55.நீயே வாழ்க்கை என்பேன்

6 0 0
                                    

55.. நீயே வாழ்க்கை என்பேன்

தன்னுடயை ஆட்களுக்கு கட்டளையிட்டவன்..சமி இருந்த வீட்டிற்கு சென்றான் ஆனால் அவளும் மற்றவர்களும் அங்கு இல்லை என அறிந்தவன்.. அவர்களது ஹாஸ்பிடலுக்கு சென்றான்.. அங்கு இருந்த சீஃப் டாக்டரை விசாரிக்க அவர் எதுவும தெரியாது என கூற அவரது தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்த போக பயத்தில் அவர் உண்மையை கூறிவிட்டார்..ஏனெனில் அவரது உதவியாள் தான் கப்பலில் டாக்டர்களை வரவழைத்தான் ஆதி.. அதனால் அவருக்கு விவரம் தெரியும்..அதனால் அவர் உலறிவிட அவரை விட்டு ரூமை விட்டு வெளியே சென்றதும் அவர் ஆதிக்கு ஃபோன்பன்னி சொல்லும்போதே மறுபடியும் உள்ளே வந்தவன் அந்த டாக்டரை சுட்டு கொன்றுவிட்டு சென்றான்.. மறுமுனையில் இருந்த ஆதி இதை கேட்டதும் திடுக்கிட்டவன் இவன் ரொம்ப உக்கிரமா வர்றான் போலவே என்று எண்ணியபடி எல்லோருக்கும் விஷயத்தை சொன்னவன் எல்லோரையும் உஷாராக இருக்கும்படி உத்தரவிட்டான்..சிறிதுநேரத்தில் அங்கு தன் அடியாட்களோடு வந்த சர்வா.. எல்லோரையும் சரமாரியாக தாக்கினான்.. ஆதியின் ஆட்களும் கிருஷ்ணா சக்தி ஹர்ஷா அனைவரும் திரும்பி தாக்கினர்..
ஆதி தன்னை சுற்றி நின்றவர்களை பார்த்து கண்சிமிட்ட அவர்களில் முதலில் ஒருவன் கத்தியை கொண்டு அவனை தாக்க வர அவனது காலில் தன் காலால் உதைத்தவன் அவன் கைகளை மடக்கி வயிற்றில் ஒரு குத்து விட்டான்..அதற்குள் இன்னொருவன் தாக்க வர அவனை சுழற்றி உதைத்தான் அதில் இருவரும் சென்று மற்றவர்கள் மேல் விழ அவர்களும் விழுந்தனர்.. விழுந்தவர்கள் எழுந்து ஆதியை தாக்க வர இருவரை பிடித்தவன் அப்படியே சுழல அவர்கள் கைகள் உடையும் சத்தம் கேட்டது.. இன்னொருவன் பின்னாலிருந்து அவன் தலையில் அடிக்க அடிப்பட்ட வலியில் அவன் அடித்தவனை திரும்பி பார்க்க அவன் மீண்டும் அவனை அடிக்க வர அதற்குள் தடுத்தவன் தன் தலையில் இருந்து வழியும் ரத்தத்தை துடைத்தவன் அவனை எட்டி மிதித்தான்.. அதில் அவன்  தூர போய் விழுந்தான்.. ஆதியும் நிலை தடுமாறி விழ அவனை இன்னொருவன் தாக்க கீழே விழுந்தான் ஆதி..
அங்கே கிருஷ்ணாவையும் சக்தியையும் தாக்க வந்த ஆட்களை அவர்கள் அடிக்க அவர்களையும் அடித்து போட்டனர்.. அந்த அறைக்குள்ளேயே அவர்கள் அனைவனையும் ஒன்றாக வைத்து பூட்ட உத்தரவிட்டான் சர்வா.. அதன்படி மயங்கிய கிருஷ்ணா மற்றும் சக்தியை சமியின் பெற்றோர் ஹர்ஷாவின் பெற்றோர் இருந்த அறையிலேயே போட்டு பூட்டினர்..
அதற்குள் சர்வா சமியையும் ஹர்ஷாவையும் தேடி வேறு புறம் சென்றான்.. அங்கு நரேனை வைத்துக்கொண்டு இருந்தாள் சமி அவளை ரெளத்திரத்துடன் அவன் நெருங்கி அவளை பிடிக்க சென்ற நேரம் அவன் நெஞ்சில் ஓங்கி குத்தியது ஒரு கை.. அதில் அவன் நான்கடி தூரம் சென்று விழுந்தான்.. கோவமாய் பார்க்க அங்கு நின்றிருந்தான் ஹர்ஷா..
