9. நீயே வாழ்க்கை என்பேன்

12 0 0
                                    

9.9... நீயே வாழ்க்கை என்பேன்

அவசர அவசரமாய் கிளம்பியவன்...ஓடிச்சென்றான் அவளை பார்க்க..வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போகும்போது வீடே அமைதியாய் இருந்தது..எல்லோரும் சென்றுவிட்டு இருந்தனர்..சமியின் அப்பாவும் அம்மாவும் வெளியே இருந்த தோட்டத்தில் அமர்ந்து இருப்பதை பார்த்தவன் அவர்களிடம் ஓடினான்..
"அப்பா..எங்க சமி.. function முடிஞ்சுடுச்சா..யாருமே இல்லை.." என்றான் என்னமோ ஏதோவென்று..
"வாடா..நீ வருவ வருவனு அவ சாப்பிடாமலே உட்கார்ந்து இருக்கா..வந்தவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க..போ..போய் பாரு அவள" என்றார் சுந்தரம்.
"சரி" என உள்ளே சென்று சமி என அழைக்க முயல வாயை திறந்தவன் அப்படியே மூடிக்கொண்டான்...
என்னவென்று பார்த்தால்..முழு அலங்காரத்தோடு அவன் வாங்கி வந்த புடவை நகையில் மின்னும் தங்க சிலையை போல கன்னத்தில் சந்தனம் நெற்றியில் குங்குமம் என அம்சமாய் இருந்தாள்..அவளை வைத்த கண் வாங்காமல் ரசித்தான் அவன்...
ஆனா என்ன அவளோ ரொம்ப டையர்டு ஆகி சோபாவில் உட்கார்ந்தபடியே உறங்கிவிட்டு இருந்தாள்...அழகான குழந்தை பொம்மை போல...
அவன் அருகில் வந்த ஷியாம்..
"நல்ல ப்ரண்ட்ஸ்டா நீங்க..நீ வந்தாதான் சாப்பிடுவேன்னு உட்கார்ந்தவ..அப்படியே தூங்கிட்டா..நீ இப்போ வர்ற..நாங்கலாம் எவ்வளவோ கெஞ்சியும் சாப்பிடவே இல்ல..என் ப்ரண்ட் வரட்டும் சாப்பிடறேன்னு சொல்லிட்டா..அத்தை சாப்பாடு கொண்டு வாங்க அவள சாப்பிட வைக்கட்டும் இவன்..." என்றான் அமைதியாக ஷியாம்.
"என்மேல கோவமாடா அண்ணா" என்று கேட்டான் வருத்தமாய் ஹர்ஷா
"டேய் லூசா நீ..எனக்கென்ன கோவம் உன்மேல..கோவம்லாம் இல்ல..லைட்டா பொறாமையா இருக்கு..உங்க ப்ரண்ட்ஷிப்ப பார்த்து..போ..போய் அவள சாப்பிட வை." என்றான் ஷியாம் சிரித்தபடி..
"சரிடா அண்ணா..நீயும் வா...அவகிட்ட தனியாலாம் அடி வாங்க முடியாது" என்றவன் அவனையும் இழுத்துக்கொண்டு சென்றான்..அவள் அருகில் சென்று கீழே முட்டிபோட்டு அமர்ந்தவன் தான் கொண்டு வந்த வளையல்களை அவளுக்கு வலிக்காமல் அணிவித்தவன்..அவள் தாய் மீனாட்சி கொண்டு வந்து கொடுத்த உணவை எடுத்து அவள் வாயருகே கொண்டு சென்றான்.
"ஷியாம் அவன் வரட்டும் நான் சாப்பிடுறேன்..don't disturb me.." என்றாள் தூக்க கலக்கத்தில்... சிரித்தவன்
"நான்தான் ஜானுமா சாப்பிடுடா" என்றான்..அவன் குரல்கேட்டு விழித்தவள்..அவனை பார்த்ததும் கண்கள் மலர.."எங்கடா என் கிஃப்ட்" என்றாள் பொய்யாய் முறைத்துக்கொண்டு..
"கையை பாருடி" என்றான் ஹர்ஷா சிரித்தபடி
அவளும் கையை பார்க்க அவளது கையில் அழகிய ரோஜாப்பூ போன்ற வளையல் அதில் சிறு முத்துக்கள் என அழகாய் இருந்தது..அது கூடவே கண்ணாடி வளையலும் இருந்தது..பார்ககவே மிக அழகாக இருந்தது..
