29.
ஒரு முடிவுக்கு வந்தவளாய் சமி எழுந்து கண்களை அழுத்தி துடைத்துக்கொண்டு ஃபோன் எடுத்து பேசினாள்..பேசி முடித்தவள் வெளியே வந்து சோபாவில் அமர..அவளை பார்த்தவன் கன்னத்தில் அடி தாங்காமல் அவள் அழுது முகம் சிவந்து போனது என நினைத்து அவள் அருகில் எழுந்து சென்று அவளிடம் முட்டி போட்டு அமர்ந்தான்..
"ரொம்ப வலிக்குதா..ஐயம் சாரிடா..இனிமேல் எவ்ளோ கோவம் வந்தாலும் உன்னை அடிக்க மாட்டேன் என்னை மன்னிச்சுக்கடா.." என்று கூற அமைதியாக அமர்ந்து இருந்தவளிடம் வந்த கிருஷ்ணா..
"என்னையும் மன்னிச்சிடுமா சமி நீயும் இவனும் ஒன்னா இருக்கனும்னு நான் செஞ்சது இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல.." என்றான்..
அவர்கள் இருவரையும் பார்த்தவள்
"ஷியாம் சாகுறதுக்கு முன்ன என்ன சொன்னாரு?" என்று கண்கள் கலங்கி கேட்க..இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்..
"எ..என்ன சொன்னார்..உன்னையும் குழந்தையையும் நல்லா பார்த்துக்க சொன்னார்.."
"நல்லா பார்த்துக்க சொன்னாரா இல்ல பத்திரமா பார்த்துக்க சொன்னாரா?" என்றாள் தீர்க்கமாய் அவனை பார்த்து..அவள் பார்வையே உணர்த்தியது அவளுக்கு ஏதோ தெரியும் என்பதை..
"ரெண்டும் தான் ஜானு"
"நான் கேட்ட கேள்விக்கு பதில் இது இல்லையே..?"
"நல்லாவும் பத்திரமாவும் பார்த்துக்க சொன்னார்.." என்றான் ஹர்ஷா.
"ஓஓ... யாருகிட்ட இருந்து?" என்று கேட்க மீண்டும் அதிர்ந்தவன்..
"எ..என்ன சொல்ற ஜானு..என்ன யார்கிட்ட இருந்து?" என்று கேட்க
"இல்ல பத்திரமா பார்த்துக்க சொன்னாருனு சொன்னியே யாருகிட்ட இருந்துனு கேட்டேன்.."
" என்ன ஜானு என்ன என்னமோ பேசுற..நீ ரொம்ப இன்னோசென்ட் நரேன் குட்டி பையன் அதனால பத்திரமா பார்த்துக்க சொன்னார் அண்ணா" என்றான் சமாளிப்பாக..
"ஓஓ..சரிப்பா..ஷியாம் ஹாஸ்பிடல்ல இருந்து எனக்கு ஃபோன் பன்னாங்க.." என்று அவள் முடிக்கும் முன்னமே ஹர்ஷா
"என்ன எதுக்கு என்ன விஷயம் ஏதாவது சொன்னாங்களா?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்க..
அவனை ஒரு மாதிரி பார்த்தவள் வலித்த கன்னத்தை தடவிக்கொண்டே
"நீ ஏன் இவ்ளோ அவசர படுற..நான்தான் சொல்றேன்ல" என்றாள்..அதில் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக "ஒலர பார்த்தியேடா மடையா" என்று மனதில் புலம்பியவன்..
"இல்ல அண்ணா பத்தி ஏதாவது பேசி உன்னை கஷ்டப்படுத்திட்யாங்களானு கேட்டேன் அதான்" என்று கூற.
"ஷியாம் ஃபோஸ்ட்க்கு நல்ல டாக்டர் எனக்கு தெரிஞ்சவங்க யாருனா இருக்காங்களானு கேட்டாங்க அப்படியே அவருக்கு அஸிஸ்டெண்ட்டா என்னை ஜாயின்ட் பண்ண முடியுமானு கேட்டாங்க..ஏன்னா ஷியாம் அளவுக்கு நான் எக்ஸ்பீரீயண்ஸ் இல்ல ல அதான்...நான் உன்னை கேட்டு சொல்றேன் சொன்னேன்..யாராவது கிடைப்பாங்களா?" என்றாள் அவன் கண்ணை பார்த்தபடி..
