8. நீயே வாழ்க்கை என்பேன்

15 0 0
                                    

8.8... நீயே வாழ்க்கை என்பேன்

இந்நிலையில்.. ஹர்ஷாவின் தங்கை விகாஷினிக்கு திருமண ஏற்பாடு நடக்க சமியும் ஹர்ஷாவும் இணைந்து அவளது திருமணத்திற்கு எல்லா வேலையும் செய்தனர்...இதையெல்லாம் பார்த்தவர்கள் எல்லோரும் சமியை ஹர்ஷாவின் வருங்கால மனைவி என்றே எண்ணினர்..இதை தாங்க முடியாத ஹர்ஷாவின் தாய் சுமித்ரா ஒருநாள் ஷியாமை அழைத்து பேசினார்...
"இங்க பாருங்க தம்பி..இவங்க ரெண்டு பேரும் பேசுறது பழகுறதை எல்லாருமே தப்பாதான் பேசுறாங்க நினைக்கிறாங்க..அதனால நீங்க சமிய இங்க இருந்து கூட்டிட்டு போய்டுங்க.." என்றார்.
"ஏன்மா..ஹர்ஷா உங்க பையன் நீங்களே அவங்க உறவை சந்தேக படுறீங்களா?" என்று கேட்டான் ஷியாம்
"ச்சே..ச்சே..என் பையன்மேல எனக்கு எந்த சந்தேகமும் இல்லைபா..சமியும் குழந்தை தனமாவே இருக்கா..ஆனா பார்க்கிறவங்க எல்லாரும் அவங்கள தப்பா புரிஞ்சுக்கிறாங்களே..எல்லார்கிட்டயும் போய் நான் விளக்கம் கொடுத்துட்டு இருக்க முடியாதே..என் பொண்ணோட சம்மந்தி வீட்டுகாரங்க கூட இவங்களை பத்தி தப்பாதான் நினைக்கிறாங்க..அதான் அவங்களுக்கு practice முடிஞ்சு placement ஆகப்போகுதுல... placement எங்கே ஆகுதோ அதுவரைக்கும் அவளை நீங்க கூட்டிட்டு போய்டுங்களேன்.." என்றார் சுமித்ரா
"இதுதான் உங்க பிரச்சினைனா நான் என மனைவியை கூட்டிட்டு போய்டுறேன்..." என்றவன்.
என்ன சொன்னானோ ஏது சொன்னானோ அவனுடன் கிளம்பி சென்றுவிட்டாள் சமி..
ஆனால் விதியோ ஹர்ஷா சமி இருவருக்கும் ஹைதராபாத்திலேயே ஒரே ஹாஸ்பிடலில் வேலை கிடைக்க...ஷியாம் யோசனையில ஆழ்ந்தான்..அதே சமயம் அவன் மனதில் இருவரின் மேல் எள்ளளவும் சந்தேகம் வரவில்லை.. ஒரு முடிவு எடுத்தவன் ஹைதராபாத்தில் ஒரு வீடு வாங்கிவிட்டு.. தன் வேலையையும் அங்கேயே மாற்றிக்கொண்டான்..தனது அத்தை மாமாவையும் அழைக்க அவர்கள் அடிக்கடி வந்து பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட..இவர்கள் மட்டும் கிளம்பினர்..ஹர்ஷா அவன் வீட்டில் இருந்தாலும் தினமும் வீட்டிற்கு வந்து இவர்களுடன் சிறிதுநேரம் இருந்துவிட்டு தான் சென்றான்..
அந்நேரம் ஹர்ஷாவின் தங்கையும் சமிக்க்ஷாவும் ஒரே நேரத்தில் கரு உண்டாக ஹர்ஷா தன் தோழியை பார்த்துக்கொண்ட அளவிற்கு தங்கையை பார்த்துக்கொள்ள வில்லை..எனவே அவளும் சமியை வெறுத்தாள்..
ஷியாமோ தன் மனைவியை பாசமாகவும் அதே நேரம் பத்திரமாகவும் பார்த்துக்கொண்டான்...சமியை பார்த்துக்கொள்ள அவளது தாயும் தந்தையும் வந்து அவர்களுடனே தங்கிவிட..ஷியாம்க்கு திருப்தியாய் இருந்தது..ஹர்ஷாவின் தாயும் பழையபடி சரியாகி விட்டார்..ஆனால் விகாஷினியோ சமி மேல் பகையை வளர்த்துக்கொண்டே இருந்தாள்...
அதன்பின் இருவருக்கும் வளைகாப்பை வேண்டுமென்றே ஒரே தினத்தில் வைக்க அடம்பிடித்தாள் விகாஷினி..அவளது அம்மாவும் இந்த சமயத்தில் அவளது ஆசைதான் முக்கியம் என அதே தேதியை குறித்துவிட்டு..ஹர்ஷாவிடம் "வேறு நல்ல நாள் இல்லையாம்பா..அவளோட நேரப்படி..அப்புறம் தள்ளிப்போட ஆகாது.. ஏன்னா எப்போ வலி எடுக்கும்னு சொல்ல முடியாதுல..அதனால அந்த தேதியிலேயே வைக்கலாம்பா" என்று சொல்ல மனதே இல்லாமல் சம்மதம் சொன்னான் ஹர்ஷா.. கூடவே ஷியாமை சந்தித்து விஷயம் சொல்லவும்..
