38. நீயே வாழ்க்கை என்பேன்

3 0 0
                                    

38..நீயே வாழ்க்கை என்பேன்

,சக்தி சொல்லிக்கொண்டே ஓட சர்வாவின் ஆட்கள் அவனை கொல்ல துரத்தி வர..அதற்குள் மடமடவென யோசித்த ஹர்ஷா உடனே கிருஷ்ஷிடம் சொல்லி அவன் லொகேஷனை ட்ராக் பன்ன சொல்லிவிட்டு உடனடியாக கிளம்பினான்..இந்த இரண்டு மாதத்தில் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தும் சக்தி மாட்டிக்கொண்டான்...
சில மணி நேரம் ஓடியதில் சக்தியை வளைத்து பிடித்தனர் சர்வாவின் ஆட்கள்.. அவனை கொல்ல முற்படும்போது அவர்களை சுற்றி வளைத்தனர்..போலீஸார்... ஒரு புறம் ஹர்ஷாவும் இன்னொரு புறம் கிருஷ்ஷும் நிற்க போலீஸ் அடியாட்களை சுலபமாக வளைத்தது..
சக்தியை காப்பாற்றியவர்கள் தங்களது துணைகளை காவல் பலபடுத்த மறந்து போயினர்..
ஆம் தங்கள் வீட்டிற்குள் பாதுகாப்புக்காக இருந்த காவலர்களை அடித்து போட்டு விட்டு நரேன் தன் பாட்டி மீனாட்சி மற்றும் சுமித்ராவுடன் கடைக்கு சென்று வந்தவர்களையும் அடித்துவிட்டு மீராவையும் சமியையும் கடத்திவிட்டான்.. அவர்களை பார்க்கவென்று வந்த விகாஷினி காவலர்கள் நிலைமையை பார்த்து பதறி ஹர்ஷாவிற்கு ஃபோன் செய்ய..
அவள் சொன்ன செய்தி கேட்டு தன் கையிலிருந்த மொபைலை தவறவிட்டான் ஹர்ஷா... என்னவென்று கிருஷ்ஷும் சக்தியும் உலுக்க அவன் சொன்னதில் அதிர்ந்து நின்றனர் இருவரும்..ஆம்.. மீராவை
யும் சமியையும் கடத்தி விட்டான் சர்வா...
இதை கேட்டதும் ஹர்ஷா உயிரற்ற சிலையாய் அசையாது நின்றான்...
"அச்சோ நான் பயந்தது சரியா போச்சே..மீராவை பத்திரமா பார்த்துக்கனும்னு சொன்னேனே..அவன் ப்ளான் பன்னி அவளை கடத்திட்டானே...ஆனா சமிய எதுக்கு கடத்தனும்.. அவங்களுக்கு என்ன ப்ளட் குரூப்?"என்று சக்தி ஹர்ஷாவை உலுக்க..
"ஜானுவோட ப்ளட் குரூப் ஹெச்ஹெச் ப்ளட் குரூப்" என்று கூற கிருஷ்ஷும் சக்தி மொத்தமாய் அதிர்ந்து போனார்கள்...
"என்ன ஹர்ஷா இவ்ளோ அசால்ட்டா சொல்றீங்க?" என்று கேட்டான் சக்தி...
"ஏன்டா இதை முதல்லேயே சொல்லி இருந்தா நான் போலீஸ் புரொடக்ஷன இன்னும் ஜாஸ்தி பன்னி இருப்பேன்ல நானும் அவங்கள ஃபாலோ பன்னி இருப்பேன்ல.." என்றான் கிருஷ்.
"அவன் அவள தூக்க நினைக்குறதுக்குள்ள நான் அவங்கள சேவ் பன்னிடலாம்னு நினைச்சேன்டா..ஆனா அவன் இப்படி ப்ளான் பன்னுவான்னு நான் யோசிக்கலடா..நா..நான் இப்போ என்ன செய்வேன்..?" என்று செய்வதறியாது நின்றான் ஹர்ஷா..அவன் நிலைமை உணர்ந்தவனாய் கிருஷ் தூரிதமாக செயல்பட ஆரம்பித்தான்...
அவனை உலுக்கியவன்
"வாடா வீட்டுக்குபோய் பார்க்கலாம்" என்றபடி அவனை இழுத்துக்கொண்டு சக்தியையும அழைத்துக்கொண்டு கிளம்பினான்..போகும் வழியிலேயே டாக்டர்க்கு ஃபோன்செய்து வீட்டுக்குவர வெச்சுட்டு கன்ட்ரோல்ரூம்க்கு ஃபோன் செய்து சமி மற்றும் மீராவின் நம்பர் கொடுத்து அதை ட்ராக் செய்ய சொல்லிவிட்டு அனைத்து செக்போஸ்ட்க்கும் இன்பார்ம் செய்து அவர்கள் இருவரின் ஃபோட்டோவையும் எல்லா செக் போஸ்ட் மற்றும் எல்லா சிக்னல் போலீஸுக்கும் அனுப்பி உடனடியாகசெக் செய்ய சொன்னான்..
