22. நீயே வாழ்க்கை என்பேன்

11 0 0
                                    

22.

அவள் பெற்றோர் அப்படி பேசவும் மேலும் கடுப்பானவள்..அப்போதும் ஹர்ஷாவையே சந்தேகப்பட்டாள் தன் தாய் தந்தையரை இவன்தான் இப்படி பேச வைத்து இருப்பான் இதுவரையில் என்னை அவர்களோடே வைத்துக்கொள்ள ஆசைப்பட்டவர்கள் இப்போது இப்படி பேசுகிறார்களே இவன் சொல்லாமலா அவர்கள் பேசுவார்கள் என்றே அவனை தப்பாக எண்ணினாள்..
(இவள ஹீரோயினா போட்டு தப்பு பண்ணிட்டேனோ..வில்லி கணக்கா திங்க் பன்றாளே🤔🤔🤔..நமக்குனு வாய்க்கிறது பூரா இப்படித்தான் இருக்கு என்ன செய்ய)

அவள் மறுத்துபேச நினைக்க அவளை தடுத்த தாய் மீனாட்சி..அவளை தனியே அழைத்து சென்றார்..
தனியே சென்றதும் கடுகென பொரிந்து விட்டாள் சமி..
அவள் சொன்னதையெல்லாம் கேட்ட மீனாட்சி.. முதல்ல அவ மனசுல ஹர்ஷா மேல இருக்க இந்த கெட்ட எண்ணத்தை மாத்தனும் அதுக்கு அவ அவன்கூட தனியா இருந்தாதான் சரிவரும் என எண்ணியவர்..
"இங்க பாரு சமி..ஷியாம் உன்னோட வாழ்க்கையில இல்ல அதை நல்லா புரிஞ்சுக்க..உனக்கு ஒரு வழி பிறக்காதா..உன் வாழ்க்கை இந்த வயசுலேயே வீணா போகுதேனு கவலைப்பட்ட எங்களுக்கு.. ஹர்ஷா ஃபோன் பண்ணி உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சுனு சொன்ன அப்புறம்தான் எங்களுக்கு கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருந்தது..நீ நினைக்கலாம் உனக்கு யாரும் வேணாம்னு..ஆனா அந்த பிஞ்சுக்குழந்தையை யோசிச்சு பார்த்தியா..அவனுக்கு அப்பாவோட பாசம் கண்டிப்பா தேவை..அதும் இல்லாம அங்க நடந்த பிரச்சனை எங்களுக்கு தெரியும்.. என் பிள்ளையே இல்லைனு சொல்லி கடைசி காரியம்கூட செய்யாதவங்க..இப்போ பிள்ளைய கேட்டு வந்து நிக்கிறாங்க..இப்போ ஹர்ஷா இருக்கவும் அவங்க பேச முடியாம போய்ட்டாங்க அதே நீ மட்டும்னா அவங்களை சமாளிக்க முடியுமா இல்ல உன் பிள்ளைய அவங்ககிட்ட இருந்து காப்பாத்த முடியுமா..யோசிச்சு பாரு சமி..எல்லா வகையிலும் ஹர்ஷா உன்னோட நல்லதை தான் யோசித்து இருக்கார்..
அவர் இல்லைனா அவங்க ஏதாவது உன்னை தப்பு தப்பா பேசி அவங்க வீட்டு வாரிசுனு குழந்தைய பிரிச்சுட்டு போயிருப்பாங்க..ஹர்ஷா முன்யோசனையா குழந்தைய தத்து எடுத்துக்கிட்டதால இப்போ குழந்தை உன்கூட இருக்கான் அவங்களும் நீ இப்போ வேற ஒருத்தர் மனைவினு அமைதியா ஆகிட்டாங்க..இங்க பாரு சமி நடந்த எதையும் நீயோ இல்ல நானோ மாத்திட முடியாது.. இப்படித்தான் நடக்கனும்னு நம்ம விதியில இருக்கு..அதை யார் என்ன பண்ணிட முடியும்.. கிடைச்சத ஏத்துக்கிட்டு போக வேண்டியது தான் அதுக்காக நான் உன்னை அடிமையா இருக்க சொல்லல..அன்பா இருனு தான் சொல்றேன்..ஆண்டவன் நம்மகிட்ட இருந்து ஒன்ன பறிச்சிட்டு இன்னொன்னு கொடுக்கிறான்னா எது நிரந்தரமோ அதுதான் நம்ம கூட இருக்கும்..அதை புரிஞ்சு நடந்துக்க..உனக்காகவும் உன் குழந்தைக்காகவும் தன் உயிரான குடும்பத்தை எதிர்த்துகிட்டு யார் யார்க்கோ என்ன என்னவோ பதிலடி கொடுத்து உன் கையை பிடிச்சு இருக்காரு ஹர்ஷா.. அவரை புரிஞ்சு வாழ்க்கையை ஏத்துக்க பழகு.. நாங்க நீங்க ரெண்டு பேரும் தனியா இருங்கனு சொல்றது உங்கள பத்தி நீங்க ப்ரண்ட்ஸ்ஸா புரிஞ்சுக்கிட்டீங்க ஆனா ஒரு கணவன் மனைவியா நீங்க உங்கள பத்தி புரிஞ்சுக்கனும்ல அதுக்குத்தான் அப்படி சொன்னோம்..புரிஞ்சுக்கடாமா சமி..நீயா தேடிக்கிட்ட வாழ்க்கை ஆரம்பிக்கும்போதே முடிஞ்சு போச்சு உன்னை தேடி வந்து இருக்க வாழ்க்கையை விட்டுடாதே சமி..நாங்க கடைசி வரைக்கும் உன்கூட இருக்க முடியாது உன் வாழ்க்கை ஹர்ஷா கூடதான்னு ஆண்டவன் எழுதி இருக்கான் அதை ஏத்துக்க பழகு..நீங்க சந்தோஷமா வாழனும் அதான் எங்களுக்கு வேணும் சரியா" என்று கூற குழப்பத்தில் இருந்தவள் சற்று தெளிந்தவளாய் சரியென தலையசைத்தாள்..அதன்பின் அவளை அழைத்துக்கொண்டு சென்றவர் கிருஷ்ணா உதவியுடன் அவர்கள் குடும்பம் நடத்த தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துவிட்டு அவர்களுக்கான சடங்குகளை செய்து அவளை விளக்கு ஏற்ற சொல்லிவிட்டு சென்றனர்.
