32.
டீன் விகாஷினியிடம் திரும்பி, யாரும் icu குள்ள போக வேண்டாம் குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் ஆக சான்ஸ் இருக்கு வெளியே இருந்து பாருங்க..நாளைக்கு நார்மல் வார்டுக்கு மாத்தின அப்புறம் பாருங்க..மிஸஸ்.ஹர்ஷாதான் உங்க குழந்தையை காப்பாத்த பெரும்பாடு பட்டாங்க..அதை புரிஞ்சு நடந்துக்கோங்க.." என்றபடி சென்றுவிட்டார்..
விகாஷினியிடம் வந்த அவள் கணவன் "இப்பாவாச்சும் திருந்தி தொலைடி..பார்த்தியல்ல நீயும் உன் அம்மாவும் அந்த பொண்ணை எவ்வளவு கேவலமா பேசி அவமானம் படுத்தி இருக்கீங்க..ஆனா அது எதையுமே மனசுல வச்சுக்காம அந்த பொண்ணு எவ்ளோ பெருந்தன்மையா நடந்துகிட்டா பார்த்தியா? இதுதான் உங்களுக்கும் அந்த பொண்ணுக்கும் இருக்குற வித்தியாசம்..இனியும் நீங்க திருந்தலனு வைங்க..நீங்கலாம் வாழறதே வேஸ்ட்..போய் தொலைங்க எங்கனா" என்று விட்டு அவன் குழந்தையை icu வழியே பார்க்க விகாஷினி அங்கேயே உட்கார்ந்து அழுதாள்..அழுதவளை தேற்றிய சுமித்ராவும் அழுதார்..மாலை குழந்தையை செக் செய்த சமி அவளுக்கு இரவில் மருந்தின் வீரியம் காரணமாக பிட்ஸ் வர வாய்ப்பு உள்ளது உடனே அழைக்குமாறு சொல்லிவிட்டு கிளம்பி சென்றவள் நரேனுடன் சிறிது நேரம் விளையாடி அவனுக்கு உணவு ஊட்டி படுக்க வைக்க அவள் ஃபோன் ஒலியெழுப்ப..தன் தாயிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு உடனே ஹாஸ்பிடலுக்கு ஓடினாள்..அதற்குள் மொபைலிலேயே instructions கொடுத்து குழந்தைக்கு பிட்ஸ் அதிகம் ஆகாமல் தடுக்க வைத்தாள்..அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்தவள் கிட்டத்தட்ட ஓடினாள் அங்கு சென்று பார்க்க குழந்தைக்கு பிட்ஸ் குறைந்து இருக்க மொத்தமாய் குறைய வேற ஒரு ஊசியை போட குழந்தை நார்மலாகி தூங்க ஆரம்பித்தது.. அதன்பின் மீண்டும் பிட்ஸ் வந்தால் என்ன செய்வது என யோசித்தவள் நள்ளிரவு வரை குழந்தை அருகிலேயே இருந்தாள் பின்பு பிட்ஸ் வராததால் அவள் கிளம்ப அந்நேரம் அவளை அழைத்து போக வந்தான் ஹர்ஷா..மெடிக்கல் கான்ப்ரன்ஸ் முடிந்து வந்தவன் சமியை கேட்க மீனாட்சி அவள் ஃபோன் செய்ததும் 12 மணிக்கு மேல் வருவதாகவும் கூறினார் உடனே நானே போய் கூட்டிட்டு வர்றேன் என்றவனிடம் அவள் சாப்பிடாமலே சென்றுவிட்டாள் என்றும் சொன்னார்..சரியென அவளுக்கு டிபன் பார்சல் வாங்கிக்கொண்டு கிளம்பியவன் அங்கு சென்று பார்க்க நர்ஸ் எல்லாம் கூற அதிர்ச்சியில் ஓடினான் ஹர்ஷா.. அங்கு அவன் கண்டது..