20.
ஹர்ஷா அப்படி பேசவும் அதிர்ந்த விகாஷினியும் அவன் தாயும்..இருக்குற கொஞ்சநஞ்சம் வருமானமும் போய்டும் என்று எண்ணிய விகாஷினிக்கு சமி மீது கொலைவெறியே வந்தது..
"என்னணா..நீ இப்படிலாம் பேசி நான் கண்டதே இல்லையே..எல்லாம் இவ சொல்லி கொடுத்ததா? அதான் பேசுறியா?.. இவள கூட நாங்க மருமகளா உனக்காக ஏத்துக்குவோம்..ஆனா யாருக்கோ பிறந்த பிள்ளைய நாங்க ஏன் ஏத்துக்கனும்னு" கேட்டாள் அவள்..
"அவன் சட்டப்படி என்பையனா எப்பவோ நான் தத்து எடுத்தாச்சு..உன் கல்யாணம் உன் விருப்பபடி தானே ஆச்சு உன் வாழ்க்கையை உன் இஷ்டப்படி வாழுறல.. இது என் வாழ்க்கை என் இஷ்டப்படி நான் வாழ்வேன் நீ யாரு அதை ஏத்துக்க ஏத்துக்காம போக?.. அம்மா வீட்டுக்கு வந்தா எப்படி இருக்கனுமோ அப்படி இருந்துட்டு போ..அதை விட்டுட்டு ஏதாவது ஏடாகூடமா பேசின வீட்டோட இருக்க உன் புருஷன் பிள்ளை ஏன் இவ்வளவு பேசுற அம்மா எல்லாரையும் உன்கூட கூட்டிட்டு போய் வெச்சு பார்த்துக்க..எல்லாத்துலயும் உரிமை பேசுறவ அம்மாவ பார்த்துக்குற பொறுப்புல காட்டு உன் உரிமையை..and moreover இது என் குடும்ப பிரச்சனை.. என்னை பெத்தவங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை..அததான் செஞ்சுட்டு இருக்கேன்..இதுல நீ தலையிடாம இருக்குற வரைக்கும் உனக்கு நல்லது.." உடனே ஏதோ பேசவாயெடுத்தவளை தடுத்தவன்.
"உனக்கு இந்த வீட்டுல சம உரிமை இருக்குனு சொல்ல வர்ற அதானே..அது வீட்டுக்கு மட்டும் தான் என் வாழ்க்கையில் வர்ற உரிமை யாருக்குமே இல்ல அதை புரிஞ்சுக்கிட்டா நல்லது..இவதான் என் பொண்டாட்டி நீ ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலைனாலும் இதான் நிரந்தரம்..உனக்கு இவ வேணாம்னு நீ நினைச்சா தாராளமா நீ கிளம்பி போலாம் எனக்கும் நீ வேணாம்..நான் மட்டும்தான் தங்கச்சி அம்மானு உங்கமேல பாசம் வெச்சேன்..நீங்க ஏமாத்திட்டு இருக்குறது தெரிஞ்சும் நான் சும்மாதான் இருந்தேன்..இனி இருக்க மாட்டேன்...போதும் நான் வெச்ச பாசமும் அதை வெச்சு நீங்க போட்ட வேஷமும்..இப்போகூட உங்களவிட்டு நான்தான் போகனும்னு முடிவு பண்ணேன் ஏன் தெரியுமா..உங்கள நான் வெளியே அனுப்பினா..நீங்க கஷ்டபடுவீங்கனுதான்..ஆனா நீங்க இன்னமும் என்னை எப்படிலாம் அசிங்கப்படுத்தனும்னு தான் யோசிக்கறீங்க இல்ல..நீங்க பேசல உங்க பணத்தாசை பேச வைக்குது..இப்படிப்பட்ட ஜென்மங்களோட என் பொண்டாட்டியும் என் பிள்ளையும் இருந்தா நாளைக்கு அவளுக்கும் உங்க புத்தி தான் வரும்..நீங்களே கொலை கூட செஞ்சுட்டு அவமேல பழிய போடலாம்..நான் வெளியே போய்ட்டு அவள நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோனு படபடப்பும் டென்ஷனுமா என்னால இருக்கமுடியாது.. அதனால இனி நான் என் குடும்பத்தை பார்த்துக்கறேன்..பெத்த அம்மாங்குற கடமைக்கு உங்களுக்கு மாசம் இவ்வளவுனு கொடுத்துடறேன்..விகா புருஷனை அவ குடும்பம் குழந்தைய பார்த்துக்க சொல்லுங்க என்னால இனி யாருக்கும் எதுவும் செய்ய முடியாது.." என்றான் கராறாக...
