39..நீயே வாழ்க்கை என்பேன்
கன்ட்ரோல் ரூமில் இருந்து ஃபோன் வரவும் அதை எடுத்த கிருஷ்
"சொல்லுங்க ஏதாவது இன்ஃபார்மேஷன் கிடைச்சுதா?" என்று கேட்க..
"சார் அந்த ஆளோட மொபைல ட்ராக் பன்னோம் சார்..பொண்ணுங்க ரெண்டு பேர் நம்பரும் சுவிட்ச் ஆஃப் சார் அவங்க சிப் கூட ட்ராக் பன்ன ஆகலை சார்.. ஆனா அந்த ஆள் ராகேஷ்ஷோட மொபைல் ஆக்டிவ்ல இருக்கு சார் அந்த நம்பர் தொடர்ந்து நாலு மணி நேரமா ட்ராவல்லேயே இருக்கு சார்..அதும் வைசாக் ஹைவே ரோட்டில் போய்ட்டு இருக்கு சார்.. naval க்கு இன்பார்ம் பன்னலாமா சார் அவங்ககிட்ட ஒரு வேளை ஹெல்ஃப் கிடைக்கலாம் சார்.." என்று கேட்கவும்
"நானே கான்டாக்ட் பன்றேன்..நீங்க நான் கான்டாக்ட் பன்னுவேன்னு மட்டும் இன்பார்ம் பன்னிடுங்க" என்றுவிட்டு வைத்தவன்.. வைசாக் கடற்படை கன்ட்ரோல் ரூம்க்கு ஃபோன் செய்தான்..
எல்லாவற்றையும் சொன்னவன்
"விஷயம் ரொம்பரொம்ப சீக்ரெட்டா இருக்கட்டும்.. கொஞ்சம் வெளியே தெரிஞ்சாலும் அந்த பொண்ணுங்க உயிருக்கு ஆபத்து ப்ளீஸ்" என்று கேட்டுக்கொண்டான்..
முதலில் விழித்தவள் சமி தான்.. மயக்கம் சற்று தெளிய அங்கே அவள் கண்விழிக்க முயற்சிக்கவும் சர்வாவும் அவன் அடியாட்களும் பேசும் குரல் கேட்டு கண்களை மூடியவாறே இருந்தாள்..
"ஏன்னே.. அவங்க ஹெச் ஹெச் ப்ளட் குரூப் இருக்குற பொண்ணு உடலுறுப்பு தானே கேட்டாங்க நீங்க கூடவே வேற பொண்ணையும் கடத்தி வந்து இருக்கீங்க..இந்த பொண்ணும் அதே குரூப்பா..?" என்று அடியாளின் தலைவன் கேட்க..
"அந்த பொண்ணை கடத்தினது உடலுறுப்புக்கு இல்லடா அந்த ஷியாமயும் ஹர்ஷாவையும் பழி வாங்க அவன் பொண்டாட்டிய தூக்கினேன் அந்த சக்தி ஷியாம் மாதிரியே கூட இருந்து விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு அவனுங்களுக்கு சொன்னவன் அவனை பழி வாங்கதான் இவள கடத்தினேன்..இவள ஃபாரின்ல கால் கேர்ள்ளா மாத்த தான் இந்த முடிவு.." என்று சிரிக்க மற்றவர்களும் சிரித்தனர்..அவன் சொன்னதை கேட்ட சமிக்கு தன் உயிரே போனாலும் மீராவை காப்பாத்தனும்னு நினைத்துக்கொண்டாள்.. அவள் லேசாககண் விழித்து அருகில் ஏதாவது இருக்கிறதா என பார்க்க..அவள் அருகில் ஒரு மொபைல் இருந்தது..அது அந்த அடியாட்களின் தலைவன் மொபைல் இவன் பேசவும் மொபைலை அப்படியே வைத்து விட்டு எழுந்துவிட்டான்.. தன் கை கட்டை அசைத்தவள் கட்டு அவிழும் நிலையில் இருக்கவும்..மொபைலை எடுத்து முதலில் சைலண்ட் மோடில் போட்டு விட்டு மயங்கியவள் போலவே இருந்து இவர்கள் பேசுவதை ரெக்கார்ட்செய்ய ஆரம்பித்தாள்.. சர்வாவின் கெட்ட நேரம் அவன் வாயால் எல்லாமே சொல்லிவிட்டான்...
