58.எபிலாக்

9 0 0
                                    

59.நீயே வாழ்க்கை என்பேன் (Epilogue)

Epilogue
ஹர்ஷாவின் இரு தரப்பு குடும்பமும் குழந்தைகளை தாங்கியது.. சர்வாவின் ஹாஸ்பிடலை ஏலத்தில் எடுத்த பின் ஆகாஷை கேட்டு அதற்கு நிர்வாகியாக நியமித்தவன் சக்தியையும் ஒரு பாட்னர் ஆக்கினான்.. ஆனால் சக்தி சாராவுடன் இருந்ததால் அவன் வரும்போது பொறுப்புகளை ஏற்கும்படி செய்து இருந்தான் ஹர்ஷா..சமி குழந்தைகளை தன் மாமியார் மற்றும் தாய் தந்தையின் பொறுப்பில் விட்டு அவளும் ஹர்ஷாவிற்கு உதவியாக இருந்தாள்..
சாராவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்ததால் அவளை சீக்கிரமே சரி செய்ய முடியும் என கூறினர்..ஆதியும் இன்பாவும் ஒரு கண் ஹர்ஷாவை சுற்றி இன்னொரு கண் வேறு வேலை என இருந்தனர்..
இப்படியே மூன்று மாதம் கழிந்த நிலையில் ஹர்ஷா வெளியூரில் வேலை இருப்பதாய் கூறி கிளம்புவதாய்  சமியிடம் கூற அவள் என்னவென கேட்க..
"இல்ல ஜானு அங்க கொஞ்சம் வேலை இருக்கு அதான் ஒரு மெடிக்கல் சம்பந்தப்பட்ட விஷயம்..அதான்" என்று இழுக்க.. சந்தேகமாய் பார்த்த சமி..
"நீ என்கிட்ட பொய் சொன்னது இல்ல ஹர்ஷி.. இப்போ ஏன் பொய் சொல்ற.." என்றாள் கேள்வியாக.. அதில் அதிர்ந்தவன்..
"என்ன ஜானு சொல்ற நான் பொய் சொல்றேனா?" என்றவன் கேட்க..
"ஆமா.. நீ என்கிட்ட பொய்தான் சொல்ற" என்றாள் கோவமாய்..
"ஜானு இல்ல ஜானு" என்று கூற வர அவனை தடுத்தவள்...
"வேண்டாம் ஹர்ஷி.. நீ ஏதோ ஒரு ரீசனுக்காக என்கிட்ட ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிற பரவாயில்லை.. அதை நீயா சொல்ற வரை நான் வெயிட் பன்றேன்.. ஆனா அதுக்காக என்கிட்ட பொய் சொல்லிட்டு தான் நீ போகனும்னு இல்ல.." என்றவள் "எப்போ கிளம்பற" என்றாள்..
"இன்னைக்கு ராத்திரி ப்ளைட்.. ஆனா இனி நான் உன்கிட்ட எதையும் மறைக்க மாட்டேன் ஊர்ல இருந்து வந்ததும்  சொல்லிடுறேன்.. ஏன்னா இப்போ உன்கிட்ட சொல்ற சூழ்நிலையில நான் இல்ல.. ஆனா ஒன்னு ஜானு உன்கிட்ட மறைக்கனும்னு நான் எதுவுமே பன்னலடா.. இந்த விஷயத்தில என்னை நம்புமா" என்றான்..
"நீ சொல்றனு நான் நம்புறேன் ஹர்ஷி.. ஆனா உனக்கு எதுவும் ஆகாம பார்த்துக்க.. போதும் நாம பட்ட கஷ்டம்லாம், என்னால இதுக்கு மேலயும் நீயும் நானும் பிரிஞ்சு இருக்க நான் விடமாட்டேன்..அந்த கொலைகாரன என்னமோ செஞ்சு இருக்க ஆனா அதையும் என்கிட்ட மறைக்கிற.. பரவாயில்லை ஆனா இதுக்குமேல என்னால முடியாது..சோ உன்கூட கிருஷ்ணா அண்ணாவ கூட்டிட்டு போ.. என்னால உன்னை தனியா அனுப்பிட்டு கஷ்டபட முடியாது" என்று அவனை அணைத்துக்கொண்டாள்.. அவளது தலையை ஆதரவாய் தடவியவன்..
