இருசக்கர வாகனங்களைப் பார்க் செய்திருந்த இடத்தை நோக்கி நகர்ந்தாள் யாழினி. கையில் எடுத்திருந்த இரு சுடிதார்களை ஸ்கூட்டியில் வைத்துவிட்டு நகர்ந்தாள்.
உலக அழகி இல்லை என்றாலும் ஒரு குறையும் கூற முடியாத முகலட்ஷணம் அவளுக்கு.மாநிறமும்,அகன்ற புருவம்,அனைவரையும் தன்பால் ஈர்க்கும் கண்கள் என்று ஆடவர் விரும்பும் அழகியே அவள்.
வீட்டின் முன் வாகனம் நின்றது."யாழினி வந்துட்டியா!"என்றாள் தாய் பத்மா. "ஆமாம்மா! இன்னைக்கு மால் போனேன்மா.ரெண்டு டிரஸ் வாங்கிட்டு வந்தேன்." என்றாள் யாழினி.
"இன்னைக்கு ஆபீஸ்ல ஏதாவது விஷேஷமா?"என்று வினாவினாள்.
"ஒன்னும் இல்லமா, எப்பவும் போலதான் இருந்தது. ஏன் கேக்குறீங்க." என வினாவினாள் யாழினி.யாழினி ஒரு அரசு உடைமை வங்கியில் மனேஜராக பணி புரிகிறாள். "நாளைக்கு ஏதாவது முக்கியமான வேலை உனக்கு இருக்கா?"என்று பத்மா கேட்க, "இல்லமா, ஏன் கேக்குறீங்க?"என்று யாழினி கேட்டாள்.
"இல்லை, நாளைக்கு ஆபீஸ் லீவு போட முடியுமா? "என்று பத்மா தயங்கினாள்.
"ஏன்?" என்று கோபம் கலந்த சந்தேகத்துடன் வினாவினாள் யாழினி.
"இல்ல! நாளைக்கு உன்ன பொண்ணு பார்க்க வர சொல்லி இருக்கோம் "என்று தயங்கி நிற்க, "அம்மா " என்று சோர்வுடன் கத்தினாள் யாழினி.
"எவ்வளவு தடவ சொல்றது மா உனக்கு "என்று கத்தினாள். யாழினியின் கோபத்தில் சூடான பத்மா, "நீ என்னதான்டி மனசுல நெனச்சுகிட்டு இருக்க? கல்யாணம் வேண்டாம்! வேண்டாம்ன என்ன அர்த்தம்? " தாயின் கோபத்தை எதிர்ப்பார்க்காத யாழினி, சற்று தயங்கி "வேண்டாம்னு அர்த்தம் "என்று கூற மேலும் சூடாகினாள் பத்மா, "அதான் ஏன்னு கேட்கிறேன்? " யாழினி மௌனம் காத்தாள்.சற்று நேரம் பொறுமையாய் இருந்த பத்மா, "நீ என்ன சன்யாசமா போகபோற? உனக்கு 25 வயசாயிட்டு ஞாபகம் இருக்கா? " சற்று தயங்கிய யாழினி, "ஆமாம்மா எனக்கு இந்த கல்யாணத்துல எல்லாம் இஷ்டம் இல்ல. கடைசி வரை உங்ககூடவே இருந்துடறேன்மா ". சட்டென "சீ லூசு! வாய மூடு! என்ன பேச்சு பேசற? "என்று பத்மா பொறிய, யாழினி மௌனம் காத்தாள்.
பின்பு பத்மா "எனக்கு ஒன்னும் தெரியாது, நாளைக்கு அவுங்க வாராங்க. நீ வீட்டுல இருக்க அவ்வளவுதான்.இதுக்கு மேல உங்க அப்பாகிட்ட பேசிக்கோ"என்றாள். இதை கேட்ட யாழினி திருதிருவென்று முழித்தாள். அதற்கு மேல் பத்மா அங்கு நிற்காமல் சமையலறைகுள் புகுந்தாள்.
இது என்னுடைய முதல் கதை, ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
Editing credit goes to Srinidhisweety
If u enjoyed,vote me and give comments 😊😊😊😊
Thank u 4 reading
BYE🌟🌟🌟
YOU ARE READING
காதல் காற்று வீசும் நேரம்
ChickLit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.