27. நீயே வாழ்க்கை என்பேன்

10 0 0
                                    

27.நீயே வாழ்க்கை என்பேன்

வீட்டிற்குள் ஹர்ஷா நுழைய அவனை பார்த்த கிருஷ்ணா
"வாடா மச்சி பூஜைலாம் ஓவரா..உர்ர்ர்ருனு வர்ற" என்று கேட்க.
"என்னடா பூஜை என்ன உலர்ர?" என்றான் ஹர்ஷா.
"இல்லடா அந்த லவ்வர்ட்டூ யாருனு தெரிஞ்சுக்க அவ்ளோ அவசரமா வந்தாளே சமி அதான் கேட்டேன்" என்று கேட்டபடி அவன் பின்னால் பார்க்க சமி கன்னத்தில் ஐந்து விரல்களும் பதிந்து கன்னம் வீங்கி இருந்ததை பார்த்தவன் அதிர்ந்தான்..
"டேய் என்னடா இது..யார் இவள அடிச்சது" என்று கேட்க
"நான்தான்" என்றான் ஹர்ஷா.
"ஏன்டா..நீ மனுஷனா இல்ல மிருகமா இப்படி அடிச்சு இருக்க" என்று கோவமாய் கத்த..
"போதும் நிறுத்துடா.. யாரோ இவளுக்கும் எனக்கும் பிரச்சனை வரனும்னே என் மொபைல எடுத்து லவ்வர்டூனு சேவ் பண்ணி வெச்சுட்டு இவ ஃபோன் எடுக்குற நேரமா பார்த்து பேசி இவள உசுப்பேத்தி விட்டு இருக்காங்க அதை நம்பி என்னை நேத்துல இருந்து பாடா படுத்தினா சரி யாரோ தெரிஞ்சவங்க தான் இப்படி விளையாடுறாங்க போல இவ புரிஞ்சுப்பானு பார்த்தா ஹாஸ்பிடலுக்கு வந்து அங்க நர்ஸ்ஸ கை நீட்டி அடிச்சு அந்த பொண்ணுகிட்ட பேச கூடாத வார்த்தைலாம் பேசி எவ்ளோ பெரிய அசிங்கத்தை தேடி கொடுத்திட்டா தெரியுமா?"  என்று கத்தினான் எல்லாம் கேட்டபடி அமைதியாய் அழுது கொண்டே இருந்தாள் சமி.
"டேய் அதுக்காக இப்படியா?" என்றான் கிருஷ்ணா.
"பின்ன என்னடா..மூச்சுக்கு முப்பதுமுறை என் புருஷன்னு நேத்து பேசினாலே அந்த புருஷன்மேல கொஞ்சமாச்சும் நம்பிக்கை இருந்தா இப்படி செய்வாளா? இத்தனை வருஷம்ல இவள விட்டு வேற எந்த பொண்ணை நான் பார்த்து இருப்பேன் அப்போ இதுதான் இவ புருஷன நம்புற லட்சணமா? அந்த பொண்ணு நல்ல பிள்ளையா இருக்க போய் அமைதியா போய்டுச்சு வேற யாராவது இவ சொல்றத நம்பி என்னை தப்பா நினைச்சா நான் இருந்து என்னடா பிரயோஜனம்.." என்றான் கலங்கியவனாய்..அவன் பேச்சில் திடுக்கிட்டு நிமிர்ந்த சமி அழுதுகொண்டே ரூமிற்குள் ஓடி விட்டாள்..இதை காண சகியாதவன் போல தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டான் ஹர்ஷா.
அவன் அருகில் வந்தவன்
" என்னை மன்னிச்சிடுடா" என்றான்
"நீ ஏன்டா மன்னிப்பு கேட்கிற?"
"இல்லடா அந்த நம்பர் நான்தான் செஞ்சேன்..உங்களை ஒன்னு சேர்க்க நான் ஏதோ செய்யப்போய் அதுவே உங்களுக்கு பிரச்சினை ஆகி போச்சுடா" என்றபடி கலங்க அவனை அதிர்ச்சியாய் பார்த்த ஹர்ஷா அவன் வருந்துவதை பார்த்தவன்
"விடுடா..நீ நல்லது தான் யோசிச்ச ஆனா அது இப்படி நடக்கனும்னு இருக்கு போல விடு..நான் பார்த்துக்கறேன்..இனிமேலாவது இந்த மாதிரி ஏதும் கிறுக்குத்தனம் செஞ்சு வெக்காம இரு..இப்போ அவள என்ன சொல்லி சமாதானம் செய்யனு தெரியலையே" என்று புலம்பினான் ஹர்ஷா.
"விடுடா கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்து இருக்கே"
"என்னடா சொல்ற? அவள நான் அடிச்சது உனக்கு நல்லதா தெரியுதா?"
"டேய் அத சொல்லலடா இத்தனை நாளா சமி உன்கூட நடந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டாளா இல்லையானு நீ மண்டைய பிச்சுகிட்டு இருந்த ஆனா நீ சொன்னியே அதை யோசிச்சியா?"
" என்ன சொன்னேன்?"
"அதான்டா நேத்து என்னோட கால் வந்ததும் சமிமா உன்னை மூச்சுக்கு முப்பது தடவை புருஷன்னு சொன்னதா சொன்னியே?" என்றான் கிருஷ்ணா
"அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?"