"சரிடா.. நான் கிருஷ்ணாவ கூட்டிட்டு போறேன் சரியா.. இனியும் நான்கூட உன்னை விட்டுட்டு இருக்க மாட்டேன்..நான் திரும்பி வரும்போது ஒரு நல்ல நியூஸ்ஸோட வருவேன்.. நீ என்னை பத்தி கவலைபட வேணாம் புரியுதா..நீ பத்திரமா இரு.. பசங்கள கவனிச்சுக்க.. ரெண்டே நாள் நான் வந்துடுறேன் சரியா" என்று அவள் கன்னங்களை தாங்கிய படி கேட்க..கண்ணீரோடு சரிஎன தலையசைத்தாள் அவள்..அவளை இறுக்கி அணைத்தவன் அவளது முன் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக்கொண்டான்.. நேரமாவதை உணர்ந்து அவன் ரெடியாக அவளை விலக்க அவளும் அவனை உணர்ந்து விலகி அவன் புறப்பட எல்லாம் எடுத்து வைத்தாள்..இரவு அவனும் கிருஷ்ணாவும் புறப்பட ஆதியும் இன்பாவும் வந்து சேர்ந்தனர்..
"என்னடா பாடிகார்ட் கூடவே வர்றாரா?" என்று இன்பா கிருஷ்ணாவை பார்த்து சிரித்தபடி கேட்க..
"இவன் பாடிகார்ட்னு பேர் வெச்சு என்கூட வர்ற உளவாளிடா.."என்று ஹர்ஷா கூறி சிரிக்க..
"டேய் போதும்டா.. ரொம்ப ஓட்டுனீங்க நிஜமாவே உளவாளியா மாறிடுவேன் பார்த்துக்க" என்று கூறி மிரட்ட..
"விட்றா விட்றா அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்" என்றான் ஆதி.
"ஏன் இப்படி" என்றான் கிருஷ்ணா..
எல்லோரும் பக்கென்று சிரித்து விட ஆதியிடம் ஹர்ஷா கண் ஜாடை காட்ட அவன் ஒரு சாவியை அவனிடம் ரகசியமாக கொடுத்தான்.. அதை வாங்கி வைத்தவன்
"Be carefulடா.. நான் வர்ற வரைக்கும் எல்லாரும் உஷாரா இருங்க" என்றபடி கிளம்பினார்கள் ஹர்ஷாவும்.. சமி அவனை ஃபாலோ பன்ன ஏற்பாடு செய்த ஆளை வேண்டாம் என தடுத்து விட்டாள்..Bcz of நம்பிக்கை..
இரண்டு நாட்கள்கழித்து வந்தான் ஹர்ஷா..இருவரையும் வரவேற்றவள் கிருஷ்ணாவை பார்க்க அவன் நிமிரவே இல்லை.. சமியின் தாய்
"என்னடா போன விஷயம் என்ன ஆச்சு?" என்று கேட்க நிமிர்ந்த ஹர்ஷா
"எல்லாம் நல்லபடியாக முடிஞ்சதுமா.. நாங்க முதல்ல குளிச்சிட்டு வர்றோம்.."என்றபடி விருவிருவென ரூமுக்குள் சென்றவன் குளிக்க சென்றான்.. குளித்து முடித்து வெளியே வந்தவனை பார்த்த சமி அமைதியாக இருந்தாள்.. சிறிது நேரத்தில் இன்பாவும் ஆதியும் வந்து இறங்க..ஹாலில் எல்லோரையும் கூட சொன்னான் ஹர்ஷா..
எல்லோரும் என்னவாக இருக்கும் என யோசனையோடு கூடினர்..
"என்னடா ஹர்ஷா.. என்ன விஷயம் எல்லோரையும் எதுக்குகூப்பிட்ட?" என்றார் சுமித்ரா.
"இருங்க மா சொல்றேன்" என்றபடி வாசலை பார்த்தான்..