வீட்டில் சண்டை போடும்முன் அவளிடம் பேசினான் ஹர்ஷா அதன்பின் இருவரும் பேசிக்கொள்ளவும் இல்லை ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவும் இல்லை..
(இவங்களுக்கு ரொமாண்ஸ் வெச்சு நான் உருப்பட்டா மாதிரிதான்)
இரவு உணவை கிருஷ்ணா வாங்கி வருவதாக சொல்லி விட அவன் வந்ததும் ஹர்ஷா நரேன்க்கு இட்லியை ஊட்டிவிட அவன் சமத்தாய் சாப்பிட்டு அவனிடமே உறங்கிவிட்டான்..எப்போதும் சாப்பிட அடம்பிடிக்கும் நரேனை சாப்பிட வைப்பதற்குள் படாத பாடு படுவாள் சமி..ஆனால் பிறந்தது முதல் ஹர்ஷாவிடம் இருந்த ஒட்டுதலால் அவனிடம் எப்போதும் சமத்தாய் இருப்பான்..இன்றும் அதேதான் நடந்தது ஆனால் அதையும் வேறாய் அர்த்தம் செய்துக்கொண்டாள் சமி..எல்லோரையும் ஏதோ வசியம் செய்துவிட்டான் என்று.
குழந்தை தூங்கிவிட அவனை தான் பார்த்துக்கொள்வதாக கிருஷ்ணா கூற மறுத்தவன்..
"இவன் என் பையன்டா நானே பார்த்துக்கறேன்..நீ போய் தூங்குடா.." என்று சொல்லிவிட அவன் எவ்வளவு சொல்லியும் மறுத்து அவனை தூங்க அனுப்பிவிட்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரூமுக்கு குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தான்..உள்ளே பார்த்தால் அழுது அழுது களைத்துப்போய் உறங்கி விட்டிருந்தாள் சமி..
அவளை பார்த்தவன்
"ஆண்டவா எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை ப்ரண்டுனு நினைச்சவன் மனசுல லவ்வ வரவெச்சுட்டு அதை நான் உணரும் முன்னாடியே அவளை வேற ஒருத்தருக்கு தாரை வார்த்து கொடுத்துட்டு அவங்க கூடவும் வாழாம பாதியிலேயே அந்த வாழ்க்கைய பறிச்சு இப்போ அதே காதல எனக்குள்ள புதுப்பிச்சு அதுக்கு உயிர் வர்ற நேரம் எனக்கும் அவளுக்கும் கல்யாணம் செய்து வெச்சு இப்படி என்னை வில்லன் கணக்கா பார்க்க வெச்சுட்டியே அவளை..என் ஜானு இன்னும் எவ்வளவு கஷ்டப்படுவா..நான் என்னானு சொல்லி புரிய வைப்பேன் அவகிட்ட..உன் உயிரையும் குழந்தை உயிரையும் காப்பாத்த தான் நான் கல்யாணம் செஞ்சேன்னு சொல்லனுமா இல்ல நீ என்னை கல்யாணம் செய்துகிட்டா தான் சட்டப்படி குழந்தை நம்ம கூட இருப்பான் இல்லனா அவனை யார் கேட்கிறாங்களோ அவங்களுக்கு தத்து கொடுக்கனும்னு சொல்வேனா..இப்படி ஒரு இக்கட்டான உயில் எழுதி வெச்ச ஷியாம் அண்ணாவை பத்தி சொல்வேனா..என்னை எப்படி உனக்கு புரிய வைப்பேன் ஜானு என்னை மன்னிச்சிடுடா"
என்று மனசுக்குள் பொலம்பிக்கொண்டு இருந்தான் ஹர்ஷா..
(அட ஆமாபா..ஷியாம் தன்னோட பிள்ளைக்கு பொறுப்பாகவும் தன் மனைவியை ஹர்ஷாவே மணக்க வேண்டும் என்றும் அப்படி தவறும் பட்சத்தில் குழந்தை நரேனை இருவரின் பெற்றவர்களில் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்..ஹர்ஷாவை தவிர வேறு யாரை சமி மணந்தாலும் குழந்தையை சொந்தம் கொண்டாட முடியாது.. ஹர்ஷாவை மணந்தால் ஹர்ஷாவை தவிர வேறு யாருக்கும் குழந்தை சொந்தமில்லைனு ஆக்சிடெண்ட்க்கு முன்ன ஹர்ஷாவிற்கு அனுப்பிய வீடியோவுடன் இந்த வீடியோவும் எடுத்து அனுப்பிவிட்டான் ஷியாம்.. இதை பார்த்த அப்புறம் தான் ஹர்ஷா சமியை கல்யாணம் செய்யவே முடிவு பண்ணான்)

நீயே வாழ்க்கை என்பேன்Where stories live. Discover now