46.. நீயே வாழ்க்கை என்பேன்
ஹர்ஷாவும் சாராவை கூட்டிக்கொண்டு லண்டன் கிளம்ப அவன் குடும்பமும் பாதுகாப்பாய் கிளம்பியது..இன்பா ஹர்ஷாவுடன் இணைந்து செயல்பட எல்லாம் நல்லபடியாக நடந்தது..இவர்களை கண்காணிக்க வைத்த அடியாட்களும் சர்வாவிடம் எதுவும் தெரியவில்லை என கூற அவர்களை புரட்டி எடுத்தவன்.. அடுத்து என்ன செய்வது என யோசிக்க அவன் யோசனையில் வந்தவள் மீராவே..மீரா இன்னும் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டாததால் அவளை எங்கும் கூட்டி செல்ல முடியாமல் திண்டாடினர் கிருஷ்ஷிம் சக்தியும் அதனால் ஆதி ஹர்ஷாவிடம் பேசியபின் அவர்களை கடல்வழி மார்க்கமாக லண்டன் அனுப்ப ஏற்பாடுகள் நடத்திக்கொண்டு இருந்தான்.. ஆதியின் ஃபோனை ட்ராக் செய்ய முடியாததால் சர்வா குழப்பமான சமயத்தில் தான் தானாகவே மாட்டிக்கொண்டான் சக்தி..அவன் தனியாக இருந்ததால் அவனது உடைமைகளை எடுத்து வரும்படி தன் நண்பன் ஒருவனுக்கு அவன் மொபைலில் இருந்தே ஃபோன் செய்துவிட அவனது மொபைலை ஏற்கனவே ட்ராக் செய்ய சொல்லி இருந்த சர்வாவிற்கு அவன் இப்போது பேசியது துருப்பு சீட்டாய் அமைந்தது.. உடனடியாக தனது ஆட்களை விசாகப்பட்டினம் அனுப்பியவன் அங்குள்ள அடியாட்களையும் சேர்த்துக்கொண்டு சக்தி கிருஷ் மற்றும் ஆதியை கொன்று விட்டு மீராவை தூக்கி வரும்படி ஆணையிட்டான்.. மீராவை போதைக்கு அடிமையாக்கி அவளை வைத்து ஹர்ஷாவை வளைக்க திட்டம் போட்டான்..
(ஆதியை பற்றி யோசிக்காம விட்டுட்டியேடா வில்லா..)
இவர்கள் போகும் மார்கத்தை சர்வா அறியும்படி செய்தவனே ஆதிதான்.. ஏனென்று கிருஷ் கேட்க.. காரணம் இருக்கு வெயிட் பன்னு.. என்றவன் தனது ஆட்கள் அனைவரையும் செல்லுமாறு பணித்து விட்டு மீராவிற்கு உதவியாக ஆகாஷை அனுப்பியவன்.. மீராவை பத்திரமாக கிருஷ் சக்தியிடம் ஒப்படைத்தான்.. அந்நேரம் அங்கு வந்து சேர்ந்தனர் சர்வாவின் அடியாட்கள்.. அவர்களை பார்த்ததும் தாக்க சென்ற கிருஷ்ஷையும் சக்தியையும் சமாதானம் செய்தவன் இருவரையும் பார்த்து கண்ணடித்து விட்டு அடியாட்களிடம் திரும்பினான்..
"இங்க பாருங்க உங்கள யார் அனுப்பி இருக்காங்கனு எனக்கு தெரியும்.. எனக்கு அந்த பொண்ணு உயிரோட நல்லா இருக்கனும் அதுதான் வேணும் சோ ப்ளீஸ் அவங்கள போக விடுங்க.." என்று கூற இவனது திட்டத்தை அறிந்த ஆகாஷ் வெளியே வராமல் மீராவிற்கு பாதுகாப்பாக அமர்ந்து கொண்டான்..வந்த அடியாட்களோ
"அந்த பொண்ண வெச்சு தான் நாங்க பெரிய ப்ளான் பண்ணி இருக்கோம் எங்ககிட்ட ஒப்படைச்சுடு..இல்லனா எங்க அண்ணே கொன்னு இருக்க இடம் தெரியாம அழிச்சுடுவாரு.. " என்றான் ஒருவன்..
"யாருடா உங்க அண்ணன்.." என்று கேட்க அதற்குள் சர்வாவிடம் இருந்து ஃபோன் வந்தது.. எடுத்த அடியாள் அவனிடம்..
"அண்ணே அந்த பொண்ண கண்டுபிடிச்சுட்டோம் இதோ தூக்கிட்டு வந்துடுறோம்.."என்றான்..
"டேய் ஃபோனை ஸ்பீக்கர்ல போடுடா" என்றான் ஆதி..
"டேய் அவங்கள எதுவும் செய்யாதீங்கடா..நீங்க ஏதாவது செஞ்சா என் பேர் வெளிய வந்துடும்" என்றான் சர்வா.
"என்ன அண்ணே இந்த போலீஸ்காரன் ஏதாவது மிரட்டினானா? அந்தாளு எங்க கிட்ட கெஞ்சிட்டுல இருக்காரு.." என்று ஏளனமாய் சிரிக்க.. அவனை பார்த்து ஆதியும் சிரித்தான்..
"டேய் டேய் கத்தி பேசாதடா என் பேரையும் சொல்லிடாதே.. அந்த போலீஸ்காரன் பேஸ்புக்ல லைவ் போட்டு இருக்கான்டா நீங்க செய்யுறது எல்லாம் அதுல தெரியும்டா.. கிளம்பி வாங்கடா முதல்ல" என்று கத்த.. சுற்றும் முற்றும் பார்த்த அடியாளிடம்..
"அதோ நேரா பாரு கண்ணா" என்றான் ஆதி..