"நீதானா.. நான்கூட அந்த இன்பா போலீசோனு நினைச்சுட்டேன்..உனக்கு என்னை எதிர்க்க இவ்ளோ தைரியமா?.. நான்கூட உன்ன புள்ளபூச்சினு நினைச்சேன்.. பரவாயில்லை செம அடிதான்..ஆனா உன்னால எவ்ளோ போராடினாலும் அவள என்கிட்ட இருந்து உன்னால காப்பாத்தவே முடியாது.. நீ ஏற்கனவே என்னை பத்தின எவிடென்ஸ்ஸ போலீஸ்கிட்ட கொடுத்துட்டனு எனக்கு நல்லா தெரியும் தெரிஞ்சே நான் வந்து இருக்கேன்னா.. நான் இப்போ ஒரு ஃபாரீன்காரனுக்கு இவ ரத்தத்தையும் அவளோட உடல் உறுப்புக்கும் ஐம்பது கோடி விலை பேசி இருக்கேன்.. அன்னைக்கு என்கிட்ட இருந்து தப்பிச்சு எனக்கு ஏகப்பட்ட லாஸ் ஆகி போச்சு இந்த முறை அவள விடமாட்டேன்டா.." என்றபடி அவனை தாக்க வர
"நான் இருக்குற வர அவள உன்னால நெருங்க முடியாதுடா" என்றபடி அவனை எட்டி மிதிக்க அதை தடுத்தவன் தன் கையில் இருந்த கத்தியால் அவன் நெஞ்சில் கிழித்தான்.. அதைக்கண்டு சமி
"ஹர்ஷிஷிஷிஷிஷி" என கத்திக்கொண்டே ஓடிவர அவளை கை நீட்டி தடுத்தான் ஹர்ஷா...தன் வலது மார்பில் கீழே ரத்தம் வருவதை குனிந்து பார்த்தவன்... சிரிப்புடன் சர்வாவை நிமிர்ந்து பார்த்தான்..அவன் குனிந்து பார்க்க அவனது இடது மார்பில் இருந்து ரத்தம் வந்து கொண்டு இருந்தது..சமி அவனை பார்த்துவிட்டு ஹர்ஷாவை பார்க்க அவனோ தன் கையில் இருந்த கத்தியை காட்டினான்..அவளோ கண்ணீரோடு..
"ஹர்ஷி.. ஹர்ஷி ரத்தம் வருதுடா அவன போலீஸ் பார்த்துப்பாங்க வாடா நாம போலாம் உனக்கு உடனே வைத்தியம் பார்க்கனும்" என்று அவள் ஓரடி எடுத்து வைக்க நகர மீண்டும் அவளை தடுத்தவன்.
"நீ அங்கிருந்து நகராதே ஜானு.. அவன கொல்லாம எனக்கு எதுவும் ஆகாது கவலபடாதே.." என்று மூச்சு வாங்க பேசியவன்.. அவனை பார்க்க சர்வாவோ தன் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல்  தன் பார்வையை சமி மீது பதித்தான்..அதை பார்த்த ஹர்ஷா அவளை நோக்கி ஓடிவர ஆரம்பித்தான் அவளிடமிருந்து தூரமாக ஹர்ஷா இருந்ததால் உடனடியாக அவனால் அவளை நெருங்க முடியவில்லை.. அதற்குள் நரேனை கூட்டிக்கொண்டு ரூமிற்குள் ஓட முயன்ற சமியை ரூமின் வாசலை நெருங்கும்முன் அவளது முடியை பிடித்து இழுத்தான் சர்வா.. அவன் இழுத்ததில் கதவின் கைபிடியில் கை வைத்தவள் அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டு நரேனை உள்ளே போக சொல்லி கதவை மூடினாள் மீண்டும் அவன் பலமாக இழுக்க வலியில் அவள் கதவின் கைப்பிடியை விட அதற்குள் அவனை நெருங்கிய ஹர்ஷா பின்பக்கமாக அவனை இறுக்கி பிடிக்க அவன் திணற அவன் கைகளில் இருந்து விடுபட போராடினாள் சமி.. ஹர்ஷா கிழித்ததில் தன்னால் ரொம்பநேரம் போராட முடியாது என உணர்ந்தவன்
"என்னை பகைச்சுகிட்டு நீங்க ரெண்டு பேரும் வாழவே கூடாதுடா..அதுலயும் இவ உயிரோடவே இருக்க கூடாது" என கூறிய படியே அவளை எட்டி உதைத்தான்.. அவன் உதைத்ததில் சமி அப்படியே "ஹர்ஷிஷிஷி" என கத்திக்கொண்டே குப்புற விழுந்தாள்.. அதில் அவள் வயிற்றில் பலமாக அடி பட்டது.. உயிர் போகும் வலியில் துடித்தாள் சமி..
"ஜானுனுனுனு" என்று அதிர்ச்சியில் ஹர்ஷா கத்த அவனிடமிருந்து திமிரிய சர்வாவை அடித்து படியில் இருந்து உதைத்து தள்ளினான்.. தன் மார்பில் ரத்தம் வருவதையும் பொருட்படுத்தாமல் அவளிடம் ஓடினான்..
வலியில் துடிதுடித்தாள் சமி..

நீயே வாழ்க்கை என்பேன்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin