30.
இரண்டு நாட்களில் ஹர்ஷா தேடியவர் கிடைத்தார்..
கிடைச்ச ஆள் வேற யாரும் இல்ல..ஷியாம் அசிஸ்டெண்ட் சஞ்சனாவோட லவ்வர் சக்தி..இவர் வேற ஒரு ஹாஸ்பிடல்ல பெரிய நியூரோ சர்ஜன்..சின்ன வயசுலேயே பெரிய பொறுப்பை ஏற்று செய்பவர்..ஆனால் சஞ்சனாவை காதலிக்க துவங்கியது..ஒரு ஆக்ஸிடென்ட் கேஸ்ஸில் தான்..யாரோ ஒருவருக்கு ஆக்ஸிடென்ட் ஆனதுக்கு ஒருவனை லெஃப்ட் ரைட் வாங்கி அதை என்னவென்று கேட்க போன சக்தியையும் விடாமல் திட்டியவள்..பின் அவன் உதவி செய்யதான் வந்து இருக்கிறான் என தெரிந்து இருவருமாய் அந்த அடிப்பட்டவருக்கு உதவி செய்து மருந்து இட்டு இருவரும் பரஸ்பரம் அறிமுகமாகிறனர்..அதன்பின் வந்த நாட்களில் நட்பு காதலாகியது..பின் தன் படிப்பு முடிந்ததும் சஞ்சனா ஷியாமிடம் சேர்ந்ததை சொன்னாள் அவனும் அவர் ரொம்ப பெரிய நியூரோ சர்ஜன் எனக்கு ரோல் மாடலே அவர்தான் அவர்கிட்ட நீ அசிஸ்டெண்ட்டா இருக்குறது எனக்கு பெரிய பெருமைனு சொல்லவும் சஞ்சனா அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை அவனிடம் பகிர்ந்து கொள்வாள்..அன்றும் அவள் இவனுக்கும் சேர்த்தே அந்த வாட்ஸ்அப் மெஸேஜை செய்து இருந்தாள் கூடவே அவள் பேசிய வீடியோவையும் அனுப்பி இருந்தாள்.. ஆனால் அவனுக்கு சென்ட் ஆனதும் அதை டெலீட் செய்து விட்டு தான் ஷியாம்க்கு செய்தாள்..அந்நேரம் அவன் மொபைல் கீழே விழுந்து டிஸ்ப்ளே உடைந்து அவன் சர்வீஸ்க்கு கொடுத்து வர..அது ஒருவாரம் கழித்தே அவனுக்கு கிடைச்சது..அதற்குள் சஞ்சனாவை யாரோ கெடுத்து இறந்து விட்டதாக செய்தி வர பதறிபோனான்..அடித்து பிடித்து அவன் அங்கு செல்வதற்குள் எல்லாம் முடிந்து அவள் பிணமாய் அவனுக்கு காட்சி அளித்தாள்..மொத்தமாய் இடிந்தவன் அந்த மொபைலில் அவள் அனுப்பி இருந்த வீடியோவை பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து போனான்..உடனே ஷியாமிடம் பகிர்வதற்காக முதலில் அவனது செல்போனில் தொடர்பு கொள்ள நினைத்தவன்..பின்பு அதனை விடுத்து அவனது ஹாஸ்பிடலுக்கு ஃபோன் செய்து பேசினான்..அவன் பேசியதை கேட்ட ஷியாம் அந்த வீடியோவை பென் டிரைவில் போட்டு தரும்படி கேட்டான் அதை நேரடியாக தர வேண்டாம் என சொல்லி இருந்ததால் அவனே வேறு ஒரு ஆளை அனுப்புவதாக சொன்னான்..அப்போது தான் நடந்த விபத்தில் அவன் இறந்து போனது அறிந்து சக்தி இதை பற்றி என்ன செய்ய யாரை பார்க்க என யோசித்துக்கொண்டு இருந்த நேரத்தில் ஹர்ஷா ஷியாமின் மனைவியை திருமணம் செய்தது கேள்விப்பட்டு அவனை காண வந்திருந்தான்..அவனுக்கு ஏதாவது தெரியுமா என..வந்தவனை வரவேற்று அமர வைத்தவன் முதலில் சஞ்சனா பெயரை கேட்டதும் திடுக்கிட்டு அவனிடம் விசாரிக்க அவன் எல்லாம் சொன்னான்..பிறகு ஹர்ஷாவும் தங்களது விசாரணையை சொல்ல ஒரு முடிவு வந்தவனாய் தானே செல்வதாக கூறினான்..
"இல்ல சக்தி உங்கள அங்க தனியா அனுப்பிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாது.. அவங்க உண்மையை கண்டு பிடிச்சுட்டா உங்க உயிருக்கும் ஆபத்தாகிடும் ஏற்கனவே உங்க காதலிய இழந்து இருக்கீங்க அதும் கொடூரமா இதுல உங்களையும் இந்த சிக்கல்ல மாட்டி விட தயாரா இல்லபா" என்றான் ஹர்ஷா..