"அம்மா சொல்றதும் நியாயம்தானேடா..இங்கதான் சமி கூட நாங்க எல்லாரும் இருக்கோம்ல பார்த்துக்கறோம்..நீ அங்க functionஅ நல்லபடியா முடிச்சுட்டு வா..உனக்காக உன் friend அலங்காரம் கலைக்காம நான் இருக்க வைக்கிறேன் சரியா..வேற எதுவும்னா தள்ளி போட்டுக்கலாம்டா..குழந்தை விஷயம்ல இது சீக்கிரமே செய்யறது பெட்டர்டா...அதும் இல்லாம அவளுக்கு அண்ணானு நீதானே இருக்க..சோ..நீ அவளுக்கு எல்லாம் செய்டா நல்லபடியா..நாங்க பார்த்துக்கறோம்.."என்று அவனை சமாதானம் செய்ய..சமியை திரும்பி பார்த்தான் ஹர்ஷா..
"நான் என்ன வேறவா சொல்லப்போறேன் என் மூஞ்சியை பார்க்குற..அதேதான் போ..போய் உன் தங்கச்சிக்கு வேண்டிய ஏற்பாடு எல்லாம் கிட்ட இருந்து செய்..நான் function முடிஞ்சு வெயிட் பண்றேன்.." என்று கூற அவளை பெருமையாய் பார்த்தவன் அவளிடம் ஒரு பார்சலை நீட்ட அதை வாங்கி பிரித்து பார்க்க...அதில் ரொம்ப உருத்தாத மிருதுவான தங்க கலர் பட்டு சேலையும் அத்துடன் அதற்கு பொருத்தமான நகை செட்டும் இருந்தது..அதை பார்த்தவள் கண்கள் மின்ன "அழகா இருக்கு ஹர்ஷா.. சூப்பரா இருக்கு..விகாஷினிக்கு ரொம்ப அழகா இருக்கும் இது.." என்று கூற உடனே முகம் வாடியவன்
"இது உனக்கு நான் வாங்கினது..அவளுக்கு வேற வாங்கிகிட்டா அவளே..நான் காசு கொடுத்துட்டேன்.." என்றான்..
"நீ எனக்காக வாங்கினியா..நம்பவே முடியலடா ஹர்ஷி..ஆனா சூப்பரா இருக்கு.." என்றவள் ஷியாமிடம் காட்ட..அவனோ
"ஹப்பாடா..அப்போ எனக்கு புடவை வாங்குற வேலையும் நகை வாங்குற வேலையும் மிச்சம் பண்ணிட்டான்" என்றான் பெருமையாக..
"டேய் அண்ணா..இது நான் அவளுக்கு கொடுக்குற கிஃப்ட்.. அவ சீமந்தம்க்கு நீங்க செலக்ட் பண்ணி வாங்குங்க அதான் அவளுக்கு பிடிக்கும்.." என்றான் ஹர்ஷா.
"ஏன்டா..நான் வேற நீ வேறயா..ரெண்டும் ஒன்னுதான்..என்னைவிட நீதான் அவளுக்கு எல்லாம் பார்த்து பார்த்து வாங்குவ..நீதான் functionல கூட இருக்க மாட்ட.. atleast நீ வாங்கின புடவையும் நகையுமாச்சும் அவ கூட இருந்தா அவ ரொம்ப சந்தோஷப்படுவா..என் அத்தை மாமா நான் சொல்றது சரிதானே" என்று கேட்க..அவர்களோ பெருமிதமாய் அவனை பார்த்து தலையசைக்க சமியோ அவனை கட்டிக்கொண்டாள்...
"நீங்க ரெண்டு பேரும் எனக்கு கிடைக்க நான் ரொம்ப லக்கி.." என்றாள் சமி.
"நாங்களும் தான்.." என்றான் ஷியாம்.
"இல்லடா அண்ணா..நாங்க ரெண்டு பேரும் தான் லக்கி உன்னை மாதிரி எங்க ப்ரண்ட்ஷிப் புரிஞ்சு நடந்துக்கற ஆள் கிடைக்க.." என்று ஹர்ஷா கூற
"அம்மா பிள்ளை பாசம்தான்டா உங்க பாசம் அது எனக்கு புரிஞ்சதால எனக்கு வேற எதுவும் தோணலை தோணவும் தோணாது..ஏன்னா உங்க ப்ரண்ட்ஷிப் அப்படி.." என்றவன் அவனையும் சேர்த்து அணைத்துக்கொண்டான்..
அடுத்த ஒரு வாரத்தில் விகாஷினிக்கும் சமிக்க்ஷாவிற்கும் சீமந்தம் நல்ல முறையில் நடந்தது...விகாஷினிக்கோ செம குஷி தன் அண்ணன் தன் தோழியை விட தனக்கு முன்னுரிமை கொடுத்து தன் வளைகாப்பில் கூடவே இருந்து எல்லா வேலையும் செய்ததில் பூரித்து போய் இருந்தாள்...இங்க function முடிந்ததும்..தான் வாங்கிய வளையல் பாக்சை எடுத்துக்கொண்டு ஓடினான் அவளை காண..
ஆனால் அங்கோ..

நீயே வாழ்க்கை என்பேன்Donde viven las historias. Descúbrelo ahora