16.
இந்த விஷயம் தெரிந்த ஹர்ஷாவிற்கோ இடியே தலையில் இறங்கியதை போல இருந்தது.. கிருஷ்ணா சொல்ல சொல்ல அவனால் ஷியாமின் இழப்பை பொறுத்துக்கொள்ள முடியவில்லை..
"தப்பு பண்ணவன் உயிரோட இருக்கான்..எந்த தப்பும் செய்யாம எல்லாருக்கும் நல்லது நினைக்கிற என் அண்ணன் உயிரை அநியாயமாக பறிச்சுட்டானே அந்த பாவி அவனை என்னடா செய்யுறது..என் ஜானு வாழ்க்கையே பாழா போய்டுச்சேடா..சிட்டுக்குருவி மாதிரி சந்தோஷமா சுத்திட்டு இருந்தாடா..இப்போ என்னை கூட அந்நியமா பார்க்கிற அளவுக்கு மாறிட்டாடா.."
என்று கதறினான் ஹர்ஷா.
அவனை ஆறுதல் படுத்திய கிருஷ்ணா..
"போலீஸ் சட்டம் பணபலம் எல்லாம் இருக்குற ஒருத்தரை ஷியாம் தனி ஆளா எதிர்த்தது தான்டா தப்பு..இப்போ இந்த விஷயம்லாம் சமிக்க்ஷாக்கு தெரியுமா இல்லையானு வேற தெரியல..தெரிஞ்சா அவளையும் குழந்தையையும் கொல்ல கூட தயங்க மாட்டாங்கடா..முதல்ல அவங்க கிட்ட பேசுடா இதபத்தி..அப்போதான் அவங்கள protect பண்ண முடியும்..இது சம்பந்தமான எந்த evidence இருந்தாலும் உடனே அதை என்கிட்ட தர சொல்லுடா நான் இந்த கேஸை ரகசியமாக முடிக்கிறேன்.." என்றான் கிருஷ்ணா.
"அவகிட்ட போய் நான் என்னானு பேசுறதுடா..என்னால அவளை இப்படி பார்க்கவே முடியல..இன்னும் அவளுக்குள்ள இவ்ளோ சோகத்தை ஒளிச்சு வெச்சுட்டு இருக்கானா அதை தாங்குற அளவுக்கு எனக்கு சக்தி இல்லடா..ஏற்கனவே அவளை எப்படி நார்மல் ஆக்குறதுனு நான் தவியா தவிச்சுட்டு இருக்கேன் இன்னும் அவளை சோகத துல இழுத்து விட்டு அழ வைக்க என்னால கண்டிப்பா முடியாதுடா.." என்று புலம்பினான் ஹர்ஷா..
"ஹர்ஷா please listen.. suppose சமிக்கு எல்லாம் தெரிஞ்சு இருந்தா அவ உயிருக்கும் ஆபத்து இருக்கு..எல்லாம் தெரிஞ்சும் நாம சும்மா இருந்தா சமியையும் இழக்கலாம்.." என்று கூற
"நோ நோ.." என்று கத்திவிட்டான் ஹர்ஷா.
"அதுக்குத்தான் அவகிட்ட பேசுடா.." என்றான் கிருஷ்ணா..
சிறிது நேரம் யோசித்தவன்
"கிருஷ்ணா நீ அந்த டாக்டரை deepஆ வாட்ச் பண்ணு அவன் சமியை வாட்ச் பன்றானானு தெரிஞ்சா சொல்லு..அவளுக்கு protection ready பண்ணலாம்.. அண்ட் இன்னொரு விஷயம் அவகிட்ட நீயே பேசுடா அவகிட்ட பேசுற அளவுக்கு எனக்கு தெம்பு இல்லடா நீயே பேசு என்னானு கேளு" என்றான் ஹர்ஷா
"நான் எப்படிடா?"
"என்னால அவகிட்ட பேச ஆகாதுடா..நீயே பேசு ப்ளீஸ்"
"சரிடா நான் பேசுறேன்..சரி வா போலாம்" என்றபடி இருவரும் கிளம்பினர் சமியை பார்க்க.
அங்கு ஹாஸ்பிடலில்..
"டாக்டர். சிவா இந்த ஷியாம் பயல கொன்னாச்சு ஆனா அவனை தவிர நம்ம விஷயம் இன்னும் யார் யாருக்கு தெரியும்னு தெரியலையே.."
"ஏன் சார் அந்த ஷியாம் தான் செத்து போய்ட்டாரே நீங்க ஏன் கவலைபடுறீங்க? வேற யாருக்கும் தெரிஞ்சு இருக்காது சார்.."
"யோவ் எதை வெச்சுயா அப்படி சொல்ற..? அவன் பொண்டாட்டி கிட்ட இல்ல அவங்க ப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லி இருந்தா என்ன செய்ய?"
"சார் அப்படி சொல்லி இருந்தா இன்னேரம் அவங்க கேஸ் ஆச்சும் கொடுத்து இருப்பாங்க ஆனா அவங்க எதுவும் செய்யல..அவங்க ப்ரண்ட்ஸ் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கலை..அப்போ அவங்களுக்கு தெரியலனு தானே அர்த்தம்.. ஷியாம் சாரோட வைஃப் கூட இதை ஆக்ஸிடென்ட்னு தானே சொன்னாங்க..அவங்களுக்கு தெரிஞ்சு இருந்தா இப்படியா இருந்து இருப்பாங்க அதும் ஆறு மாசத்துக்கு மேல அப்பவே வந்து உங்ககிட்ட சண்டை போட்டு இருக்க மாட்டாங்க..உங்களுக்கு தெரியாதா சார் அந்த பொண்ணு அவர் மேல எவ்ளோ பாசமா இருந்ததுனு..இதை வெச்சு தான் சார் சொல்றேன்.. ஷியாம் சார்க்கு நடந்தது ஆக்சிடென்ட் இல்ல நாம பண்ண கொலைதான்னு தெரிஞ்சா அந்த பொண்ணு சும்மாவா விட்டு இருக்கும்"
"நீ சொல்றதும் சரிதான்யா..எப்படியோ இந்த விஷயம் ஷியாமோடவும் அந்த சஞ்சனாவோடவும் போச்சு..இல்லைனா இன்னேரம் நம்ம பொழப்பு என்ன ஆகி இருக்கும்.. சரியா பார்த்துக்க..நான் நெக்ஸ்ட் அசைன்மெண்ட் எப்போனு சொல்றேன்.." என்று பேசியபடி கிளம்பினார்கள் இருவரும்...