"டேய் மாங்கா..அவ உன்னோட இந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டா அவ மனசுல உன்மேல லவ் இருக்கு அதனால தான் அவ கோவப்பட்டு இருக்கா வேற ஒரு பொண்ணு உன்னை லவ் பன்றேன்னு சொல்லவும் என் புருஷன்கிற உரிமை அவளுக்கே தெரியாம அவ எடுத்துக்கிட்டா..அந்த லவ் தான் அந்த நர்ஸ்ஸ அடிக்கிற அளவுக்கு போய் இருக்கு..இது கூட புரிஞ்சுக்காம அவள அடிச்சு கன்னம் வீங்க வெச்சுட்டியே..போடா போய் அவளுக்கு மருந்து போட்டுட்டு சாப்பிட வெச்சு சமாதானம் செய்..வா முதல்ல நான்தான் அந்த நம்பர்னு சொல்லிடுறேன்" என்றபடி அவனை இழுக்க..
அவன் கரம் பற்றி நிறுத்தியவன்
"நிஜமா என்னை ஜானு லவ் பன்றானு சொல்றியா?"
"நடந்தது எல்லாம் யோசிச்சு பாரு..ஒரு பொருள நமக்கு ரொம்பவும் பிடிச்சா தான் பொஸ்ஸஸிவ்னஸ் வரும் அப்படி உன்மேல வந்து இருக்குனா அப்போ அது லவ்தானே" என்று கூறியபடி அவனை இழுத்துக்கொண்டு சென்றான் அறைக்குள்..
அவனை பார்த்ததும் யோசனையாய் பார்த்தவளிடம் நடந்த அனைத்தையும் கிருஷ் சொல்லிவிட தலை கவிழ்ந்து நின்றாள் சமி..
"நான் உங்களுக்குள்ள இருக்குற பாசத்தை வெளியே கொண்டு வர நினைச்சேன் சமி ஆனா அவன் அடிக்கிற அளவுக்கு போவான்னு எதிர் பார்க்கல..என்னை மன்னிச்சிடுமா..இரு உனக்கு சாப்பிட எடுத்து வர்றேன்" என்றவன் கிட்சனுக்கு சென்று இருவருக்கும் பழ ஜுஸ்ஸும் இட்லியும் கொண்டு வந்து ஹர்ஷாவிடம் நீட்ட அதை வாங்கியவன்..தயக்கமாய் அவனை பார்க்க..
"நரேனை அம்மாவே வெச்சுக்க சொல்லிட்டேன் நாளைக்கு ஈவ்னிங்தான் வருவாங்க..நீங்க பார்த்துக்கோங்க எனக்கு ஒரு கேஸ் விஷயமா போக வேண்டி இருக்கு நான் கிளம்பறேன்.." என்றுவிட்டு கிளம்பி விட்டான்..ஜுஸை வைத்தவன் இட்லியை பிட்டு அவள் வாயருகே கொண்டு செல்ல அவளோ கண்ணீரோடு அவனை பார்த்து  கண்களாலேயே அவனிடம் மன்னிப்பு கேட்டாள்..அவள் விழியில் தன் விழியை கலந்தவன்..
"நீ என்னை நம்பலையேனு தான் எனக்கு கோவம் வந்துடுச்சு ஜானு மத்தபடி நான் வேணும்னு அடிக்கலடி..மன்னிச்சிடுடி..ப்ளீஸ்..எனக்காக சாப்பிடுமா" என்றபடி ஊட்டிவிட வலியையும் மறந்து சாப்பிட்டவள் அவளும் கொஞ்சம் இட்லி எடுத்து அவனுக்கு ஊட்டிவிட
"என்மேல கோவம் இல்லையா?" என்று கேட்க
இல்லையென தலையாட்டியவள் அவனுக்கு நீட்ட சந்தோஷமாய் வாங்கியவன் காதலோடு அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டான்..
இத்தனை வருடங்களில் அவன் இதழ் முத்தம் இன்று ஏதோ வித்தியாசமான உணர்வை உணர முடிந்தது..அவள் உடல் முழுவதும் சிலிர்த்து கைகள் நடுங்கியது..அவளின் தவிப்பை உணர்ந்தவன் சிறு புன்னகையோடு விலகி அவள் கன்னத்திற்கு மருந்து போட்டு மாத்திரையை கொடுக்க அதை உண்டவளை அவள் அருகில் அமர்ந்து ஆதரவாய் தன் மீது சாய்த்துக்கொண்டான் அவளும் சாய்ந்துக்கொண்டு இருக்க..
"ரொம்ப வலிக்குதாடா" என்று கேட்க
"இல்ல..லேசா வலிக்குது..அடிக்குறதும் அடிச்சுட்டு கேட்கிறான் பாரு கேள்விய?" என்றாள் கோவமாக.
அதைக்கேட்டு சத்தமாக சிரித்தவன்..
"நீ அப்படி நடந்துக்கவும் கோவம் வந்து அடிச்சுட்டேன்டி சாரி ஜானு.." என்றபடி இதமாய் அவள் கன்னம் வருட அவன் தீண்டலில் ஏதோ உணர்ந்தவள் டக்கென அவனை விட்டு விலகினாள்..அவளை விநோதமாய் பார்த்தவன்..
"என்னடி என்ன ஆச்சு?" என்றான்
"ஒ..ஒன்னுமில்ல..நீ..நான் இங்கயே படுக்கிறேன்.." என்று திக்கி திணறி சொன்னவள் படபடப்பாய் நகர்ந்து படுத்துக்கொள்ள ஒன்றும் புரியாதவனாய் அவனும் படுத்துக்கொண்டு யோசிக்க..அப்போது தான் அவனுக்கு புரிந்தது தன் தொடுகை அவளுக்கு வேற மாதிரி உணர்வை தருவதை.. காதல் கொண்ட மனம் மகிழ அவனும் உறங்கிபோனான்...அடுத்த இடி ரெடியா வெச்சுட்டு வெயிட்டிங் ல இருக்காரு ஆண்டவர்.

நீயே வாழ்க்கை என்பேன்Donde viven las historias. Descúbrelo ahora