கௌதம்
உல்லாசமாக மதுரையை நோக்கி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். (என்னவளை முதல் தடவையா ஃபர்சனலா மீட் பண்ணப் போறேன்.) . இன்னும் இருபது நாட்களில் மணவாழ்க்கைகுள் நுழையவிருக்கிற
றான். மாப்பிள்ளை பார்க்கும் படம் எல்லாம் முடிந்து இருவீட்டாரும் கல்யாண தேதியை ஒரு வாரம் முன் உறுதி செய்தனர். திருமணத்திற்கு எட்டு நாள் முன் இருவருக்கும் நிச்சயதார்த்தம்.இரண்டு நாள் முன் நடந்தது அவன் மனதில் ஓடிக் கொண்டிருக்க புன்னகைப் படற மதுரையை நோக்கி வண்டி நகர்ந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்.
கார்த்திக், "டேய் கௌதம் கம் ஆன்டா, இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா படலையா? எத்தனையோ மல்டி நெஷனல் டீலெல்லாம் ஒரே மீட்டிங்ல முடிச்சவன்டா நீ! இன்னைக்கு என்னன்னா, உனக்கு நிச்சயம் பண்ண பொண்ணு கிட்ட பேச பயமா இருக்கா?" என்று எரிச்சல் கலந்த நக்கலாக வெளியிட்டான். "டேய்! நானே கால் பண்ணவா வேண்டாமானு கன்ஃப்பூஸ்டா இருக்கேன் நீ வேற! " என்றுவிட்டு சிறிது நேர யோசனைக்குப் பின் கால் பட்டனை தொட்டான். சில கனங்களில், மறுப்புறத்தில், "ஹலோ! " "ஹலோ யா...ழினியா?" எனத் திக்கிய குரலில் கேட்டான். "ஆமா நீங்க? . "நான்...நான்....கௌதம்! " (சே ஏன் பயமா இருக்கு எனக்கு.) . "கௌ.....தம்" என சந்தேக குறலில் கேட்க (நீங்க யாருனு கேட்டா என்ன சொல்ல! உங்களுக்கும் எனக்கும் நிச்சயம் ஆயிருக்குன்னா.....!) சட்டென இணைப்பைத் துண்டித்தான். அவ்வளவு நேரம் அவனை அறியாமலேயே பிடித்திருந்த மூச்சை வெளியேற்றினான். அதைக் கண்ட கார்த்திக் தலையில் அடித்துக் கொண்டான்.
⭐⭐⭐வீட்டிற்கு முன் வண்டியை நிறுத்தியவன் , ஒரு பதட்ட பெருமூச்சுடன் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான். கதவு திறக்கும் வரை வெளியில் காத்திருந்தான். கண்கள் அகல பத்மா, "வாங்க...வாங்க.. உள்ள வாங்க!! " என்று கதவை அகல திறந்து கௌதமை உள்ளே அழைத்தாள் . புன்னகையுடன் வீட்டிற்குள் நுழைந்த கௌதம் ஹாலை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தான். "வாங்க.. உட்காருங்க! " என்று பதட்ட குரலில் பத்மா ஷோபாவை காட்ட,புன்னகையுடன் அதில் அமர்ந்தான் கௌதம். (கமான் கௌதம் நர்வஸ் ஆகாத) . "அது வந்து அத்... (ஒரு கனம் யோசித்தவன்) ஆன்ட்டி வெட்டிங் காட்ஸ கொடுக்க வந்தேன்" என்று பதட்டதை மறைத்து புன்னகையுடன் கூறினான்.

YOU ARE READING
காதல் காற்று வீசும் நேரம்
ChickLit"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.