அங்கு இன்னொரு போலீஸ்காரன் போனில் பதிவு செய்து கொண்டு இருக்க வெலவெலத்து போனான் அடியாள்..
"தண்ணி வேணுமா..ரொம்ப வேர்க்குதே.. நல்லா மூஞ்சிய காட்டுங்க ப்ரோ.. அப்போதானே நல்லா லைக் வரும்" என்று கூறி அவன் முகத்தை பிடித்து திருப்ப அவனிடமிருந்து விலகியவன் ஓட முற்பட அவர்கள் அனைவரையும் மடக்கி பிடித்தனர் போலீஸ் குழு..ஆம் லைவ் போட்டவன் எல்லா போலீஸ் அதிகாரிகளையும் பத்திரிக்கைகாரர்களையும் டேக் செய்துவிட அவன் நினைத்தபடியே நடந்தது..கமிஷ்னர் ஃபோன் செய்து அவர்களை ஸ்பெஷல் போலீஸ் பாதுகாப்புடன் லண்டன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து ஆதியின் பாதுகாப்பிலேயே அவர்களை அங்கு சென்று விட ஏற்பாடானது...சர்வாவின் இந்த ப்ளானும் ஊத்திக்கொள்ள.. கொலைவெறிஆனான் ஹர்ஷா மீதும் சமியின் மீதும்..ஆனால் இப்போதைக்கு ஒன்றும் செய்ய இயலாதது அறிந்து சிறிது நாட்கள் கழித்து பார்க்கலாம் என அமைதி காத்தான்..சர்வா வின் அடியாட்கள் யாரும் அவன் பெயரை சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டனர்.. அவர்களது மொபைலை வைத்தும் சர்வா வை ட்ரேஸ் செய்ய முடியவில்லை..அதனால் தடயம் இல்லாததால் கேஸை கிடப்பில் போட்டனர்..மீராவை அங்கு பத்திரமாக கொண்டுசேர்த்த ஆதியை கட்டிக்கொண்டான் ஹர்ஷா..
"என்ன இது சின்ன பிள்ள மாதிரி தைரியமா இருங்க இவ்ளோ ஃபேஸ் பன்னிட்டீங்க இனிமேலும் உஷாரா இருங்க..நான் கிளம்பறேன்..அர்ஜென்ட்டா வேற கேஸ் பார்த்துட்டு இருக்கேன்..கூடிய சீக்கிரம் பார்க்கலாம்" என்றுவிட்டு தன் நண்பனுடன் கிளம்பினான்..
அங்கு..
அழகான ரம்மியமான கடற்கரை தனியாய் ஒரு தீவு இயற்கையின் ஆரவாரமான அழகுடன் மிளிர்ந்தது அந்தமான் நிக்கோபர் தீவுகள்..
இந்த தீவில் இருந்த தனது நண்பனின் ஹாஸ்பிடலில் தான் சமிக்கு வைத்தியம் செய்துகொண்டு இருந்தார் சாராவின் தந்தை..ஏன் இவளுக்கு இவ்வளவு பாதுகாப்பு அதும் சாராவை போலவும் தெரிகிறாள் வேறு ஒரு பெண் போலவும் தெரிகிறாள் சொந்த மகளை காப்பாற்றுவதை விட இவள் ஏன் முக்கியமாய் ஆனாள் என்ற அவரது கேள்விகளுக்கு பதில் கூறினார் அவர்..
"இந்த பொண்ணோட பாதுகாப்பு ஏன் முக்கியம்னா என் பொண்ணோட வாழ்க்கையை நாசம் செஞ்ச அந்த சர்வாவோட மொத்த உண்மையும் இவளுக்கு தான் தெரியும் அதே சமயம் என் பொண்ணு சாரா கூட கர்ப்பமாதான் இருந்தா ஆனாலும் அந்த நிலையிலும் இவளுக்கு எதுவும் ஆகிடகூடாதுனு அவ உயிரை பணயம் வெச்சு இவள காப்பாத்தி இருக்கா.. அண்ட் மோர் ஓவர் இந்த பொண்ணு மறுபடியும் பழைய முகத்தை செட் பண்ணா அவள ஈஸியா அடையாளம் கண்டுபிடிச்சு கொன்னுடுவான் அந்த அயோக்கியன் சர்வா..இது வரகூடாதுனு தான் நான் இவளுக்கு இப்படி ஒரு முக அமைப்பை வைக்க சொன்னேன்.. என் பொண்ணுமேல எனக்கு அக்கறை இருக்கு அதனால்தான் அவளுக்கும் இவ புருஷனுக்கே தெரியாம நான் ட்ரீட்மெண்ட் பார்த்துட்டு இருக்கேன்..கோமால இருக்கவ என் பொண்ணுனு சொல்லி இந்த பொண்ண கொல்றத விட இவதான் என் பொண்ணுனு சொல்லி இவள காப்பாத்துறதுதான் ஒரு டாக்டரா என் கடமையா நினைச்சேன் அததான் செஞ்சேன்.." என்றார் அவர்.. அவரை பெருமையாக பார்த்த அவர் நண்பர்..
"உங்க கஷ்டத்துக்குலாம் இந்த பொண்ணு மூலமா விடிவுகாலம் கிடைக்கும்னு நீங்க நம்புறீங்க அந்த நம்பிக்கை ஜெயிச்சா எனக்கும் சந்தோஷம்..இவங்களுக்கு பழைய நியாபகம் வர கொஞ்ச நாள் ஆகும் கர்ப்பமா இருக்குறாங்க ரொம்ப ஸ்டெரியின் பன்ன கூடாது..பார்த்துக்கோங்க" என்றுவிட்டு சென்றார்..
ஆறு மாதங்கள் கழித்து..