம்..ஆனா இப்போ.." என்று தயங்கியபடி அவள் நிற்க..
"இப்போ என்னம்மா..சொல்லுமா" என்றான் அவன் தவிப்பாய்..
"பயப்படனும்னு அவசியம் இல்லைனா..சின்னதா ஒரு ஆபரேஷன் பன்னா சரியாகிடும்..வளர்ர குழந்தை தானே இப்போவே செஞ்சிட்டா நல்லது.." என்று அவள் கூற
"உடனே ஏற்பாடு செய்ங்கமா" என்று அவன் கூற..விகாஷினி கோவமாய் அலறினாள்..
"இவ என் குழந்தையை கொல்ல பார்க்கிறா..நான் இவளை பேசினத வெச்சு என் பொண்ணை கொல பன்ன பார்க்கிறா..வேணாம் என்மேல இருக்கிற கோவம்ல என் குழந்தைய பழி வாங்காதே..நான் என் பொண்ணை வேற ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய்க்கிறேன்..நீ அவளை கொன்னுடாதே" என்று கத்தினாள்..சமியோ அதிர்ந்து
"என்ன பேசறீங்க நீங்க?.. நான் என் கடமையைதான் செய்யறேன்..நீங்கதான் தப்பா" என்று அவள் பேச..
அவனும் "காஷினி" என்று கத்த..
"போதும் நிறுத்துடி..என்ன நாடகம் போட்டியோ என் பையன் இத்தனை வருஷம் பெத்து வளர்த்த அம்மாவையும் கூட பொறந்தவளையும் மறந்து உன் பின்னாடி வந்துட்டான்..இப்போ என் பேத்திய கொல்ல ப்ளான் பன்றியா..எங்க பேத்திய பார்த்துக்க எங்களுக்கு தெரியும் நீ வைத்தியம் பார்த்து என் பேத்திய தொலைக்க நான் விரும்பல போ இங்கே இருந்து" என்று கத்த..நர்ஸ் ஓடிச்சென்று டீனை அழைத்து வந்து இருந்தாள் அதற்குள்..அங்கு வந்தவர் என்னவென்று விசாரிக்க..குழந்தையின் விவரத்தை சொன்னவள்..
"இவங்க குழந்தைக்கு வேற நியூரோ சர்ஜன் ரெடி பன்னுங்க சார்" என்றுவிட்டு அவள் திரும்ப..
"குழந்தை கிரிட்டிகல் ஸ்டேஜ்ல இருக்கு ஆபரேட் பன்ன லேட் ஆனா paralisis attack வரலாம்" என்றுவிட்டு கிளம்ப தயாராக அவள் சொன்னதை கேட்ட விகாஷினி தேம்பி அழ..அவளை ஆறுதல் படுத்தினார் சுமித்ரா..ஆனால் டீனோ..
"மிஸஸ்.ஹர்ஷா..இப்போ இருக்க ஒரே நியூரோ சர்ஜன் நீங்க தானே..வேற டாக்டர்கள் வர ஒரு வாரம்மேல ஆகுமே..அதுக்குள்ள குழந்தைக்கு ஏதாவது ஆச்சுனா? நீங்களே பாருங்க சமி" என்றார் அவர்..அவள் தயங்க..
அவள் அருகில் வந்த விகாஷினியின் கணவன்
"தங்கச்சி நீயே என் குழந்தைக்கு ஆபரேஷன் செய்யுமா என் குழந்தையை காப்பாத்தி கொடுமா" என்று கேட்க..
"என்ன உளர்றீங்க நீங்க அவ என் பொண்ணை கொன்னுடுவா" என்று விகாஷினி கத்த
"வாய மூடு நீ ஒழுங்கா கவனிச்சு இருந்தா என் பொண்ணுக்கு இந்த நிலமை வந்து இருக்குமா..உனக்கு உன் வக்கிரபுத்தி தான் பெருசு..மனசாட்சியே இல்லாம அந்த பொண்ணை கேவலபடுத்துறீங்க மனுஷங்களா நீங்க..இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின இனிமேல் நீ என்கூட இருக்குறத பத்தி நான் யோசிக்கனும்.."என்று கூறியவன்..சமியிடம் திரும்பி
"சமிமா என் பொண்ணை காப்பாத்தி கொடுமா" என்று கேட்க..அவள் தயங்க டீனும் "மிஸஸ்.ஹர்ஷா apart frm family ur a doctor so do ur duty.." என்றுவிட்டு செல்ல..
சரியென தலையாட்டியவள் அடுத்து அடுத்து செய்ய வேண்டிய டெஸ்ட்களை செய்து மறுநாள் குழந்தைக்கு ஆபரேஷன் என முடிவு செய்தனர்..அப்போது அவள் மறுநாள் ஆபரேஷன் என்று சொல்லிவிட்டு திரும்ப.."ஒரு நிமிஷம்" என்று அவளை தடுத்த விகாஷினி.
அவள் கேள்வியாய் பார்க்கவும்..
"நான் பேசினதையெல்லாம் மனசுல வெச்சுட்டு என்னை பழி வாங்கிடாதே..என் பொண்ணு" என்று அவள் அழ..அவளுக்கு வருத்தமாகி போனது..மறுநாள் அவளுக்கு உதவியாக டீனும் இருந்தார்..ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது...மூவரும் தவிப்புடன் ஆபரேஷன் தியேட்டர் வாசலில் காத்திருக்க முதலில் வந்த டீன் அவர்களிடம் ஆபரேஷன் சக்ஸஸ் என்று கூற..பின்னாலேயே வந்தாள் சமி..
டாக்டருக்கு நன்றி கூறினர் மூவரும்..
"நான் எதுவும் செய்யலை வெறும் ஹெல்ப்தான் செஞ்சேன்..ஆபரேஷன் கரெக்டா செஞ்சவங்க சமி தான்..நீங்க அவங்களுக்கு தான் நன்றி சொல்லனும்.." என்று கூற அவளை பார்த்தாள் விகாஷினி..உடனே அங்கே இருந்து சென்று விட்டாள் சமி..