எல்லோரும் வாசலை பார்த்தனர்..என்னவென்று பார்க்க அதற்குள் ஹர்ஷா வீட்டு வேலை செய்யும் மங்களம் என்னும் பெண்ணை அழைத்து ஏதோ கொண்டு வர சொல்லி கூற அவளும் வேகமாய் ஓடினாள்..
"என்னாச்சு ஹர்ஷா?" என்று சிவம் கேட்க
"அப்பா வெயிட்பா சொல்றேன்" என்றுவிட்டு மீண்டும் வாசலை பார்த்தான்.. சமி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்..
திடீரென ஹர்ஷா
"மங்களம் சீக்கிரம்வாங்க" என்று கத்தினான் வாசலை பார்த்தபடி..
எல்லோரும் பார்க்க அங்கே சாரா நின்றிருந்தாள் சக்தியோடும் அவள் தந்தையோடும்..அவளை பார்த்து எல்லோரும் ஆச்சர்யம் அடைந்தனர்..
சமி வேறு பக்கம் திரும்பி இருந்தாள் அவளை கிருஷ்ணா தட்டி வாசலை பார்க்கசொல்லி கை நீட்ட அவள் பார்த்தவள் ஆச்சர்யத்தில் கண்களை விரித்து பார்த்தாள்..சாராவும் அவளைதான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.. அவளை கண்டவள் ஓடிச்சென்று அவளை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள்..அவளும் இவளை கட்டிபிடித்து கண்ணீர் விட்டவள் அவளை பார்த்து கேட்டாள்..
"பாப்பா பொறந்துடுச்சா" என்று.. கண்ணீரோடு தலையாட்டியவள் திரும்பி பார்க்க அங்கு நின்றிருந்த ஹர்ஷா..
"முதல்ல ஆரத்தி எடுத்து அவங்கள உள்ளே கூட்டிட்டு வா" என்றான். சரியென கண்ணீரோடு தலையசைத்தவள் மங்களமிடமிருந்து ஆரத்தி தட்டை வாங்கி சாராவிற்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு பின் அதை அவளிடம் கொடுத்து விட்டு
"வாங்க" என்று கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தாள்.. உள்ளே வந்தவளின் அருகில் மீனாட்சியும் சுமித்ராவும் கைகளில் குழந்தைகளை தூக்கி வந்து சாராவின் எதிரில் நின்றனர்.. இரு குழந்தைகளை பார்த்த சாரா இன்ப அதிர்ச்சியில் சமியை கட்டிக்கொண்டாள்
"ட்வின்ஸ்ஸா" என்று ஆச்சர்யமாய் கேட்க ஆமாம் என்பது போல் தலையசைத்தவள் அவளை சோபாவில் அமர வைத்து இரு குழந்தைகளையும் வாங்கி அவளின் இரு கைகளிலும் கொடுத்தாள்.. இருவரையும் தாங்கியவள் கண்கள் கலங்கியது.. அவளது கண்களை துடைத்தவள்
"இவங்களும் உங்க குழந்தைங்க தான் நீங்கதான் இவங்களுக்கு உயிர் கொடுத்தீங்க.. அதனால அழக்கூடாது"என்றாள்..அவளும் தலையை ஆட்டியவள் குழந்தைகளை கொஞ்ச ஆரம்பிக்க எழுந்த சமி பின்னோக்கி நடந்தவள் சாராவின் தந்தையை பார்த்தவள் அவரது தோளில் கண்ணீரோடு சாய்ந்து கொண்டாள்..
"எனக்கு மன்னிப்பே இல்லயாபா?" என்று கண்ணீரோடு அவரை கேட்க.."நடந்த எதுக்கும் யாரும் காரணமில்லடா.. அது உன்னாலதான்னு நீ கவலைபடுறத முதல்ல நிறுத்து.. இன்னைக்கு சாரா எனக்கு திரும்ப கிடைச்சு இருக்கான்னா அதுக்கு உன் புருஷன்தான் காரணம்.. அவர்தான் அவளுக்கான எல்லா வைத்தியமும் ஏற்பாடு செஞ்சார்..அதனால நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்ல புரியுதா.." என்று கூற புரியாமல் அவரை பார்த்தாள் சமி.