சமியை காதலித்தது முதல் ஷியாமை கொன்றது வரை..இதை கேட்ட சமிக்கு அவன்மேல் கொலைவெறி வந்தது இருந்தாலும் அவன் தண்டனை வாங்க ஆதாரம் வேண்டுமே என்று அமைதியாக ரெக்கார்ட் செய்தவள்...அவன் அடுத்தடுத்து சொன்ன செய்திகளில் உயிரே போகும் அளவுக்கு மனம் நொந்து போனாள்...
(அப்படி என்னத்த சொன்னான் எனக்கு தெரியாம)
"டேய் இந்த உடல் உறுப்புங்கள வெளிநாட்டுக்கு கடத்துறதே ஒரு தனி சுகம்டா..எவ்ளோ ரிஸ்க் ஆனாலும் அதுல பணத்தை வாங்கினதும் வர்ற சந்தோஷம் இருக்கே அது தனிடா...நான் பாட்டுக்கு என் வேலை உண்டுனு இருந்தேன் இந்த சமி என் கண்ணுல பட்டு என் மனச கெடுத்தா ஆனா அதுக்குள்ள என்கிட்ட சவால் விட்டு இவள கட்டினான் அந்த ஷியாம்.. அன்னைக்கு முடிவு பன்னேன் இவள உயிரோட கொல்லனும்னு.. அதுக்குள்ள அந்த சஞ்சனா என்னை பத்தி தெரிஞ்சுகிட்டா..இதுக்குலாம் பின்னாடி நான்தான் இருக்கேன்னு அவ தெரிஞ்சுகிட்டா அழகா இருந்தானு வேலைக்கு சேர்த்தா அவ எனக்கே ஆபத்தை உண்டாக்க பார்த்தா அதான் அவள கெடுத்து கொன்னேன்..ஆனா அவ சாகுறதுக்கு முன்னாடி அந்த ஷியாம்கிட்ட என்னை பத்தி சொல்லிட்டா.. அதனால தான் அவனை கொன்னேன்..அவனை கொன்னுட்டா இவ யாரும் இல்லாதவளா இருப்பானு நினைச்சா அந்த ஹர்ஷா வந்து நின்னான் இவளுக்கு சரி ப்ரண்ட் தானே அவன் போய்டுவான் நாம நல்லபிள்ளையா இவளுக்கு வாழ்க்கை கொடுக்குற மாதிரி போவோம்னு போனா அன்னைக்கு இவ கழுத்துல அவன் தாலி கட்டிட்டான்.. அடுத்து அவன கொல்லனுமோனு நினைச்சா அவன் என்னடானா ஷியாம் கேஸ மூவ் பன்ன ஆரம்பிச்சுட்டான்.. இன்னேரம் அவன் மேல கைய வெச்சா நாமதான் மாட்டுவோம்னு பார்த்தா அதிர்ஷ்டம் என்னை தேடி வந்துச்சு.. அதான் ஷியாமோட பொஸிஷன்க்கு இவள கூப்பிடுற சாக்குல இவ மனச மாத்தி என் பக்கம் சாய்க்கலாம்னு கேட்டா இவ அந்த சக்தியை அனுப்பி என் ப்ளான சொதப்பிட்டா..அதான் அந்த சக்தி கூட நல்லவன் மாதிரி நடிச்சு அவன் மறைச்சு மறைச்சு ஹர்ஷாகிட்ட பேசினத நான் கேட்டுட்டேன்.. அதான் அவன வெச்சே எல்லாம் ப்ளான் பன்னேன்..இவங்களையும் கடத்திட்டேன்..
முதல்ல அந்த மீராவ சஞ்சனா மாதிரி செய்யலாம்னு யோசிச்சேன்..ஆனா அவ ப்ளட் குரூப் பாடி பார்ட்ஸ் வேணுமா இருக்கே அதான் அவள முழுசா துபாய் ஷேக் கிட்ட அனுப்ப வேண்டியதா போச்சு..இந்நேரம் கப்பல் கிளம்பி இருக்கும்.. சரக்கு கப்பல்ல அவள அடைச்சு அனுப்பிட்டேன்..
