23.
அவளிடம் பேசுவதாய் நினைத்து மனதிற்குள் பேசியவன் அவளை பார்த்தவாறே குழந்தையை அணைத்தபடி உறங்கி போனான்..நரேனும் அவனது அணைப்பில் எழவே இல்லை நன்கு உறங்கிவிட்டான்..
விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்தவள் தான் எங்கே இருக்கிறோம் என புரியாமல் திருதிருவென முழிக்க சிறிது நேரம் கழித்தே புரிந்தது அவளுக்கு..
புரிந்ததும் கண்கள் கலங்கியது..(அடக்கொடுமையே நல்ல ஃபோல்ட்டானா நட்டுனு நினைச்சு இவள ஹீரோயினா போட்டுட்டேனே..இவ என்ன எப்போ பாரு அழுமூஞ்சியா சுத்திட்டு இருக்கா..ஒரே குஷ்டமப்பா இவங்களோட..இந்தாம்மா புள்ள என் ஹீரோயின்லாம் சாஃப்ட் அவ்ளோதான் இல்ல வெரி ஃபோல்ட் நீ இப்படிலாம் இருந்த நான் பேசாம என் ஹர்ஷா டார்லிங்க்கு வேற புள்ளய கல்யாணம் செஞ்சு வெச்சுடுவேன் பார்த்துக்க..பாதி ராத்திரியில எழுந்து அழ இது என்ன பேய் ஸ்டோரியா..போ..போ..போய் தூங்கு..என்னைய தூங்க விடுங்கபா..நடுராத்திரியில எழுப்பிகிட்டு..😴😴😴😴
நீங்க யாரு?
அதுசரி..நல்லவேளை உன்னை கட்டினவன யாருனு கேட்காம விட்டியே..நான்தான் பேபி உன்னோட ஆர்தர்..
அது நீங்கதானா..உங்கள கொன்னா என்ன?
அட கிராதகா ஏன் இந்த கொலவெறி?
நீங்கதானே என் ஷியாம கொன்னு என் ப்ரண்டையே எனக்கு புருஷனா மாத்தி வெச்சு இருக்கீங்க?
"அடேய் அடேய்..நான் வெறும் ரைட்டர்தான்..உன் விதிய எழுதினவன் இப்போ யாரை தூக்கி போட்டு விளையாண்டுட்டு இருக்கானோ..you argue their not to me.. எந்த பக்கம் போனு சொன்னா இவ எந்த பக்கம் திருப்புறா வண்டிய. .
மீ பாவம்..பச்ச பச்ச புள்ள..
யாரு நீங்களா?
பின்ன நீயா?
உங்கள😤😤
சரி சரி விடுடா சூனாபானா இப்போ எந்துக்கு நீ என்னை கரேமாடிறது...
என் வாழ்க்கையில இப்படி விளையாடுறீங்களே எப்படித்தான் நான் இருக்குறது..எல்லாரும் என்னை கேவலமா நினைக்க மாட்டாங்களா?
எவன் அவன் கேவலமா நினைக்கிறவன்..ஏம்மா நீ படிச்ச பொண்ணுதானே அறிவில்ல உனக்கு..ஒரு ஆண் மனைவிய இழந்தா அவன் வேற பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கலாம் அதையே கணவனை இழந்த பெண் செஞ்சா தப்பா..ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுக்க இங்க யாரும் யாரையும் பார்த்துட்டு உட்கார்ந்துட்டு இருக்கமாட்டாங்க..ஒரு பெண்ணை பலவீன படுத்த இந்த சமூகம் கையில எடுக்குற ஆயுதம் அவ நடத்தைய தப்பா பேசுறது..அதை புரிஞ்சு ஆமா நான் அப்படித்தான்னு தாண்டி போய்ட்டே இருக்கனும்..அதை விட்டுட்டு எல்லாருக்கும் உன்னை proof பன்னிட்டு இருந்தேனு வை..உன் வாழ்க்கை உனக்கு இல்லாம போய்டும்..அதை புரிஞ்சுக்க பேசுறவன் எவனும் வந்து செய்ய போறது இல்ல..உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சு இருக்கு கண்டவனும் என்ன பேசுவான்னு யோசிக்காம உன்னை கட்டினவன மட்டும் யோசி..அதுதான் உனக்கு நல்லது..அடப்பாவிகளா என்னையே அட்வைஸ் பன்ன வெச்சுட்டீங்களே..நான் போய் தூங்குறேன்..நீ போமா அந்த பக்கம்.. )
தன் மனதில் பலவிதமான சிந்தனை ஓட எழுந்து முகம் கழுவி வந்தவள் தன்னவனை பார்த்தாள்.. தந்தையும் மகனும் பூர்வ ஜென்ம பந்தம்போல் பிணைந்து உறங்கிக்கொண்டு இருந்தனர்..இவனா என் கணவன்..இவனா என் சொந்தம்..எனக்காக எல்லாத்தையும் உதறிவிட்டு வந்து இருக்கானே..இவனை என்னனு சொல்ல..தன் மனைவி தன் சுயத்தில் இருக்கனும்னு ஆசைபடுறானே ஒருவேளை நம்மள அடிமையாக்க பாக்குறானோ?