இது என்ன நமக்கு முதலுக்கே மோசமாகுதே என எண்ணிய ஹர்ஷாவின் தாய்..
"இதுதான் நீ சொல்லுவனு எனக்கு தெரியும்டா..எல்லாம் அவ ஆட்டி வைக்கிறா நீ ஆடுற..அதானே..இன்னும் என்னவெல்லாம் சொல்லி கொடுத்தா அவ..நீ இதுவரைக்கும் இந்த வீட்டுக்கு செஞ்சது, சேர்த்தது எல்லாம் வாங்கி அவளுக்கும் அவ வேற ஒருத்தனுக்கு பெத்த பிள்ளைக்கும் வெச்சுக்க ப்ளான் போட்டுட்டாளா? என் குடும்பத்தை கெடுக்க வந்தவ அவ..எப்போ அவ வந்தாளோ நீ இந்த குடும்பத்து மேல வெச்சுருந்த பாசம் பந்தம் எல்லாம் போச்சு..அப்புறம் ஒரேடியா உன்னை பிரிச்சு வைக்க முடிவே பண்ணிட்டாளா? இவ வந்த நேரம் என் குடும்பமே கெட்டு போச்சு.." என்று அவர் பேசிக்கொண்டே போக..கோவத்தின் உச்சிக்கே சென்ற ஹர்ஷா
"நிறுத்துங்கமா..உங்க வாய்னா உங்க இஷ்டத்துக்கு பேசலாம்னு நினைப்போ? முன்னமாச்சும் அவ என் ப்ரண்ட் இப்போ அவ என் பொண்டாட்டி.. அவள பத்தி பேசுற உரிமை யாருக்கும் கிடையாது..அவ இந்த குடும்பத்தை கெடுத்தாளா? இல்ல நீங்களும் உங்க பொண்ணுமா? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க எனக்கு எதுவும் தெரியாதுனு நினைப்பா? நீங்களும் உங்க பொண்ணும் சேர்ந்து என்னவெல்லாம் செஞ்சீங்க என்னலாம் செஞ்சுட்டு இருக்கீங்க எல்லாம் எனக்கு தெரியும்.. கர்ப்பமா இருக்குற பொண்ணுனு கூட பார்க்காம அவளை என்ன பேசினீங்க? நீங்க பெத்த பொண்ணு மட்டும் நல்லா இருக்கனும்னு வீட்டோட வெச்சு அவள கட்டிகிட்டு வந்தவனுக்கும் சேர்த்து என் சம்பாத்யம் செலவு பண்ணீங்க அப்போலாம் நான் ஏதாவது கேட்டேனா? நம்ம தங்கச்சி நம்ம அம்மா இவங்களுக்கு நாம செய்யாம யார் செய்வானு தானே நான் எல்லாம் செஞ்சேன்..ஆனா நீங்க இப்போகூட என்மேல பாசம்ல பேசல எங்கே இவன் சம்பாத்யம் நம்ம கைய விட்டு போய்டுமோ? அடுத்து நாம ஏமாத்த ஆள் கிடைக்காதேனு தானே யோசிக்கறீங்க? உங்கள மாதிரி சுயநலவாதிங்க கூட எல்லாம் தெரிஞ்சும் இருந்தேனேனு தான் கஷ்டமா இருக்கு..எப்போ என்னை உங்க செலவுக்கு சம்பாதிக்கிற மிஷினா பார்த்தீங்களோ அப்போவே நீங்க யாரோ நான் யாரோ..இனி என் பொண்டாட்டிய பத்தி ஏதாவது பேசினீங்க அவ்வளவுதான் பார்த்துக்கோங்க.." என்றவன் தன்னவள் கையை பற்றிக்கொண்டு கிளம்பினான்.. கூடவே கிருஷ்ணாவும் குழந்தையை தூக்கிக்கொண்டு செல்ல..அவனை தடுத்த ஷியாமின் பெற்றோர்
"எங்க பேரனை எங்ககிட்ட கொடுத்துட்டு போங்க..என் பையனோட பையன் எங்களுக்கு தான் சொந்தம்..அவ எக்கேடோ கெட்டு போகட்டும்.. எங்களுக்கு எங்க பேர பிள்ளை வேணும்.." என்று கேட்க..