ஆனா இவள அப்படி விடவே மாட்டேன்டா...என்ன தவிக்க விட்டவ வாழ்க்கைய இழந்து தவியா தவிக்கனும்.. ஏன்டா இவன்கிட்ட பகை வெச்சுக்கிட்டோம்னு அணு அணுவா துடிக்கனும்...என்கிட்ட இருந்து இவள காப்பாத்த தானே அவனுங்க ரெண்டுபேரும்இவள கல்யாணம் செஞ்சானுங்க இவள என்னோட அடிமையா மாத்தி வாழ்க்கையே வெறுக்குற அளவுக்கு செய்வேன்..இவ என்ன விட்டு போகனும்னு நினைச்சா கூட போக முடியாத அளவுக்கு இவள போதைக்கு அடிமை ஆக்கி இவ புருஷன கதற விடுறேனா இல்லையானு பாருடா...இந்த சர்வானா சர்வமும் நடுங்குற அளவுக்கு இவள மாத்துறேன்டா.." என்றவன் இவளை திரும்பி பார்க்க அப்போது அவளும் அவனையே தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்..."நாம் பேசுனதுலாம் இவ கேட்டுட்டாளோ பரவாயில்லை கேட்டு மட்டும் என்ன செய்யபோறா.." என்று யோசிக்கும் நொடியில் வண்டி சிக்னலில் இருந்து கிளம்பும் நேரம் அவள் யோசிக்காமல் வண்டியில் இருந்து மொபைலை எடுத்துக்கொண்டு குதித்து ஓடத் துவங்கினாள்..
இதை எதிர்பாராத சர்வா அவள் மொபைலுடன் ஓடுவதை பார்த்து "அவள பிடிங்கடா " என்று கத்தியவன் அவனும் இறங்கி அவளை துரத்த துவங்கினர்... எந்த ஊர் என்று தெரியாத நிலையில் ஏதோ ஒரு பக்கம் ஓட ஆரம்பித்தாள் சமி.. மயக்கத்தில் இருந்ததால் வேகமாக ஓட உடல் ஒத்துழைக்கவில்லை மூச்சு வாங்கி ஓடியதில் களைத்து போனாள்.. அதற்குள் அவள் ஹர்ஷாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் அந்த ரெக்கார்ட் ஆடியோவை அனுப்பியவள் தான் அனுப்பிய தடயம் தெரியாமல் அழித்தாள் .. அழித்து விட்டு மீண்டும் ஓடத்துவங்கினாள்..அவளை துரத்தியவர்கள் அவளை நெருங்கும் சமயம் எங்கிருந்தோ வேகமாக வந்த லாரி அவர்களை கூண்டோடு தூக்கி அடித்தது.. சர்வா பின்னாடி வந்ததால் அவன் சிக்கவில்லை.. சட்டென சுதாரித்து திரும்ப ஓட ஆரம்பித்தாள் சமி.. சர்வாவும் அவளை விடாமல் துரத்த... ஓடியவள் கண்ணில் ஒரு ஹாஸ்பிடல் தெரிய அதனுள் நுழைந்தாள்..அவன் பின்னால் வருவதற்குள் அவள் அவனுக்கு போக்கு காட்டிவிட்டு வேறு வழியில் ஒரு அறையில் நுழைந்தாள்..அந்த அறை ஒரு டாக்டரோட ரூம்.. நேம் போர்டில் அவள் பெயர் சாரா என்று இருந்தது..சர்வா மெதுவாக ஒவ்வொரு இடமாய் அவளை தேடினான்.. அவளோ அந்த மொபைலில் இருந்து ஹர்ஷாவிற்கு ஃபோன் செய்தாள்...
புது நம்பரில் இருந்து ஃபோன் வரவும் எடுக்க சற்று யோசித்த ஹர்ஷா எடுக்கும் நேரம் கால் கட்டானது..