அவள் பேசியபிறகே இருவருக்கும் மூச்சு சீரானது..
"பாவி கொஞ்ச நேரத்துல என்னமா பாடு படுத்திட்டா" என்று யோசித்தவன்..
"நான் இந்த வீக் எண்ட்க்குள்ள ஆள் ஏற்பாடு பன்றேன் ஜானு..ஆனா அஸிஸ்டெண்ட்டா நீ போக வேணாம் வேற யாராவது போகட்டும்..உனக்கு வேலைக்கு போக ஆசை இருந்தா என்கூடவே வா என்னோட ஹாஸ்பிடலுக்கு.." என்றான் அழுத்தமாக.
"ஏன் நான் அங்க போகக்கூடாது?"
என்றாள் கேள்வியாக.
"வேணாம்னா வேணாம் அவ்ளோ தான்.." என்றான்..
"அதான் ஏன்..நல்ல ஹாஸ்பிடல் தானே அதும் என் ஷியாம் வேலை செஞ்ச ஹாஸ்பிடல் அங்க அவரோட நியாபகங்கள் இருக்குமே" என்றாள்..
"நோ...நீ என்ன சொன்னாலும் அங்கே உன்னை அனுப்ப மாட்டேன்" என்றான்..
"ஏன் எதுக்குனு ரீசன் சொல்லு நான் போகல" என்றாள் அவளும்..
"எனக்கு பிடிக்கல" என்றான்
"ஏன் பிடிக்கல?"
"நீ ஷியாம் அண்ணா மனைவியா போக பார்க்கறியா இல்ல என் மனைவியா போக பார்க்கறியா?" என்று செக் வைத்தான் அவளுக்கு.. இந்த கேள்வியை எதிர்பாராதவள்..
"ஷியாம் தான் இப்போ இல்லனு ஆகிடுச்சே நீதான் என் புருஷன் அப்போ உன் மனைவியா தானே நான் அங்க போகனும்" என்றாள்..
"அதுதான் எனக்கு பிடிக்கலனு சொன்னேன்.." என்றான்
"புரியல" என்றாள்..
("எனக்கு மட்டும் புரியுதா என்னானு வாய்க்குள்ளேயே புலம்பியவன்..இந்த நேரத்தில இந்த ஆர்த்தர் ஜீ கூட ஹெல்ப் பன்ன மாட்டேங்கிறாங்க..
அட போடா ஹர்ஷிமா..நீ என்ன சொன்னனு எனக்கே புரியல இதுல என்னத்த உனக்கு ஹெல்ப் பன்றது..
என்ன புரியலையா நான் இப்போ அவளுக்கு என்னத்த சொல்லுவேன்..
எதையாவது சொல்லுபா நான் டையர்டு டேக் ரெஸ்ட்டு
ஜீ..ஜீ..இப்படி விட்டு போனா எப்படி?
அப்படி அப்படி")
எதுவும் புரியாமல் அவன் சோகமாய் கிருஷ்ணாவை பார்க்க..அவனோ அவளிடம்
"அது வந்து சமிமா அவன் சொல்ல யோசிக்கிறான் நானே சொல்றேன்..
அந்த ஹாஸ்பிடல்ல நீ ஷியாம் அண்ணா வைஃப் பா தான் எல்லாருக்கும் தெரியும்..இப்போ உங்களுக்கு கல்யாணம் ஆச்சு இப்போ நீ இவன் வைஃப்பா போனா எல்லாரும் ஒரு மாதிரி பேச மாட்டாங்களா உங்க உறவ..நீங்க ஏதோ வேணும்னே கல்யாணம் செஞ்ச மாதிரி பேசுவாங்க..உன் கேரக்டர்அ தப்பா பேச கூட சான்ஸ் இருக்கு..அப்புறம் அவங்க முன்ன எப்படி நீ வேலை செய்வ..அதே இவன் வேலை செய்யுற ஹாஸ்பிடல் னா அங்க ஆல்ரெடி நீ அவன் வைஃப்னு தெரியும் சோ யாரும் எதுவும் பேச மாட்டாங்க..இதைதான் அவன் சொல்ல தயங்குறான்மா" என்றான் கிருஷ்ணா..