"ஹர்ஷி சூப்பரா இருக்குடா..ஷியாம் உங்க கிஃப்ட் எங்கே? இவன் கொடுத்த அப்புறம் கொடுக்கறேன் சொன்னீங்களே..?" என்று கேட்க...அவன் உள்ளே சென்று ஒரு கிஃப்ட் பாக்சை கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி பிரித்து பார்க்க அதே மாதிரியான வளையல் ஆனால் வேறு கலரில் இருந்தது..அதை பார்த்தவள் ஷியாமை ஆச்சர்யமாய் பார்க்க..அவன் கண் சிமிட்டினான்...
"டேய் அண்ணா..என்ன இது?" என்றான் ஹர்ஷா
"எனக்கு தோணுச்சு வாங்கிட்டு வந்தேன்..நீயும் அதையே நீயும் வாங்கிட்டு வந்தா நான் என்ன செய்ய?..அவளையே கேளு என்ன சொல்ல போறானு" என்றபடி இருவரும் அவளை பார்க்க..
"போங்கடா லூசுங்களா..என்னைக்காச்சும் எனக்கு வேற வேற கிஃப்ட் வாங்கி கொடுத்து இருக்கீங்களா..எருமைங்களா..நானும் ஒவ்வொரு டைமும் வேற ஏதாவது வாங்கி தருவீங்கனு பார்த்தா ஒரே மாதிரி வாங்கிட்டு வந்து உயிரை வாங்குறீங்களே..உண்மைய சொல்லுங்க ரெண்டு பேரும் பேசி வெச்சுட்டு வாங்கறீங்களா?" என்று கேட்க
இருவரும்
"அச்சோ ஜானுமா..i swear நான் இவன்கிட்ட பேச கூட இல்ல..நானே உனக்காக யோசிச்சு யோசிச்சு வாங்கினேன்.." என்றான் ஹர்ஷா
"நான் மட்டும் என்னவாம்..எனக்கு என் பொண்டாட்டிக்குனு தேடி தேடி வாங்கினேன்." என்றான் ஷியாம்
"போங்கடா..பொய் பசங்களா..நான் நம்ப மாட்டேன்..one time or two timeனா பரவாயில்லை எதேச்சையாக இருக்குனு ஏத்துக்கலாம்..ஒவ்வொரு முறையும் இப்படியே பண்ணா..நான் எப்படி நம்புறது..நீ fraudங்க நான் நம்ப மாட்டேன்" என்று கோவமாய் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள..
இருவரும் அவளிடம் முட்டிபோட்டு அமர்ந்தனர்..
"நம்பு ஜானுமா இதுவரைக்கும் நாங்க ரெண்டு பேரும் உனக்கு கிஃப்ட் பண்ண பேசிக்கிட்டதே இல்லை..நான் யோசித்து தனியாதான் வாங்கி இருக்கேன்..அண்ணா யோசித்து தனியாதான் வாங்கி இருக்கான்..உன்மேல ப்ராமிஸ்.. நம்புடா" என்றான் அவள் தலைமேல் கைவைத்து..
அவன் அவள்மேல் சத்தியம் செய்தாள் அதில் பொய் இருக்காது..எனவே நம்பினாள்..
ஷியாமும்..
"நானும்தான் ஜானு..நீ என் wife உனக்கு வாங்குற கிஃப்ட்ல நான் விளையாடுவேனா..நானா யோசிச்சு வாங்கினது தான் எல்லாமே..பீளீஸ் நம்புடா" என்றான் ஷியாம்.
"போங்கடா..டேய்..எல்லாம் ரெண்டு ரெண்டு ஆனா வேற கலர்ல வெச்சுட்டு இருக்கேன்..என்னா டேஸ்ட்டா உங்க ரெண்டு பேருக்கும்..வேற யோசிக்கவே தெரியாதா...எவ்ளோ யோசிச்சும் ஒரே மாதிரி வாங்கிட்டு வர்றீங்களே...என்னால முடியலபா நான் டையர்டு.." என்று அவள் கூறிய அடுத்தநொடி இருவரும் ஒரேயடியாக
"ரொம்ப டையர்டா இருக்கா ஜானு ஜீஸ் கொண்டு வரவா" என்று கேட்க கடுப்பானவள்
"அடிச்சே கொன்னுடுவேன் ஓடிப்போங்க ரெண்டு பேரும்" என்று கத்த எழுந்து ஓடிவிட்டனர் இருவரும்..இவளோ சிரித்துக்கொண்டே அவள் பெற்றோரை பார்க்க அவர்களும் இவர்கள் கூத்தை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தனர்...
அங்கோ ஹர்ஷா தன் தோழியை காண ஆவலாக ஓடியதை பார்த்த விகாஷினி கோவத்தின் உச்சத்திற்கு போனாள்..
இவர்களை எப்படியும் பிரித்தே ஆக வேண்டும் என எண்ணினாள்..

நீயே வாழ்க்கை என்பேன்حيث تعيش القصص. اكتشف الآن