"என் சஞ்சுவே போய்ட்டா இனி இந்த அநாதைக்கு என்ன இருக்கு..அவளுக்கு நியாயம் கிடைக்க நான் எந்த முயற்சியும் செய்யாம மனசு நொந்து சாகுறதுக்கு இது எவ்வளவோ மேல்..நான் போறேன் சார்..ப்ளீஸ்..என் சஞ்சனாக்காக என்னை அனுப்புங்க..நான் நல்லவிதமா நடிச்சு அந்த கூட இருந்தே குழி பறிச்ச துரோகிய கண்டு பிடிக்கிறேன்..ப்ளீஸ்..என்னை அல்லோவ் பன்னுங்க.." என்று கெஞ்சினான் சக்தி..
"என் சஞ்சுக்காக அநியாயமா அவள கெடுத்து கொன்னு இருக்காங்க அவங்களோட உண்மையான முகத்தை இந்த உலகத்துக்கு காட்டனும் ப்ளீஸ்.."
என்றான்..
சிறிது நேரம் யோசித்தவன்..
சரியென ஒத்துக்கொள்ள..அவனிடம் எல்லா விவரமும் பெற்றுக்கொண்டு அவனை அனுப்பினர்..அவனையும் கண்காணிக்க ஒரு ஆளை அனுப்பினான் கிருஷ்.
அவன் சொல்வதை அப்படியே நம்பி விட முடியாதே அதனால் ஏஜென்சி மூலம் அவனது தகவல்களை சேகரித்தவர்கள் அவன் சொன்னது உண்மை என தெரிந்ததும் அவனை கான்டாக்ட் செய்து அந்த பென் டிரைவ் கேட்டனர்..அதை கொண்டு வந்து கொடுத்ததும் அதை போட்டு பார்த்தனர் மூவரும்..அதில் அவளை நாசம் செய்ததையும் அவள் சேகரித்த விஷயத்தையும் சஞ்சனா மொத்தமாக சொல்லி இருந்தாள்..பின் ஷியாமுக்கு அனுப்பிய வீடியோவும் இருந்தது..அதை பார்க்க பார்க்க கண்ணீர் விட்டு கதறினான் சக்தி..ஹர்ஷாவும் கிருஷ்ஷும் ஆறுதல் கூறி அடுத்து செய்ய வேண்டிய முடிவையும் சொன்னான் சக்தி..
"ஹர்ஷா சார்..எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும்.."
"அதுக்கு எதுக்கு சார் மோர்லாம் என்னான்னு சொல்லுங்க சக்தி.."
"எனக்குனு இருக்குற ஒரே சொந்தம் என் தங்கச்சி மீரா தான்..சப்போஸ் இந்த விஷயம்ல எனக்கு ஏதாவது ஆச்சுனா அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு
தர வேண்டியது நீங்க தான்..எனக்கு இப்படி ஒரு தங்கச்சி இருக்குறதே நிறைய பேருக்கு தெரியாது..அவளை எப்பவும் ஹாஸ்டல்லேயே இருக்க வெச்சு வளர்த்ததால அவளை நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பு இல்ல..இன்னும் ரெண்டு மாசத்துல அவ என்னை தேடி வந்திடுவா..அவளுக்கு உங்க டீடெய்ல்ஸ் கொடுத்திடுறேன்..அவளை உங்க பொறுப்புலேயே பார்த்துக்குவீங்களா..என் தங்கச்சினு தெரிஞ்சா அவளுக்கு ஏதாவது ஆகிடுமோனு கவலையா இருக்கு..ப்ளீஸ் ஹர்ஷா.." என்று அவன் வருத்தத்துடன் கேட்க..
"கவலை வேணாம் சக்தி..நான் அவளை என் சொந்த தங்கச்சியா எங்க கூடவே வெச்சு பார்த்துக்கறேன்..அதோட உங்களுக்கும் எதுவும் ஆக விட மாட்டேன்..நாம நிச்சயம் ஜெயிப்போம்..தப்பு பன்ற அவங்களே வெட்கம் இல்லாம சுத்துறானுங்க தப்பை சரி செய்ய முயற்சி செய்யுற நாம ஏன் பயப்படனும்..நீங்க கவலைபடாதீங்க சக்தி.." என்று சொல்லியவன் பிறகு அவர்கள் பார்த்து பேசும் இடங்களையும் தெளிவாக பேசி முடிவு செய்து கொண்டு கிளம்பினர்..
ஹர்ஷாவிடம் கேட்கவும் முடியாமல் தனக்கும் ஏதும் தெரியாமல் தவித்தபடி இருந்தாள் சமி..
ஹர்ஷா வந்ததும் அவனுக்கும் கிருஷ்ணாவிற்கும் பறிமாறியவளிடம்
"நீயும் வா சாப்பிடு..நரேன் தூங்கிட்டானா?" என்றபடி அவளுக்கும் ஊட்ட வர..
"நா..நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறேன்..நீங்க சாப்பிடுங்கனு" சொன்னாள்..
அவளை விநோதமாய் பார்த்தவன்.."உட்கார்ந்து சாப்பிடு ஜானு உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.." என்று கூறியபடி அவளை உட்கார வைத்தவன்..அவளுக்கு ஊட்ட அவன் பேசியதே மனதில் இருந்ததால் அவள் வாயே திறக்கவில்லை...பிறகு அவளை உலுக்கியவனை பார்த்தவள் வாயை திறக்க ஊட்டி விட்டான் அவன்..மூவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை யாருமே பேசவில்லை..பின் அவன் பேச துவங்கினான்...சமியிடம்..