அதிர்ந்து பின் அதே இயல்பில் ஷியாமை பார்த்தவன்
அவனோ தன் கடைசி பயணத்தை தக்கவைத்து கொண்டு இருந்தான் இவன் பதிலுக்காக..
"அண்ணா ஏன் இப்படி பேசறீங்க..உங்களுக்கு ஒன்னும் ஆகாது..நீங்க சரியாகிடுவீங்க..இப்படியெல்லாம் பேசாதீங்க.. ஜானு சொல்லுடி அவர்கிட்ட" என்று அவளை பார்க்க அவளோ சிலைபோல நின்றிருந்தாள்..
அவளை பிடித்து அவன் உலுக்கவும் அவன் உலுக்கலில் கண்ணில் இருந்த நீர் அவன் கைகளின்மேல் விழுந்தது..அவள் ஷியாமிடம் திரும்பி "என்ன சொல்ல?" என்று கேட்க..ஹர்ஷாவிற்கு சங்கடம் ஆகி விட்டது.. அவர்களது அன்பை உடனிருந்து பார்த்தவனாயிற்றே...
ஷியாமோ ஹர்ஷாவை பார்க்க அவனோ கெஞ்சலாய் அவனை பார்த்தான்..
"அண்ணா நீ..நீங்க ஏன் இப்படி பேசறீங்க..நீங்க குணமாகி வர வரைக்கும் இவளும் நரேனும் என் பொறுப்பு..நான் பாத்துக்கறேன்..நீங்க இப்படிலாம் பேசாதீங்கனா?" என்றான் அவன் பிழைக்க மாட்டானா என்ற தவிப்போடு
"உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசுற ஷியாம்... நீ சரியாகிடுவ..என்னை விட்டுலாம் போலாம் நினைச்ச கொன்னுடுவேன் உன்னை" என்று புலம்பினாள் அவள் சிறு பிள்ளைபோல...இவளை குழந தையாவே வளர்த்துட்டோமேனு அப்போதுதான் ஷியாம் வருத்தப்பட்டான்..அவன் வருத்தமாய் ஹர்ஷாவை பார்க்க அவன் வருத்தத்தை தாளாதவனாய் சம்மதம் என தலையாட்டினான் ஹர்ஷா..
குழந்தையையும் அவளையும் அணைத்தபடி நிற்க.. அவர்களை திருப்தியாய் பார்த்தவனுக்கு ரொம்பவே மூச்சு திணறல் எடுக்க...
"நா..நான் இல்லனா அவ ஒடைஞ்சுடுவா..அவ இன்னும் கூ..கூட குழந தையாவே இருக்கா..எ..எந்த சூழ்நிலையிலும் அ..அவளை கைவிடாதே.." என்றவன் இருவரின் கைகளை கேட்டு கைநீட்ட அவளோ அசையாமல் அவனையே பார்த்தபடி நிற்க ஹர்ஷாவே அவள் கையை பற்றி தன் கையோடு அவள் கையை இணைத்து ஷியாமின் கையில் வைக்க ஒரு கையால் அவர்கள் கரங்களை பற்றியவன் இன்னொரு கையால் குழந்தையை ஆதரவாய் தடவியவன் குழந்தையை முத்தமிட அதற்குள் டாக்டரும் அவளின் பெற்றோரும் வர..அவளது தந தையை அருகில் அழைத்தவன் இருவரையும் இணைத்துவைக்கும்படி கூறிவிட்டு எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவன் கண்கள் இறுதியாக தன்னவளிடம் வந்து தஞ்சம் அடைந்து நிலைத்தது...அவன் உயிர் அவன் உடலைவிட்டு சென்றுவிட்டது என டாக்டர் கூற "அண்ணா" என்று அலறினான் ஹர்ஷா..
சமிக்க்ஷாவோ கல்லென அங்கேயே நின்றுவிட்டாள்...அவள் கண்களில் கண்ணீர் வரவே இல்லை..பார்வை அவனை விட்டு அகலவே இல்லை..அந்த விடியல் நேரம் அவள் வாழ்வின் விடியலா? இல்லை சாபமா?