அப்படியா என்பது போல அவள் பார்க்க ஆமாம் என்பது போல தலையை ஆட்டினான் ஹர்ஷா..
"ஓஓ..சரி நான் யோசிச்சு சொல்றேன்" என்றவள் ஃபோன் எடுத்து தன் தாய்க்கு பேசியபடி சென்றாள்..
"டேய் என்னடா ஆச்சு?" என்றபடி ரகசியமாக கேட்டான் கிருஷ்ணா..
"அவ திடீர்னு வந்து அந்த ஹாஸ்பிடலுக்கு வேலைக்கு போறேன் சொல்லவும் நாம பேசினதை கேட்டுட்டாளோனு பயந்துட்டேன்டா.."
"எனக்கும் அப்படித்தான் தோணுச்சு ஆனா அவதான் வேற சொன்னாளே விடு..நமக்கு ஒரு சான்ஸ் கிடைச்சு இருக்கு இதை உடனே செய்யனும்.." என்று பேசிக்கொண்டு அமர..ஹர்ஷா எழுந்து ரூமிற்குள் சென்றான்..உள்ளே வந்தவன்..
"ஜானு..என்மேல கோவமா?"
"எதுக்கு?"
"இல்ல உன்னை அங்க வேலைக்கு வேணாம்னு சொன்னதுக்கு.."
"கோவம்லாம் இல்ல வருத்தம்தான்..எனக்கு ஷியாம் இருந்த இடத்தில இருக்கலாம்னு தோணுச்சு..ஆனா நீ சொன்ன காரணமும் சரியா தானே இருக்கு..ஆனா எனக்கு ஒரு சந்தேகம் ஹர்ஷி"
"என்ன சந்தேகம்?"
"உன்னோட ஹாஸ்பிடல்ல நான்தான் பிரச்சனை பன்னிட்டேனே என்னை சேர்த்துப்பாங்களா?"
"அட லூசு நீ பன்ன பிரச்சினை அந்த சிஸ்டர் தவிர வேற யாருக்கும் தெரியாது.. தெரிஞ்சாலும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க..பாரு டாக்டரோட பொண்டாட்டி அவங்கமேல எவ்ளோ பொசஸ்ஸிவ்வா இருக்காங்கனு தான் பேசுவாங்க போதுமா..நீ கவலைபடாதே" என்று அவள் தலையை வருடியவன் எழுந்து வெளியே சென்று விட..கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்தது அவளுக்கு..
"ஷியாம கொன்னவன் யாரு? அந்த கூட இருந்தே குழி பறிச்ச துரோகி யாரு? இந்த பிரச்சனை அவரோட முடியாம இதுல ஹர்ஷாவையும் இழுத்து விட்டு வெச்சு இருக்காரே..எனக்காக எனக்காகனு அவன் உயிரையே பணயம் வெச்சு இருக்கானே இவனை நான் என்ன செய்ய.. நான் ஏடாகூடமாக யோசித்து இவனுக்கும் ஆபத்தை வர வெச்சுட கூடாது..கிருஷ்ணா சொன்ன மாதிரி இது ரொம்ப பெரிய விஷயம் இதுல யோசிக்காம இறங்கிட கூடாது..நாம பேசின வரை அங்க ஷியாம் ப்ளேஸ்க்கு ஆள் கேட்டதை வெச்சு எப்படியும் ஹர்ஷா அவனுக்கு தேவையான ஆளை அனுப்புவான்..நாம தனியா போய் ஹர்ஷாக்கு பிரச்சனை வரவெக்குறத விட ஹர்ஷா கூட இருந்து என்ன ஏதுனு தெரிஞ்சுக்கலாம்..இப்போதைக்கு இதுதான் நல்லது.." என்று யோசித்தவள் அப்படியே உறங்கி போனாள்..