"ஆமான்டா அவரும் சக்தியும் இல்லனா சாரா கண்விழிச்சு இருக்கவே மாட்டா" என்று அவர் கூற விழி விரித்து தன் கணவனை திரும்பி பார்க்க அவள் அமைதியாக சிரித்தபடி அவளைதான் பார்த்துக்கொண்டிருந்தான்.. ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டவள்
"இன்னும் எனக்காக என்னலாம் செய்ய போற ஹர்ஷி.. நான் உனக்குனு எதுவுமே செய்யலையே.. ஏன் என்மேல இவ்வளவு பாசம்" என்றவள் அவனை அணைத்துக்கொள்ள தன் அணைப்பையும் இறுக்கியவன்
"Bcz i love u" என்றான்..
எல்லோரும் கோரசாக
"ம்ம்க்கும்" என்று தொண்டையை செரும அவள் அவனிடம்இருந்து வெட்கத்துடன் விலகினாள்..
எல்லோரும் சிரித்தனர்.. அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தவன்..
"அப்படியே ரெண்டு குட் நியூஸ் சொல்றேன்" என்றபடி பேச துவங்கினான் ஹர்ஷா.. எல்லோரும் என்னவென்று அவனை பார்க்க..
"முதல் ஹாப்பி நியூஸ் என்னனா.. வர்ற முகூர்த்தம்ல நம்ம கிருஷ்க்கும் மீராவுக்கும் கல்யாணம் செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்..இது சக்தியோட சம்மதத்துடன் தான் முடிவு செஞ்சது.." என்றபடி நிறுத்த அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.."இரண்டாவது குட் நியூஸ் என்னனா?" என்று இழுத்தவன் அனைவரையும் பார்க்க சிரிப்பை விடுத்து அனைவரும் அவனை கேள்வியாய் பார்க்க..
"அதே முகூர்த்தம்ல நம்ம சக்திக்கும் கல்யாணம் செய்யலாம்னு முடிவு பன்னி இருக்கோம்.. பொண்ணு யாரா இருந்தாலும் பரவாயில்லைனு சக்தி சொல்லிட்டான் அதான் எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணோட அப்பாகிட்ட பேசி சம்மதம்லாம் வாங்கிட்டேன்.." என்றுவிட்டு பார்க்க எல்லோரும் மகிழ்ந்தனர்.. சாரா மட்டும் தலையை குனிந்து கொண்டாள்.. ஆம் சக்தியின் சிகிச்சை மற்றும் அனுசரணையில் சக்தியை விரும்ப தொடங்கி விட்டாள் சக்தியும் அவளை விரும்பி அவளிடம் கூற அவள் மறுத்துவிட்டாள்.. தனக்கு ஏற்கெனவே திருமணமானது அவரை மறந்து நான் உங்கள கல்யாணம் பன்னினா அது நான் அவருக்கு செய்யுற துரோகம் அது இதுனு சொல்லி மறுத்து விட்டாள் ஆனால் அவள் அவனை விரும்புவது அவனுக்கே தெரிந்து இருந்தது ஆனாலும் ஊர் உகலம் என்ன சொல்லும் என்று எண்ணி மறுத்துவிட்டு அன்று முழுதும் அழுதாள் பிறகு தன்னல தேற்றிக்கொண்டாள்..அதனால் சக்தியும் அவளை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டான்.. ஆனால் அவன் கல்யாணத்திற்கு சம்மதித்து இருப்பான் என்று அவள் எதிர்பார்க்காததால் அவளுக்கு இந்த செய்தி வருத்தமாய் இருந்தது..இதையெல்லாம் கவனித்த ஹர்ஷா "அந்த பொண்ணுக்கு தன் இவனை புடிக்குமோ புடிக்காதோனு டவுட் இருந்துச்சு.. இப்போ க்ளீயர் ஆகிடுச்சு.. அவ இவன்மேல உயிரையே வெச்சு இருக்கானு.." என்று கூற
"என்னடா சொல்ற ஒன்னும் புரியல" என்றார் சுமித்ரா..
"அது ஒன்னுமில்லமா நாங்க பொண்ணு கேட்டு போகும்போது அந்த பொண்ணு இல்ல அப்புறம் இப்போதான் இவன் ஃபோட்டோ பார்த்து ஓகே சொல்லிடுச்சு அதைத்தான் சொன்னேன்.." என்றான் ஹர்ஷா..