அதற்குள் வீடு வந்துவிட இறங்கி உள்ளே ஓடினான் ஹர்ஷா..அங்கே டாக்டர் வந்து சமியின் அம்மாவின் தலையில் கட்டும் நரேனின் கையில் கட்டும் கன்னத்தில் பேன்ட் எய்ட்டும் போடப்பட்டு இருந்தது..ஹர்ஷாவை பார்த்ததும் குழந்தை
"ப்பா" என்று அழுதபடி அவனிடம் ஓடிவர அவனும் ஓடிச்சென்று குழந்தையை ஏந்திக்கொண்டு முகமெல்லாம் முத்தமிட்டான்..அவனை பார்த்ததும் மீனாட்சி.."நான் அப்போதான் குழந்தையை தூங்க வைக்கலாம்னு உள்ளே போக வந்தேன் அதுக்குள்ள சமியும் மீராவையும்" என்று அவர் குலுங்கி அழ ஆதரவாய் கிருஷ் அவர் கையை பற்றிக்கொள்ள கிட்சனில் இருந்து வந்த விகாஷினியும் சுமித்ராவும்
"ஹர்ஷா..எங்கடா என் மருமக..அவள நான் கஷ்டப்படுத்தினது பத்தாதா..இன்னும் எவ்வளவு கஷ்டம்டா படுவா அவ..என் மருமகளையும் என் பொண்ணையும் என்கிட்ட கண்டு பிடிச்சு கூட்டி வாடா..நான் பத்திரமா கூட இருந்து பார்த்துக்கறேன் என் புள்ளைங்கள.." என்று அவர் அழ..
"அண்ணா அண்ணியயும் மீராவையும் சீக்கிரம் கண்டுபிடிங்கனா" என்று விகாஷினியும் அழ தன் குழந்தையை இறுக்கி அணைத்தபடி இடி விழுந்தவன் போல் அமர்ந்தான் ஹர்ஷா..
"என்ன செய்ய எப்படி அவங்கள காப்பாத்த போறேன்..என்னால எதையுமே யோசிக்க முடியலையே..ஏன் இப்படி..என் ஜானு வாழ்க்கையில அவளுக்கு நான் சந்தோஷத்தையே கொடுக்கலையே இப்போதானே வாழ ஆரம்பிச்சோம் அதுக்குள்ள எங்க வாழ்க்கை இப்படி தடம் புரளுதே..என் பொண்டாட்டி என் தங்கச்சி ரெண்டுபேரையும் என்னை நம்பி ஒப்படைச்சாங்களே..நான் இப்படி அவங்களை கோட்டை விட்டுட்டேனே...ஏன் என்னால எதையுமே யோசிக்க முடியல..இது நான் யோசிச்சு செயல்பட வேண்டியநேரம்.. நான் லேட் பன்ற ஒவ்வொரு நிமிஷமும் அவங்க உயிருக்கு ஆபத்து..இதை நான் எப்படியாச்சும் சரி செய்யனும்.. ஒரு புருஷனா என்னை எதிர்பார்ப்பாளே என் சமி நான் அவள காப்பாத்துவேன்னு ஒரு தங்கச்சியா என்னை என் மீரா எதிர்பார்ப்பாளே.. அவளுக்கு என்ன பதில் சொல்வேன்..ஷியாம் அண்ணா சாவுக்கும் சஞ்சனா சாவுக்கும் எப்படி நியாயம் சேர்ப்பேன்..அண்ணா ஆத்மா என்னை மன்னிக்குமா..உன்னை நம்பி தானடா என் பொண்டாட்டிய உன் பொண்டாட்டியா ஒப்படைச்சேன் நீ கொடுத்த வாக்கை காப்பாத்த மறந்துட்டியேடானு என்னை கேள்வி கேட்குமே நான எப்படி பதில் சொல்வேன்... இல்ல நான் ஏதாவதுசெய்யனும் உடனே செய்யனும் அவங்கள காப்பாத்தனும்" என்று யோசித்தவன் ஒரு முடிவோடு தன் மகனை கையில் ஏந்தியபடி எழுந்தான்..
கையில் இருந்த பிள்ளையை தன் தாயிடம் கொடுத்தவன்..
"கிருஷ்..சர்வா மொபைல ட்ராக் செய் அப்புறம் அந்த சர்வாவோட ஆளு அந்த ராகேஷ் இருக்கான்ல அவனையும் ட்ராக் பன்னு..உடனே சமியோட ஜிபிஸ்ஸ ட்ராக் பன்ன சொல்லு.. சமி கையில இருக்க ரிங்ல நான் ஜிபிஸ் செட் பன்னி இருக்கேன் அதை உடனே ட்ராக் பன்ன சொல்லு.." என்று பேசிக்கொண்டு இருக்க அவனுக்கு ஃபோன் வந்தது.. எடுத்து அவன் பேச..
"ஹலோ" என்ற அவன் குரலில் இருந்த பதட்டத்தையும் வலியையும் உணர்ந்தவனாய் சிரித்தான் சர்வா..

நீயே வாழ்க்கை என்பேன்Donde viven las historias. Descúbrelo ahora