52..நீயே வாழ்க்கை என்பேன்
அவளை ஹாஸ்பிடலுக்கு ஹர்ஷா தூக்கி செல்ல அவனது நண்பர்களும் அவனை தொடர்ந்து செல்ல போக அவர்களை தடுத்தார் சாராவின் தந்தை..
"அவரே பார்த்துக்கட்டும்.. நாம இங்கேயே வெயிட் பன்னலாம்" என்றவர் சாராவை படுக்க வைத்து இருந்த ரூமிற்கு சென்றார்.. அதுவரை அங்கு நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த நரேன் இன்பாவிடம் போய் ஒட்டிக்கொண்டான்.. சாராவை பார்த்து அவருக்கு கண்ணீர் வர அவள் அருகில் சென்று அமர்ந்தவர் அவள் கைகளை பற்றிக்கொண்டு கண்மூடி அமர்ந்து இருந்தார்.. இங்கு
அவளை தூக்கி கொண்டு ஓடியவன் அங்கு இருந்த டாக்டரிடம்
"டாக்டர் இவளுக்கு என்னானு பாருங்க திடீரென மயங்கி விழுந்துட்டா.. சீக்கிரம் பாருங்க?" என்று கூற அவனை பார்த்த டாக்டர்..
"சாரா மேடம்க்கு என்ன ஆச்சு? நீங்க யாரு அவங்கள அவ இவனு பேசுறீங்க?" என்றபடி அவளை செக் செய்ய..
அவனோ.. அவளை சாரா என கூறவும்தான்
அவனுக்கு நடந்தது புரிய..
" இவ.. இவங்க என் மனைவி சமிக்க்ஷா சாரா இல்ல இவங்களும் டாக்டர்தான் சாராவும் இவளும் பார்க்க ஒரே மாதிரி இருப்பாங்க.. ப்ளீஸ் இவள செக் பன்னுங்க" என்று கூற அதற்குள் ஒரு நர்ஸ் வந்து அந்த டாக்டரின் காதில் ஏதோ சொல்ல அவர் உடனடியாக சமியை சோதித்து..
"இவங்களுக்கு சரியா ரெஸ்ட் இல்ல போல ஸ்டெர்ஸ் ஜாஸ்தி ஆகி மயங்கி இருக்காங்க..நல்லா ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடுவாங்க.." என்றபடி அவளுக்கு ட்ரிப்ஸ் போட்டு விட்டு டாக்டர் கிளம்ப நர்ஸ்ஸும் அவர் பின்னே வெளியே செல்ல அவள் அருகில் அமர்ந்தவன்..
"என்னை மன்னிச்சிடு ஜானு.. நீ இருக்குற நிலையை புரிஞ்சுக்காம நான் வேற கோவப்பட்டுட்டேன்..நான் மட்டும் என்ன செய்ய..? எல்லாருமே என்னை ஏமாத்திட்டாங்களேனு வருத்தம் கோவம் அதான் உன்கிட்ட அப்படி பேசிட்டேன்..நானும் உன்னை புரிஞ்சுக்காம இருந்துட்டேன் போல..விடு நடந்தத பேசி என்ன ஆக போகுது எல்லாம் விட்டுட்டு இனி நடக்க போறத பார்க்கலாம்.."என்று புலம்பியவன் அவள் நன்றாக உறங்குவதை பார்த்துக்கொண்டே அமர்ந்து இருந்தான்..சிறிது நேரத்தில் அவளுக்கு முழிப்பு வர..கண்ணை திறந்து பார்த்தவள் தன் எதிரில் தன்னவன் சோகமாய் அமர்ந்து இருப்பதை பார்த்தவள்..எழ முயற்சிக்கவும் நிமிர்ந்தவன் அவளை பார்த்து எழ போக அவள் அவனது கைகளை பற்றினாள்..