"ஓஓ.. அதானா நம்ம சக்தியை புடிக்காத பொண்ணு இருக்குமா என்ன? ஆமா பொண்ணு யாருனு சொல்லவே இல்லையே" என்றாள் சமி...
"அதுவா அந்த பொண்ணே வந்துடுவாங்க பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. எல்லாம் உங்களுக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணுதான்.. இதோ அந்த பொண்ணே வந்தாச்சே" என்று அவன் கூற சட்டென நிமிர்ந்தாள் சாரா.. எல்லோரும் அவள்முன் வைக்கபட்ட கண்ணாடியை பார்க்க அவள் மட்டும்வாசலை பார்த்தாள்..எல்லோரும் ஓஹோஹோ.. என்று கத்த அவள் ஒன்றும் புரியாமல் சமியை பார்க்க அவளது முகத்தை திருப்பி கண்ணாடியில் பார்க்கும்படி செய்தாள் சமி.. அவளை கண்டதும் அவளுக்கு கண்ணீர் வர..
"முதல் கணவர் இறந்துட்டா அவரையே நினைச்சு நம்ம வாழ்க்கையை மட்டும் இல்ல நம்மள சுத்தி இருக்குறவங்க சந்தோஷத்தையும் கெடுக்க வேண்டாம் சாரா.. ஊர் உலகம் என்ன சொல்லுமோனு இவரு நினைச்சு இருந்தா நான் இன்னைக்கு இந்த நிலையில் இருந்து இருக்க மாட்டேன்.. தீபக் அண்ணா கூட நீங்க சந்தோஷமா வாழனும்னு தான் நினைப்பாரு.. சக்திக்கும் அவன் லவ்வர இழந்துட்டு தான் உங்ககிட்ட வந்து இருக்கான் அப்போ அவனை தப்புனு சொல்லலாமா?" என்று சமி கேட்க..
"அப்படி இல்ல சமி" என்று அவள் தடுக்க
"இந்த உலகத்தில எல்லா விஷயத்துக்கும் நல்லது கெட்டதுனு பேசுவாங்க.. நாம நல்லத மட்டும் எடுத்துப்போம் சாரா.. ஒத்த பொண்ண பெத்து அவ வாழ்க்கை என்ன ஆகுமோனு ஏங்குறாரே அவரை பத்தி யோசிச்சீங்களா.. முதல்ல நாம சந்தோஷமா இருக்கனும் அப்போதான் நம்மல சுத்தி இருக்குறவங்க சந்தோஷமா இருப்பாங்க ஊர்ல இருக்குறவங்களுக்கு நம்மலோட நல்லத யோசிக்க டைம் இல்ல சாரா நமக்கான நல்லது நம்மல தேடி வரும்போது நாமதான் அதை ஏத்துக்கனும்" என்றாள் சமி.. சாரா அவளை அணைத்துக்கொண்டு அழுது விட்டாள்...அவளை ஆறுதல் படுத்தியவள் சக்தியை கை காட்டி
"இப்போ இவர கட்டிக்க சம்மதமா?" என்று கேட்க
"ஆனா அவரு" என்று சாரா இழுக்க
"உங்க அப்பா கால்ல விழுந்து அழுது புரண்டு கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினதே அவன்தான்" என்று ஹர்ஷா கூற அனைவரும் சிரித்துவிட இருவரையும் சேர்த்து வைத்தனர்.. இது எது நடந்தாலும் எங்களுக்கு கவலை இல்ல என்ற ரேஞ்சுக்கு லுக் விட்டுக்கொண்டு இருந்தனர் கிருஷ்ஷும் மீராவும்..
"இங்க அவனவன் உயிர கொடுத்து ஃபர்பாமன்ஸ் பன்னிட்டு இருக்கான் நீ தனி ட்ராக்ல ட்ராவல் பன்ற" என்று அவனை இடித்த இன்பா
"அடிங்கடா இவன" என்று எல்லோரும் சேர்ந்து அடிக்க.
