11.11... நீயே வாழ்க்கை என்பேன்
இப்படியே நாட்கள் செல்ல ஒரு முக்கியமான கான்ப்ரன்ஸ் விஷயமாக ஹர்ஷா யுரோப் செல்ல வேண்டி வர சமிக்கும் விகாஷினிக்கும் பிரசவ நேரம் நெருங்குவதால் அவனுக்கு செல்லவே மனமில்லாமல் சென்றான்..சமிக்க்ஷாதான் அவனை சமாதானம் செய்து அனுப்பிவைத்தாள்...அவன் சென்று இரு வாரங்களில் விகாஷினிக்கு பிரசவ வலி வர அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர்..அப்போது அவளுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது...ஆனால் அப்போது ஹர்ஷாவால் வர முடியவில்லை...
அடுத்த வாரம்தான் ப்ளைட் டிக்கெட் கிடைத்ததால் அவன் தங்கைக்கு ஃபோன் செய்து பேசினான்..
சமிக்கும் ஃபோன் செய்து பேசினான்...அவன் திரும்பி வரும் சமயம் சமிக்கு பிரசவ வலி வர அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்துள்ளதாக தகவல் அவனுக்கு அனுப்பினான் ஷியாம்..ஏர்ஃபோர்ட்டில் இருந்து இறங்கியவன் தகவல் கிடைத்ததும் உடனே ஹாஸ்பிடலுக்கு சென்றான்..ஷியாமும் சமியின் தாய் தந்தையரும் கவலையோடு இருக்க..என்னவென்று கேட்க..சுந்தரம் அவனிடம்
"ஆபரேஷன் பண்ணினாதான் குழந்தையை காப்பாத்த முடியும் சொல்லிட்டாங்க..ஆனா அவளோடது o- blood group உடனே கிடைக்கல..அதான் ஆபரேஷன்க்கு என்ன செய்யனு தெரியல..ஒரு டோனர் இருக்காரு ஆனா காஞ்சிபுரம்ல இருக்காராம் வர்றதுக்குள்ள ஆபரேஷன் முடிஞ்சுடும்...ஆபரேஷன்க்கு எவ்ளோ ப்ளட் தேவைபடும்னு தெரியல எங்ககிட்ட ஒரே பாட்டில் ரத்தம்தான் இருக்கு ஆபரேஷன்ல ரிஸ்க் ஆச்சுனா கஷ்டம் சொல்றாங்க.. இப்போ என்ன செய்யனு தெரியல" என்று ஷியாம் கூற யோசிக்காமல் உடனே ஹர்ஷா
"என்னோடதும் அதே blood group தான்..உடனே ஆபரேஷன் ஸ்டார்ட் பன்ன சொல்லுங்க" என்று கூற அவனை கட்டியணைத்தவன் உடனே ஆபரேஷன்க்கு ஏற்பாடு செய்ய ஹர்ஷா கொடுத்த ரத்தமே போதுமானதாய் இருக்க ஆபரேஷன் முடிந்து தாயும் சேயுமாய் வெளியே வந்தனர்..ரத்தம் கொடுத்தது பயணக்களைப்பு எல்லாம் ஒன்றாய்சேர அவளுக்கு ஒதுக்கி இருந்த அறையிலேயே குழந்தைக்காக இருந்த சிறிய கட்டிலில் படுத்து உறங்கி விட்டான்..ஹர்ஷா..
அவனை பார்த்த ஷியாமும்..அவன் உறங்கட்டும் என விட்டு விட..ஆபரேஷன் முடிந்த கையோடு குழந்தையை பேபி வார்டுக்கு மாற்றிவிட..யாரும் குழந்தையை பார்க்கவிடவில்லை ஷியாமை தவிர..அதன்பின் அரைமணி நேரம் கழித்து சமியை ஆபரேஷன் தியேட்டரில் இருந்து ரூமுக்கு மாற்ற..அதற்குள் ஹர்ஷாவை பார்த்த நர்ஸ் அவனை எழுப்ப முயல அவரை தடுத்த ஷியாம்..
"அவன் ஆல்ரெடி ஃப்ளைட் ட்ராவல் அப்புறம் ப்ளட் டொனேட் செஞ்சதுனு டையர்டா இருக்கான் so please don't disturb him.. நாங்க பார்த்துக்கறோம்" என்று கூற அந்த நர்ஸ்ஸும்..சரியென சமியை பெட்டில் படுக்க வைத்து ட்ரிப்ஸ் போட்டுவிட்டு
"பேபிய இவரை நம்பி எப்படி படுக்கவைக்க"என்று கேட்டார் நர்ஸ்..
"அவன் தூங்கிட்டா ரோபோ மாதிரி அசையவே மாட்டான்..நீங்க குழந்தையை படுக்க வைங்க" என்றான் ஷியாம்.
அவரும் சிரித்துக்கொண்டே குழந்தையை அவன் அருகில் படுக்க வைக்க அவன் உடல்சூட்டை உணர்ந்த பேபியோ அவனிடம் ஒண்டிக்கொண்டது..இதை பார்த்த அனைவரும் அமைதியாகவும் ஆச்சர்யமாகவும் பார்த்துக்கொண்டு இருந்தனர்...
"பார்த்தீங்களா அத்தை வந்தவுடன்..அவங்க அம்மாக்கு இஷ்டமான ஆள்கிட்டயே ஐக்கியம் ஆகிட்டான்..இவன்கூட இனி என்னை கண்டுக்க மாட்டான்போல.."என்று சிரித்துக்கொண்டு கூறினான் ஷியாம்..இவனது புரிதலை கண்டு மெச்சினார்கள் இருவரும்..
