12. நீயே வாழ்க்கை என்பேன்

13 0 0
                                    

12.12.. நீயே வாழ்க்கை என்பேன்

"என்ன சொன்ன எரும.." என்று பின்னால் இருந்து கேட்க ஷாக்காகி நின்றுவிட்டான் ஹர்ஷா..
"அச்சோ இந்த ராட்சஸி நாம எதுனா சொன்னா மட்டும் கரெக்டா ஆஜர் ஆகிடுவா..இப்போ அடி வாங்க மாட்டோம் ஆனா கழுவி ஊத்துவாலே..அதையும் வாங்குவோம்" என்று எண்ணியபடி ஈஈஈ என அவன் திரும்ப அவனை முறைத்தபடி படுத்திருந்தாள் சமி..
இந்த நிலையில் அவனை பார்த்த ஷியாம் டக்கென்று சிரித்துவிட்டான்..அவனை பார்த்து முறைத்தவன்..
"நேரங்காலம் தெரியாம கோர்த்து விடுறான் பாரு கிராதகா..நீயெல்லாம் அண்ணனாடா.." என்றான் அவனுக்கு மட்டும் கேட்கும்படி..
"சாரிடா கன்ட்ரோல் பண்ண முடியல" என்றான் சிரித்தபடியே..
"போடா பன்னி" என்றுவிட்டு அவளிடம்..
"ஜானு கண்ணு முழிச்சுட்டியா..இப்போதான் உயிரே வந்தது..இந்தா பேபிய பாரு.." என்று அவன் ஷியாமிடம் கண்ஜாடை செய்ய..அவனும் குழந்தையை அவளிடம் கொடுக்க வந்தான்..ஆனால் அவள் எழக்கூடாது என்பதால் அவள் பக்கத்தில் படுக்க வைத்தான் ஷியாம்..
"இவ்ளோ நேரம் ரகளை பன்னாரு இவரு..அவனை தவிர எங்ககிட்டலாம் ஒரே அழுகை" என்று கூற ஆவலாய் குழந்தையை கை கால்களை மெல்ல தொட்டு பார்த்தாள் அவள்..அப்படியே அவன் கூறியது காதில் விழ..
"நான் இருக்கேனே இந்த லூச விட்டு எங்கேயும் போகாம அதேமாதிரி என் பிள்ளையும் ஆகிட்டான் போல.." என்றாள் அவள்.
"புருஷனும் பொண்டாட்டியும் ஒரே டையலாக் விடுறீங்க.."என்றான் ஹர்ஷா..
"சரி சமி..நான் கிளம்பறேன் ரொம்ப லேட் ஆகிடுச்சு..அம்மாவும் தங்கச்சியும் வெயிட் பண்ணுவாங்க..குட்டி பாப்பாவை பார்க்கலனு..நீ ஸ்டெயின் பண்ணிக்காதே..பேபி பத்திரம்.." என்றவன் ஆதரவாய் அவள் தலையை வருடினான்..கண்மூடி திறந்தவள்..சரியென கூற அவன் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்..அன்றுமுதல் அவனும் அந்த குழந்தைக்கு ஒரு தகப்பனாகவே மாறிப்போனான்..
கிளம்பிய பிறகுதான் யோசித்தான் வீட்டுக்கு தகவல் சொல்லாததை..அப்போது மொபைல் ரிங்காக அதை அட்டென் செய்தவனிடம் ஷியாம் எல்லாம் வீட்டுக்கு சொல்லிவிட்டதாக கூறி வைத்தான்..
"அடப்பாவி அண்ணா ஆப்பு சீவி ஆல்ரெடி பார்சல் பண்ணிட்டு..வச்சு அடிச்ச அப்புறம் சொல்றியே டா.." என்றான்..
"என்னடா என்ன ஆச்சு?" என்றான்..
"ம்ம்ம்..பேபி அழுதுச்சு உட்வார்ட்ஸ் கிரேப் வாட்டர் வாங்கி ஊத்து" என்றான் ஹர்ஷா
"ஏன்டா..சமிக்கு நீ ஆபரேஷன்க்கு ப்ளட் கொடுக்க வர்றேன்னு வீட்டுக்கு இன்ஃபார்ம் பன்னலையா?" என்றான் ஷியாம்

நீயே வாழ்க்கை என்பேன்Where stories live. Discover now