"ஏன்டா ஒழுங்கா லவ்வே பன்னலடா நாங்க இப்பவாச்சும் செய்ய வுடுங்கடா" என்றான் அடி வாங்கியபடியே..
"ஏன்டா நீ லவ் பன்னலனா அப்போ நான்லாம் என்னத்த சொல்லுறது..பேருக்குதான் லவ் ஸ்டோரி என்னைய பாடா படுத்திட்டானுங்க" என்று ஹர்ஷா புலம்ப
"நீ ஹீரோ மேன் அது உன் தலையெழுத்து வொய் மீ?" என்று கிருஷ் கேட்க..
"Bcz யு ஆர் மை ப்ரண்ட்" என்று ஹர்ஷா கூற..
"போங்கடாங்.. இங்க இருந்தா நீ என்னை உன்ன மாதிரி மாத்திடுவ வா மீரா நாம ஓடிடுவோம்" என்றபடி அவளை இழுத்துக்கொண்டு ஓடியே விட்டான் வெளியே..
"டேய்..டேய்" என்று எல்லாரும் கத்த அவன் காதில் விழுந்தால்தானே..சக்தியும் இதான் சாக்கு என்று சாராவை கூட்டிக்கொண்டு போய்விட்டான்.. அனைவரும் அவர்களை பார்த்து சிரிக்க சாராவிற்குதான் வெட்கமாய் போயிற்று..எல்லோரும் கல்யாண பேச்சு பேச ஆரம்பித்து விட்டனர்..இரவு அனைவரும் உறங்க செல்ல சமியின் தாயும் சுமித்ராவும் பிள்ளைகளை தாங்கள் பார்த்து கொள்வதாக கூறி தூக்கி சென்று விட நரேனும் அவர்களோடே சென்று விட்டான்.. ரூமிற்குவந்த ஹர்ஷா விவரம் அறிந்து தன்னவளை தன் மடிமீது அமர்த்திக்கொண்டான்..
"நான் ஊர்ல இருந்து வந்ததும் உன்கிட்ட சொல்றேன்னு சொன்னேனே அதை சொல்லத்தான் வந்தேன் ஜானு"
என்று கூற அவனை திரும்பி பார்த்தவள் அமைதியாகவே இருந்தாள்..
"நான் அந்தமானுக்கு தான் போனேன் ஜானு அந்த சர்வாவை பார்க்க" என்று அவன் நிறுத்த அவனை அதிர்ச்சியாய் பார்த்த சமியின் இமைகளில் முத்தம் தந்தவன்..
"ஆமா.. உனக்கு முதல்ல இருந்து சொல்றேன் இரு.. அன்னைக்கு அவன் என்னையும் உன்னையும் அடிச்சுட்டு போனான்ல.. அப்போ.."அவன் படியில் அருகில் தள்ளாடி வரும்போது படியின் துவக்கத்தில் அவனை எட்டி உதைத்தது ஓர் உருவம்.. அது யாருமில்ல நம்ம ஆதி தான்... முதலில் மயக்கம் தெளிந்து எழுந்தவன் அங்கிருந்த ரூமில் சத்தம் வர அந்த கதவை திறக்க கிருஷ்ணாவை தவிர எல்லாம் மயங்கி இருந்தனர்.. கிருஷ்ணாவை அழைத்துக்கொண்டு மீண்டும் ரூமை பூட்டியவன் சமியை காப்பாற்ற வேண்டுமே என திரும்ப அப்போதுதான் சர்வா தள்ளாடியபடி வந்து கொண்டு இருந்தான்.. அவனை கண்டு வெறி கொண்டு எட்டி மிதித்தான் ஆதி.. அதில் அவன் உருண்டு படிகளில் விழ.. கிருஷ்ஷும் ஆதியும் இவை அனைத்தும் ஹர்ஷாவின் ப்ளான்படி நடப்பதால் அவனை கை கால் மற்றும் வாயை நன்கு கட்டி அவனை தூக்கி சென்றனர்.. அவனை ஏற்கனவே ஏற்பாடு செய்து இருந்த ஒரு படகில் வைத்து இரண்டு ஆட்களுடன் அனுப்பினர்.. பின்பு எதுவும் நடக்காதது போல் அவர்கள் மயக்கம்தெளிந்து எழுவது போல் ஹர்ஷாவை பார்க்க செல்ல ஆதி மற்றும் கிருஷ்ணா எதிர்பாராதது சமி அங்கே பிரசவ வலியில் துடிப்பது..அவனிடமிருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டபடி சமி நடக்காததால் அவள் அவன் பிடியில் மாட்டிக்கொண்டாள்.. பின்பு நடந்தது எல்லாம் அவசரகதியில் நடந்தது..அவனை தூக்கி சென்ற இருவரில் ஒருவர் மருத்துவர் இன்னொருவர் போலீஸ்.. மருத்துவர் அவனுக்கு முதலுதவி செய்ய..அவன் காயத்திற்கு மருந்து போடபட்டு அந்த தீவின் பாழடைந்த ஒரு ஃபேக்டரியில் நீண்ட சங்கிலியில் கட்டி வைக்க பட்டான்..ஹர்ஷா அங்கிருந்து கிளம்பும் முன் அவனை காண செல்ல ஆதியும் கிருஷ்ஷும் கூட சென்றனர்.. அப்போது அவன்
"என்னடா ஹர்ஷா நீ பெரகய ஹீரோனு நினைச்சேன் ஆனா நீ சரியான பயந்தாங்கோளியா இருக்கியே..நீதி நேர்மைனு பேசி தான் அந்த ஷியாம் செத்தான்.. அந்த சமி உயிரோட இருக்குற வரை அவள சந்தோஷமா வாழ விட மாட்டேன்டா.. என் சந்தோஷத்த கெடுத்தவள நான் கொல்லாம விட மாட்டேன்டா.."என்று கத்த அவனை எட்டி மிதித்த ஹர்ஷா தூர சென்று விழுந்தவனை அவிழ்த்து விட சொன்னான்..அவர்களும் அவிழ்த்து விட அவனை தாக்க ஓடி வந்தவன் எதிலோ முட்டி தூக்கி எறிய பட்டான்.. என்னவென்று பார்க்க கண்ணாடி திரை அமைக்கப்பட்டு அதில் முழுவதும் கரண்ட் பரவும்படி அமைக்கப்பட்டு இருந்தது..
"என்னடா பாக்கற நீ பண்ண பாவத்துக்கு நீ அனு அனுவா துடிச்சு சாக போறடா இதை தொட்டா ஷாக் அடிக்கும் தொடலைனா டெய்லி ஒரு ஊசி உன்னை துளைக்கும்.. டாக்டர் தொழில் எவ்வளவு புனிதமானது அதை உன்னமாதிரி நாதாரி கேவலப்படுத்த நான் விட மாட்டேன்.. ஒரு பாவமும் அறியாத என் ஜானுவ பூவை கசக்கிற மாதிரி கசக்கின.. என் உயிரான ஹர்ஷா அண்ணாவ கொன்ன.. அவருக்கு சப்போர்ட் பன்ன ஒரே காரணத்திற்காக ஒன்னும் தெரியாத அந்த சஞ்சனாவ கெடுத்து கொன்ன.. சக்திய கொல்ல பார்த்த மீராவ கடத்தின..தீபக்க கொன்ன கடைசியா அந்த சாராவையும் என் ஜானுவையும் கொல்ல பார்த்த.. இவ்வளவு அநியாயம் செஞ்சப்போலாம் கூட நான் பொறுத்து தான் போனேன் ஆனா என் நரேனையே கொல்ல பார்த்தியே இதுக்கு மேலயும் உன்ன விட்டு வைக்க நான் என்ன லூசா.." நீ எப்படியும் எங்கள தேடி வருவனு தெரியும் அதான் எல்லா வகையிலும் உன்ன கொல்லனும்னு தான் முதல்ல யோசிச்சேன்..ஆனா அப்படி நீ உடனே செத்துட்டா நீ என்னவெல்லாம் செஞ்சனு உனக்கே தெரியாம போய்டும்..நான் இப்போ போறேன் நீ சாகுற அன்னைக்கு வருவேன்..நீ எந்த பக்கமும் தப்பிக்க முடியாது.. இது இப்படி ஒரு அமைப்பு இருக்குறதே எங்களுக்கு மட்டும்தான் தெரியும் இந்த பட்டன அழுத்தினா இந்த இடம் பழைய படி தான் இருக்கும் அப்படித்தான் உனக்காக நான் ரெடி பன்னேன்..வர்ட்டா.." என்று விட்டு அனைவரும் கிளம்பினர்..அவன் சொல்ல சொல்ல ஆச்சரியம்தாங்காமல் அவனை விழி விரித்து பார்த்துக்கொண்டு இருந்தாள் சமி..