அதற்குள் ஹர்ஷாவின் அம்மாவிற்கு கால் செய்த ஷியாம்.. நடந்த அனைத்தையும் கூறி ஹர்ஷா வர லேட்டாகும் என சொல்ல..அவருக்கு கோவம் தலைக்கு ஏற தன் மகளிடம் அப்படியே புலம்பி தீர்த்தார்..
அம்மா சொன்ன அனைத்தையும் கேட்ட விகாஷினிக்கு கோவம் தலைக்கு ஏறியது..
"நான் பிள்ளைய பெத்து ஒரு வாரம் மேல ஆகுது..என்னை பார்க்க உடனே வரல..பிரசவம் அப்பவும் டிக்கெட் கிடைக்கலைனு சாக்கு சொன்னாரு..இப்போ அவளுக்கு மட்டும் பிரசவத்திற்கு போய் அவளுக்கு இரத்தமும் கொடுத்துட்டு அங்கேயே இருந்து அவளை பார்த்துட்டு வர ஆள் விட்டு தகவல் சொல்றாரோ அண்ணா..வரட்டும் இருக்கு அவருக்கு.." என்று கோவத்தில் கத்திக்கொண்டு இருந்தாள்..சரியென அவளை சமாதானம் செய்த அவள் தாய்..
"இப்போ எதுவும் கேட்காதேடி..அதுக்குனு நேரம் வரும் அப்போ பார்த்துக்கலாம்..சும்மாவே அந்த பொண்ணை எதுனா பேசினா உன் அண்ணன் எங்கனா போறேன்னு கிளம்பிடுவான்..இப்போ ஏதாவது ஆனா..அப்புறம் நம்ம நடுத்தெருவில் தான் நிக்கனும்..உன் புருஷன் வீட்டுக்கு கிளம்ப சொல்லிட்டானா என்ன செய்ய..எதுவா இருந்தாலும் யோசிச்சு தான் செய்யனும்..சொன்னது புரிஞ்சுதா..?" என்று அவளை சமாதானம் செய்தார்..இங்கே..
அப்போதுதான் உறக்கம் கலைந்து கண் விழித்தான் ஹர்ஷா..
அப்போது தான் உணர்ந்தான் தன் அருகில் ஏதோ ஒரு உணர்வை..திரும்பி பார்க்க..அவனை நெருங்கிய படி படுத்து இருந்தான் குழந்தை..அவன் திடுக்கிட்டு எழ முயல குழந்தையோ அழ ஆரம்பித்து விட்டது..சரியென சமாதானம் செய்ய அவன் படுத்ததும் அமைதியாகி விட இவன் புரியாமல் பார்க்க அங்கே அமைதியாய் உறங்கி கொண்டு இருந்தாள் சமிக்க்ஷா..அவளை பார்த்ததும் சற்று அமைதி ஆனவன்..
"அப்போ..இந்த பாப்பா ஜானுவோட பாப்பாவா?..அச்சோ குழந்தையை ஏதாவது நசுக்கிட போறோம்" என பதறி அவன் எழ முயல திரும்பவும் அழுதது குழந்தை..அவன் திரும்ப படுக்க அமைதியானது..இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ஷியாம் சிரித்தபடி அவன் அருகில் வந்தான்..
"டேய் அண்ணா நான் எழுந்தா பாப்பா அழுது..என்னடா செய்ய.."என்று பரிதாபமாய் கேட்க
"அவ கண்ணு முழிக்கிற வரைக்கும் சமாளிக்க வேண்டியது தான்"என்றபடி குழந்தையை தூக்கினான் ஷியாம்..
திரும்ப அழுதுகொண்டே இருந்தது குழந்தை..சமி யின் அப்பா அம்மா எல்லோரும் வாங்கி சமாதானம் செய்ய முயல..அழுகையை நிறுத்தவில்லை குழந்தை..ஹர்ஷாவை பார்த்த ஷியாம் அவனிடம் குழந்தையை கொடுக்க அவன் வாங்கியதும் அழுகை சற்று சமாதானம் ஆனது..
"அடேய் இதுலாம் ஓவரா இல்லையா உங்களுக்கு..அப்பா நான் என்கிட்டயே வர மாட்டேங்கிறான்..உங்கிட்ட மட்டும் இருக்கான்" என்று கூற
அவனது நிலையை உணர்ந்த ஹர்ஷா..
"எனக்கும் புரியலடா அண்ணா..இரு நீ வாங்கு" என்றபடி அவன் லாவகமாக குழந தையை ஷியாமிடம் நீட்ட அவன் வாங்கிய நேரம் அழாமல் இருந்தான் குழந்தை..
"ஓஓ..நீ வாங்கி கொடுத்தாதான் அமைதியா இருப்பாரோ..நீ ரிட்டன் போற வேலைலாம் மறந்துடுடா..இவன் கூடவே இருக்க வேண்டியது தான்.." என்றான் ஷியாம்..
"என்னடா அண்ணா குடும்பமா சேர்ந்து என்னை கொல்ல ப்ளான் பன்றீங்களா..அவகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறது பத்தலனு இவன்கிட்டயும் என்னை கோர்த்து விட்டுட்டு நீ தப்பிக்க பார்க்கறியா?" என்றான் ஹர்ஷா
அவன் அப்படி சொல்லவும்
"என்னடா சொன்ன எரும" என்ற அமைதியான குரல் வர..
சட்டென சிரித்து விட்டான் ஷியாம்.. பாவம் ஹர்ஷா..