7.7.. நீயே வாழ்க்கை என்பேன்
"என் வீட்டுக்கு வந்து என்னையே பொறுமையா பேச சொல்ற நீ யாருடா எங்களை பத்தி பேச..எங்க வீட்டு பிரச்சினையில தலையிட நீ யாருடா?.. எல்லாம் அவனை சொல்லனும்...ஆள்விட்டு பேசினா நாங்க சமாதானம் ஆகிடுவோம்னு நினைப்போ அவனுக்கு..முதல்ல வெளியே போடா...அவனே புள்ளை இல்லைனு போய்ட்டான் நீ யாரோ எவனோ..அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்க..நாங்க எடுத்த முடிவுல எந்த மாற்றமும் இல்லைனு போய் சொல்லு அவன்கிட்ட...யார் வந்தாலும் எங்க முடிவுல மாற்றமே இல்லைனு சொல்லு போய் அவன்கிட்ட...எவளோ ஒருத்திக்காக நீ வக்காலத்து வாங்குறனா அவ உன்னை என்ன செய்யாம நீ வந்து இருப்ப?" என்று அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக..
"இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா கூட உங்களுக்கு மரியாதை கெட்டு போய்டும்" என்ற குரல் கேட்டு கேட்டு எல்லோரும் திரும்பி பார்க்க..அங்கு கோவமே உருவாய் நின்றிருந்தாள் நம்ம சமிக்க்ஷா...
"நீ..யாரு?" என்றவர் அவளை மேலும் கீழும் ஆராய...அதற்குள் அவளிடம் ஓடிய ஹர்ஷா..
"நீ ஏன் சமி இங்க வந்த..நான் பேசிக்கிறேன் அவங்க கிட்ட நீ முதல்ல கிளம்பு" என்று கூற..
அவனை கோவமாய் முறைத்துக்கொண்டே.."நீ பேசினதுக்கு நல்ல பலன் கிடைச்சு இருக்கு...இதுக்குமேல எதுவும் நீ பேசக்கூடாது என்மேல ப்ராமிஸ்" என்றவள் ஷியாமின் தாய் சரசுவிடம் திரும்பி
"என்ன கேட்டீங்க நீ யாருனா? நான் கூடிய சீக்கிரம் மிஸஸ்.ஷியாம் ஆகப்போறவ" என்றாள் மிடுக்காய்.
"ஓஓஓஓ...நீதான அவ..ம்ம்ம்.. பார்க்க அழகா இருக்க இந்த அழகை வெச்சு தான் என் புள்ளையை மயக்கினியோ..அதான் அவன் நீயே கதினு பெத்தவங்க பேச்சை மதிக்காம வீட்டை விட்டே போற அளவுக்கு வசியம் பண்ணிட்டியா?" என்று அவர் கோவமாய் பேச..
"ஆமா..இப்போ என்னாங்கறீங்க? என்னோட அழகை வெச்சு உங்க பிள்ளையை நான் வசியம்தான் பண்ணேன்..என்ன செய்வீங்க?..பெத்த பிள்ளையோட மனசை புரிஞ்சுக்க அறிவு இல்ல..யாரு என்னானே தெரியாத என்னை அவ்ளோ கேவலமா பேசுவீங்க?..எப்படியாவது உங்களை சமாதானம் செஞ்சு உங்களையும் உங்க பிள்ளையையும் ஒன்னா சேர்க்க தான் அசிங்கபட்டாலும் பராவால்லனு உங்க அசிங்கமான பேச்சையும் கேட்டுட்டு இருக்கானே...அவனை அப்படி பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கு...அவன் என்னோட ப்ரண்டு...ஹும்...அதுசரி...புள்ளையவே புரிஞ்சுக்க திறமை இல்ல இதுல friendshipஅ பத்தி எப்படி புரிஞ்சுப்பீங்க...ஆமா தெரியாமதான் கேட்கிறேன்...நானா உங்க பையனை பார்த்தேன்..நானா அவரை லவ் பண்றேன்னு ப்ரபோஸ் பண்ணேன்...நானா உங்க பையனை கல்யாணம் செஞ்சுக்கோங்கனு கேட்டேன்..நான் அவர்கிட்ட பேசகூட இல்லை..அவரா வந்து லவ் பண்றேன் சொன்னார்..அவரா கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னாரு..இதுல நான் என்ன பண்ணேன்..யாருனே தெரியாதவங்க மேல இப்படி வீண் பழி போட உங்களுக்கு கொஞ்சம்கூட கூச்சமா இல்லை...நீங்க பார்த்த பொண்ணை கட்டிக்க மாட்டேன்னு உங்க பையன் சொன்னா உடனே மத்தவங்கள தப்பா பேசுவீங்களா?.."