அவளை நிமிர்ந்து பார்த்தவன்.. சரியென அமர
"நான் காரணம் இல்லாம உன்ன பிரிய மாட்டேன்னு உனக்கே தெரியும் ஆனாலும் உன் கோவம் நியாயம் தான் வேற ஒரு பொண்ண நான்னு உன்ன நம்ப வெச்சது பெரிய தப்பு தான் ஆனா அதுலாம் நான் தெரிஞ்சுக்கும் முன்னமே நடந்தாச்சு அதை உனக்கு விளக்கி சொல்ற நிலமையில நான் இல்லையே என்னோட பயம் உனக்கு புரியுதா இல்லையா ஹர்ஷி.. எனக்கு மன்னிப்பே இல்லையா?" என்று அவள் வருத்தமாய் கேட்க..
அவள் கண்ணீரை துடைத்தவன்..
"ஷ்ஷ்ஷ்.. என்ன சமி இது.. சின்ன பிள்ள மாதிரி அழற..விடு நடந்தது நடந்துடுச்சு.. இனியாவது நமக்குனு வாழ்வோம்..உன்கிட்ட வர்ற உரிமையும் புரிதலும் அந்த பொண்ணு பக்கத்தில வராத அப்போவே எனக்கு ஏதோ தப்பா இருக்குனு தோணுச்சு அதை நான் யோசிக்காம விட்டதால வந்த பிரச்சினைஇது..இனி நான் உஷாரா இருந்துக்குறேன்..விடு ஃபீல் பன்னாத நீ அழுததுலாம் போதும் இனியும் வேணாம்..இனி யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் வராம பார்த்துக்கறேன்.. ஆனா இனி இப்படிலாம் ஏதும் செய்யாத ஜானு.. நான் தவிச்ச தவிப்பும் கஷ்டமும் எனக்குத்தான் தெரியும்.. நரேன் கண்டுபிடிச்சத கூட என்னால கண்டுபிடிக்க முடியல அந்த அளவுக்கு நான் லூசாகி இருந்து இருக்கேன் பாரு." என்று கூற
"நரேன் என்ன கண்டுபிடிச்சான்..அவன் எங்க ஹர்ஷி" என்று ஆவலாய் கேட்க..
"ம்ம்.. அவன் ஆக்சிடெண்ட் ஆனதுல இருந்து சொல்றான் இது சமி மா இல்லனு நான்தான் முகம் மாத்தினதால குழந்தைக்கு அடையாளம் தெரியலனு நான் விட்டுட்டேன்.. அன்னைல இருந்து அவன் உன்கிட்ட சாரி அந்த சாரா அவங்க கிட்ட வர்றதே இல்ல.. தூரமா நின்னு பார்த்துட்டு போய்டுவான்..நான்தான் அதை யோசிக்காம விட்டுட்டேன்.. குழந்தைக்கு தன் தாயோட ஸ்மெல் எங்க இருந்தாலும் கண்டு பிடிக்கும் அது முகம் மாறி இருந்தாலும்னு யோசிக்காம விட்டுட்டேன்.." என்று கூறிக்கொண்டே போனவன் அவள் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியில் பேச்சை நிறுத்தி அவளை பார்த்தான்..
கர்ப்பமாக இருந்தாலும் அதிகம் எடை ஏறாமல் கொஞ்சமாக சதை பிடித்து மெழுகு சிலை போல அழகாய் இருந்தாள் அவனவள்.. மேடிட்ட வயிற்றில் கை வைத்து இன்னொரு கையை இடுப்பில் வைத்து முட்டுக்கொடுத்து.. புசு புசுவென மூச்சு வாங்கினாலும் முகத்தில் புன்னகையை தவழ விட்டபடி தேவதையாய் ஜொலிக்கும் தன்னவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.. எவ்வளவு நேரம் பார்த்தானோ.. அவள் தன் கற்பனையில் இருந்து மீண்டு அவனை காணும்வரை அவளையே பார்த்துகொண்டு இருந்தான்..அவ்வளவு அழகாக இருந்தாள் அவள்..
அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவனை அவளும் பார்க்க அவன் பார்வையில் நாணம் வந்து ஒட்டிக்கொண்டது அவளுக்கு.. தலையை கவிழ்த்துக்கொண்டு
"என்ன ஹர்ஷி?" என்று கேட்க..
"இல்ல ஜானு இப்படி பார்க்க ரொம்ப அழகா இருக்க நீ அதான் பார்த்தேன்" என்று கூற கன்னங்கள் சிவக்க திரும்பி கொண்டாள் அவள்..
திரும்பியவளை பார்த்து மெல்லியதாய் புன்னகைத்தவன் அவளுக்காக வரவழைக்கப்பட்ட சாப்பாட்டை எடுத்து அவளுக்கு ஊட்டினான்.. அதை பார்த்தவள் பழைய நியாபகம் வர கணகள் சட்டென கலங்கிவிட்டாள்..
அவளது கண்ணீரை துடைத்தவன்.
"இப்போதானே சொன்னேன் அழக்கூடாதுனு.. நீ சாப்பிட்டா நரேனை பார்க்கலாம் இல்லனா அவனை பார்க்க முடியாது" என்று கூற கோவமாய் அவனிடம் உணவை வாங்க போக முடியாது என தலையாட்டியவன் அவனே ஊட்டி விட்டான்..அவளும் உண்ண..தன்னவனை அப்போதுதான் முழுமையாக பார்த்தாள் அவள்..தலை கலைந்து தாடியுடன் அந்த அழகிய கம்பீரம் இல்லாமல் துவண்டு போய் இருந்தான்..
"என்னால தானே ஹர்ஷி நீ இப்படி இருக்க?" என்று அவள் வருத்தப்பட..
"அப்படிலாம் ஒன்னுமில்ல.. எனக்கு டைம் கிடைக்கல..சரி வா போலாம் நரேன் ரொம்பநேரம் என்னை விட்டு இருக்க மாட்டான் நான் சொல்லிட்டு வரலைனா.. வாமா.." என்று அவளை கைதாங்கலாய் அழைத்து சென்றான்..
அவர்கள் போவதையே சந்தேகமாய் பார்த்துக்கொண்டு இருந்த அந்த டாக்டர் சாராவின் தந்தைக்கு ஃபோன் செய்ய.. அவர் எடுக்கவும் எல்லாம் கூற..
"ம்ம்.. நான் பார்த்துக்கறேன்" என்று மட்டும் கூறிவிட்டு வைததுவிட்டார்..
வீட்டுக்கு வந்ததும் அவனை தேடி நரேன் ஓடிவர..
அவனை தன்னை நோக்கி அழைத்தாள் சமி.. நின்று யோசித்தபடி அவன் ஹர்ஷாவை பார்க்க அவன் போ என்பது போல் சைகை காட்ட.. அவளிடம் சென்றவன்.. அவளது மேடிட்ட வயிற்றை பார்த்து..
"ஏன் உங்களுக்கு வயிறு இவ்ளோ பெருசா இருக்கு?" என்று கேட்க.. அவன் அருகில் மண்டியிட முயற்சிக்கவும் அவளை தாங்கியவன் அங்கிருந்த ஃசோபாவில் அமர வைத்து நரேனையும் அவள் அருகில் அமர வைத்தவன் அவனும் அமர்ந்து கொண்டான்..
"அது ஒன்னுமில்லடா கண்ணா வயித்துக்குள்ள குட்டி பாப்பா இருக்கா அதான் வயிறு பெருசா இருக்கு" என்று கூற அவளது ஸ்பரிசம் குழந்தைக்கு தன் தாயை அடையாளம் காட்டிவிட..
"என்னை விட்டு எங்கே போன சமி மா.. நீ இல்லாம அப்பா தூங்கவே இல்ல ஜானு" என்றான் தன் மழலையில்..