"நேத்து தான் அவன் துடிச்சு செத்தான் ஜானு அவனை அதே கரெண்ட் ஷாக் வெச்சு பஸ்பம் பண்ணிட்டு அந்த இடத்த டெமாலிஷ் பண்ணிட்டு வந்துட்டோம்.. இத உன்கிட்ட சொல்ல கூடாதுனு இல்ல நீ ஏற்கனவே ரொம்ப பட்டுட்ட இன்னும் கஷ்டபடுத்த கூடாதுனு தான் சொல்லல.. ஆனா நான் எங்கே போனாலும் ஆள் அனுப்புறவ நேத்து நான் போகும்போது அனுப்பல..அதான் உன்கிட்ட இனி மறைக்க கூடாதுனு சொல்லிட்டேன்.. நான் தப்பு பன்னலனு நினைக்கிறேன் ஜானு.. எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம் கொடுத்து இருக்கான் தெரியுமா அந்த துரோகி.. அவனை போலீஸ்கிட்ட விட்டா திரும்ப வெளியே வந்து திரும்ப பழிவாங்குவான் ஈல்லா தப்பும் செய்வான் கொல்லனும் ஆனா அவன் சாவு சாதாரணமா இருக்க கூடாதுனு நினைச்சேன்..அதான் இப்படி யோசிச்சேன்.. அதுக்காக நான் கொலைகாரனா ஆனா கூட பரவாயில்லை" என்று கூற அவன் இதழ்மேல் கை வைத்தவள் இல்லையென தலையாட்ட..
"நீ கொலைகாரன் இல்ல ஹர்ஷா.. எல்லார் வாழ்க்கையையும் மீட்டு கொடுத்து இருக்க..நீ எடுத்த முடிவு தான் சரி ஹர்ஷி.. ஷியாம் இருந்தா கூட நான் இவ்வளவு சந்தோஷமா வாழ்ந்து இருப்பேனானு சந்தேகம்தான் ஆனா நீதான் என் சந்தோஷம் நீதான் என் துக்கம்..நீதான் என் வாழ்க்கை ஹர்ஷி..அதனால தான் நான் உன்ன ஃபாலோ பன்ன ஆள் அனுப்பினேன்..
எனக்காக எனக்காகனு நீ வாழ்ந்து உனக்கான வாழ்க்கைய இழந்துட்டியோனு எனக்கு கஷ்டமா இருக்கு ஹர்ஷி" என்று அவள் கலங்க இப்போது இதழ்மூடியது அவன் விரல்கள்..
"உனக்காக இல்ல ஜானு நமக்காக.. ஏன்னா..நீயே என் வாழ்க்கைனு தான் சொல்லுவேன்.. உன்ன தாண்டி வேற எதையும் என்னால யோசிக்க முடியாதுடி.." என்றவன் அவளை கட்டிக்கொண்டான்..அவனின் அணைப்பில் மகிழ்ந்தவள்.. அவனைவிட்டு விலகி அவன் கன்னங்களை தாங்கியவள் முதன் முறையாக தானாக அவனுக்கு இதழ் முத்தம் வழங்கினாள்..அதில் கிறங்கியவன் அவளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு ஆட்சி செய்தான்..அவர்கள் வாழ்க்கை இனிதே நடந்தது..
சுப முகூர்த்த நாளில் கிருஷ்ணா மீரா, சக்தி சாரா திருமணம் நடந்தேறியது.. தன் மகன்கள் மற்றும் மகளுடன் இனிமையான வாழ்வை நடத்த ஆரம்பித்தான் ஹர்ஷா..

நீயே வாழ்க்கை என்பேன்Where stories live. Discover now