"ஏய்ய்ய்ய்?" என்று அவர் கத்த...
"சும்மா இருங்க..இதுக்குமேல ஒரு வார்த்தை வந்துச்சு பெரிய மனுஷினு கூட பார்க்க மாட்டேன் அசிங்கமாகிடும்..." என்று இவளும் கத்த அவர் அமைதியாகி விட்டார்...
"என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல? உங்க வாய்னா உங்க இஷ்டத்துக்கு பேசுவீங்களா? நாங்களும் அப்படியே பேசினா உங்களுக்கு எப்படி இருக்கும்..ஒருத்தரை பத்தி தப்பா பேசும் முன்ன யோசிச்சு பேசுங்க..இதுவரைக்கும் எனக்கு உங்க பையனை கல்யாணம் பன்ற ஐடியாவே இல்ல..ஆனா இப்போ சொல்றேன்..உங்க பையனுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகும் கண்டிப்பா..நீங்க ஏத்துக்கிட்டாலும் சரி..ஏத்துக்கலைனாலும் சரி..அப்புறம் இன்னொரு விஷயம்..இவன் என்னோட ப்ரண்ட்..இவனை யாருக்காகவும் விட்டுதர மாட்டேன்...எப்போ என் ப்ரண்ட்ஷிப்ப என் ப்ரண்ட்ட தப்பா பேசினீங்களோ இனி நீங்க எனக்கு தேவை இல்லை...உங்க புள்ள மட்டும் இல்ல உங்க பிள்ளையோட பொண்டாட்டியும் சேர்ந்து செத்துட்டானு நினைச்சுக்கோங்க..நீ வா ஹர்ஷா.." என்று அவனை இழுத்துக்கொண்டு போனவள் நேரே வீட்டுக்கு சென்று அவனை முறைத்தபடி அமர்ந்தாள்..
அவனும் அமைதியாக நிற்க..அப்போது அங்கு வந்து சேர்ந்தான் ஷியாம்... அவனுக்கு இவன் அங்கு போனதை யாரோ சொல்ல அவன் போன் பண்ணி கேட்க.. அவன் தாயோ இவர்கள் வந்து பேசியதையும் கூறி இப்படி ஒரு கேவலமான பொண்ணுக்காக எங்கள விட்டு போய்ட்டல என்று கேட்க..இவனோ கத்திவிட்டு போனை வைத்துவிட்டு நேரே இங்கு வந்தான்...
வந்தவன் நேரே ஹர்ஷாவை பிடித்து "உனக்கு அறிவு இருக்கா இல்லையா? நீ எதுக்குடா வேஸ்ட்டா அங்க போய் அசிங்கப்பட்டு வந்த..ஏன்டா இப்படி உங்க ப்ரண்ட்ஷிப்க்கு எந்த கலங்கமும் வரக்கூடாதுனு நான் பார்த்து பார்த்து நடந்துக்கறேன் ஆனா நீ அங்க போய் அசிங்கபட்டு வந்து இருக்க..உனக்கு எதுக்குடா இந்த வேலை..அவங்க இப்படிலாம் பேசுவாங்கனு தெரிஞ்சுதானே யாரும் அங்க போக வேணாம்னு சொன்னேன்..ஏன்டா என் பேச்சை கேட்கவே கூடாதுனு இருக்கியா? ஏன்டா நீயும் என்னை கஷ்டப்படுத்துற" என்றான் ஷியாம் வருத்தமாய்...
"டேய் அண்ணா..அவங்க உனக்கு அப்பா அம்மானா எனக்கும்தான்...சரி சரி விடு...அவங்களுக்கு அவங்க கோவம்...எல்லாம் போக போக சரி ஆகிடும்...விடு பார்த்துக்கலாம்...இதுல ஹைலைட் என்னானா உங்காளு அவங்கள லெஃப்ட் ரைட் வாங்கிட்டா...கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்க போறேனு சொல்லிட்டா" என்று சிரித்துக்கொண்டே கூற...