"நீங்க யாருனு சொன்னீங்க?" என்றான் அவர்களை பார்த்து
"என் பையனோட பையன்..எங்க பேரன்" என்றார் ஷியாமின் தந்தை.
"ஓஓ..அப்படியா..அப்புறம் ஏன் உங்ககிட்ட குழந்தைய ஒப்படைக்க கூடாதுனு தெளிவா உயில் எழுதி குழந்தைகிட்ட எனக்கு மட்டும் தான் எல்லா உரிமையும் இருக்குனு போடனும்.. சொல்லுங்களேன் கொஞ்சம்" என்றான் திமிராக..அவன் பதிலில் அழுது கொண்டு இருந்த சமி நிமிர்ந்து அவனை பார்க்க..அவன் பிடி இறுகியது..அவனும் அவளை ஒரு நிமிடம் பார்த்து கண் சிமிட்டியவன் அவர்களிடம் திரும்பி
"சொல்லுங்க என்ன சொல்ல போறீங்க?" என்றான்..
"நீ..நீ.. பொய் சொல்ற..எங்க பையன் அப்படிலாம் செய்ய மாட்டான்.." என்று திக்கி திணறி பேசவும் ஆல்ரெடி இந்த விஷயம் அவர்களுக்கு தெரிந்து இருக்கிறது என்பதை உணர்ந்தவன்
"ஓஓ..உங்க பையனா..அன்னைக்கு அண்ணா செத்ததுக்கு உங்களை பெத்தவங்களா உங்க கடமையை செய்ய எவ்வளவு கூப்பிட்டேன்..அப்போ அவரு உங்க பிள்ளை இல்லையா..இப்போ மட்டும் எப்படி அவரு உங்க பிள்ளை ஆனாரு..பெத்த பிள்ளையோட வாழ வக்கு இல்ல இதுல பேர பிள்ளைனு என்ன சொந்தம் உங்களுக்கு.. அப்படியே நரேன் உங்களுக்கு வேணும்னா..போய் கேஸ் போடுங்க..அப்புறம் கோர்ட் முடிவு பண்ணும்..இவன் என் பிள்ளை அண்ணா என்னைக்கு இவனையும் சமியையும் என்கிட்ட ஒப்படைத்தாரோ அப்பவே நான் இவன சட்டப்படி தத்து எடுத்துக்கிட்டேன்..சோ இவன் இப்போ என் பையன் உங்களால ஆனதை பார்த்துக்கோங்க..?" என்றபடி சமியை அழைத்துக்கொண்டு கிளம்பியவன் நேரே சென்று நின்ற இடம் கிருஷ்ணாவின் வீடு..வெளியே நின்றுகொண்டு இருந்தனர் சமியின் பெற்றோர்..அவர்களை பார்த்ததும் அழுதுகொண்டே ஓடிச்சென்று அவள் அம்மாவை கட்டிக்கொண்டாள்..